செவ்வாய், 6 ஜூன், 2023

பொய் சொன்ன வேலைக்காரனுக்கு அக்பர் அளித்த தண்டனை

ஒரு நாள், வேலைக்காரன் ஒருவன் பேரரசர் அக்பரின் படுக்கையறையை சுத்தம் செய்துகொண்டிருக்கும் போது, அவ்வேலைக்காரன் கையிலிருந்து ஒரு குவளை விழுந்து உடைந்துவிட்டது. அது அக்பருக்கு மிகவும் பிடித்தமான குவளையாகும் என்பதால் வேலைக்காரன் பயந்து போனான். அவ்வேலைக்காரன்  உடைந்த குவளையின் எல்லா துண்டுகளையும் சேகரித்து இரகசியமாக வெளியில் கொண்டுசென்று எறிந்துவிட்டுவந்தான். அப்போது அக்பர் தன்னுடைய படுக்கையறைக்கு வந்துசேர்ந்தார் அப்போது, அவ்வறையில் தனக்குப் பிடித்தமான குவளை காணவில்லை என தெரிந்துகொண்டார் . உடன் அக்பர் அவ்வேலைக்காரனை அழைத்து அதைப் பற்றி கேட்டார் .அதனைதொடர்ந்து பயத்தால் வேலைக்காரன் , "நான் அந்த குவளையை சரியாக சுத்தம் செய்வதற்காக என் வீட்டிற்கு எடுத்துச் சென்றேன்" என பொய் சொல்லிவிட்டான். அதனால் அக்பர் அந்த அவ்வேலைக்காரணிடம் அவனுடைய வீட்டிற்கு சென்று அந்த குவளையை உடனடியாக தனது படுக்கைஅறைக்கு எடுத்துக்கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அவ்வாறு அக்பர் உத்தரவு இட்டதும், தன்னால் உண்மையை மறைக்க முடியாது என தெரிந்து கொண்ட, அவ்வேலைக் காரன் நடந்த அனைத்தையும் அக்பரிடம் கூறி, கைகூப்பி மன்னிப்பு கேட்க ஆரம்பித்தான். தன்னிடம் அவ்வாறு பொய் சொன்ன வேலைக்காரன் மீது அக்பர் அதிக கோபமடைந்தார். அதனால் உடனே அவ்வேலைக்காரனுக்கு மரண தண்டனை விதித்தார். அதனால் மேலும் பயந்து போன அவ்வேலைக் காரன் கைகளிரண்டையை கட்டிக்கொண்டு அக்பரிடம் தன்னை மன்னித்து விடும்படி மன்றாடி கேட்டுக்கொண்டே இருந்தான் ஆனால் அக்பர் அவனுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்த நாள், அக்பர் தனது அரசவையில் இந்த செய்தியை ஒரு விவாதப் பொருளாக ஆக்கி, "உங்களில் யாராவது பொய் சொன்னீர்களா?" என பொதுவவாக வினவினார் அரசவையிலிருந்த அனைத்து  உறுப்பினர்களும் ஒரே குரலில் தாங்கள் வாழ்நாளில் யாரும் பொய்கூறியதே இல்லையென மறுத்துவிட்டனர். அதனால் அக்பர் முதலில் நேரடியாக பீர்பாலிடம் அதைய கேட்டபோது, பீர்பால்  "அரசே, எல்லோரும் சில நேரங்களில் ஏதாவது ஒரு பொய் கண்டிப்பாக கூறிடுவார்கள். அதன்படி நானும் பொய்கூறியிருக்கிறேன். ஆயினும் அந்த பொய்யானது யாருக்கும் தீங்கு செய்யாதது எனில்  பொய் சொல்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்று நினைக்கிறேன்." என பதிலளித்தார், இதைக் கேட்டு மிகவும் கோபமடைந்த அக்பர் பீர்பாலை அரசவையிலிருந்து உடனடியாக வெளியேறிடுமாறு உத்திரவிட்டார். அக்பரின் உத்திரவின் படி பீர்பாலும் அரசவையிலிருந்து வெளியேறினார், ஆனால் வேலைக்காரனின் மரண தண்டனை குறித்து அவர் கவலைப் பட்டார். எனவே, வேலைக்காரணைக் காப்பாற்றுவதற்கான வழியை யோசிக்க ஆரம்பித்தார். அவவாறு ஆலோசித்தப் பிறகு, அவர் ஒரு பொற்கொல்லர் கடைக்குச் சென்று, தங்கத்தால் நெல் (அரிசியாக அரைக்கப்படாத நெல்) செய்யச் சொன்னார். மறுநாள் காலை பொற்கொல்லரும் பீர்பாலுக்கு அவர்கோரியவாறு தங்கத்தால் செய்யப்பட்ட நெல்லைக் கொடுத்தார். அந்த தங்க நெல்லை எடுத்துக்கொண்டு பீர்பால் அக்பரின் அரசவைக்குச் சென்றார். அரசவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகும் கூட பீர்பால் அரசவைக்குள் வருவதற்கான துணிச்சலைக் கண்டு அக்பர் அதிக கோபமடைந்தார். இருந்தபோதிலிரும் பீர்பால் அக்பரிடம் தங்க நெல்லைக் காட்டி, , "அரசே, நான் உங்களிடம் ஒரு முக்கியமான செய்தியொன்றை சொல்ல விரும்புகின்றேன், அதனால்தான் நான் இன்று அரசவைக்குள் உங்களுடைய உத்திரவை மீறி இங்கு வந்தேன். நேற்று மாலை, வீட்டிற்குச் செல்லும் போது, நான் ஒரு துறவியைச் சந்தித்தேன். அவர் இந்த தங்க நெல்லை என்னிடம் கொடுத்து, இதை ஏதாவது விளை நிலத்தில் விதைக்குமாறும் . இதை விதைத்தால் அந்த வயலில் பொன்நெல்லாக விளையும். என்றும் அறிவுரைவழங்கினார் நான் ஒரு வளமான நிலத்தைக் கண்டுபிடித்திருக்கின்றேன். அந்த வயலில்  இதனை விதைக்க எல்லா அரசவை உறுபபினர்களும் நீங்களும் வரவேண்டும் என நான் வேண்டி கேட்டுகொள்கிறேன் இந்த தங்க நெல்லை அவ்வயலில் விதைத்தால் தங்கநெல்லாக விளையும் எனஅத்துறவி சொன்னது உண்மையா இல்லையா என்பதை சரி பார்க்கலாம். ” என மிகநீண்ட விளக்கமளித்தார் அக்பரும்ஒப்புக்கொண்டார்,  அடுத்த நாள் காலைபத்துமணிக்கு அனைத்து அரசவைஉறுப்பினர்களையும் அந்த விளைநிலத்திற்குவந்துசேருமாறு கட்டளையிட்டார். அடுத்த நாள், அனைவரும் வயலிற்கு வந்துசேர்ந்ததும், அக்பர் பீர்பாலிடம் அந்த தங்க நெல்லை வயலில் விதைக்கச் சொன்னார். ஆனால் பீர்பால் மறுத்து, "அரசே இந்ததங்கநெல்லை என்னிடம் கொடுக்கும்போது, பொய் சொல்லாத ஒருவர் விதைத்தால்தான் தங்கநெல்லாக விளையும்  என்று துறவி எனக்கு அறிவுறுத்தினார். அதனால் என்னால் இதை விதைக்க முடியாது. தயவுசெய்து  இதை விதைப்பதற்கு அரசவையில் பொய்சொல்லாத ஒருவருக்கு உத்தரவிடுங்கள்.." எனக்கோரினார்  உடன் தன்னுடைய அரசவை உறுப்பினர்களில் பொய்சொல்லாத ஒருவர் வயலில் அந்த தங்கநெல்லை விதைக்குமாறு கோரினார், யாரும் முன்வரவில்லை. எல்லோரும் ஏதாவது ஒரு முறை பொய் சொல்லியிருப்பார்கள் என்பதை அக்பர் புரிந்து கொண்டார். யாரும் முன்வராத போது, பீர்பால் அந்த தங்கநெல்லை அக்பரின் கைகளில் கொடுத்து, "இங்கு யாரும் பொய்சொல்லாதவர்கள் யாருமேயே இல்லை . அதனால் நீங்கள்தான் இதை விதைக்க வேண்டும்.." என்றார். ஆனால் அக்பர் கூட அந்த தங்கநெல்லை  வயலில் விதைப்பதற்கு  தயங்கி, "நானும் சின்ன வயசுல பொய் சொல்லிஇருக்கின்றேன். அதனால் என்னாலும் இதை விதைக்கமுடியாது" என்றார். இதைக் கேட்ட பீர்பால் சிரித்துக்கொண்டே, "பொற்கொல்லனிடம் இருந்துதான்  இந்த தங்க நெல் எனக்கு கிடைத்தது. உலகில் உள்ளவர்கள் சிலநேரங்களில் பொய் சொல்கிறார்கள் என்பதை உங்களுக்குப் புரிய வைப்பதே எனது நோக்கம். யாருக்கும் தீங்கு செய்யாத பொய் பொய்யன்று" என்றார்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...