ஞாயிறு, 28 மே, 2023

வெற்று காகிதம் - முதிய துறவியும் புகழ்பெற்றஅறிஞரும்

 ஒருமுறை, நான்கு வேதங்களிலும் நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு புகழ்பெற்ற அறிஞர் ஒரு வயதான துறவியிடம் சென்று, "நான் வாழ்க்கையின் உண்மைதன்மையை அறிய விரும்புகிறேன், தயவுசெய்து எனக்கு வழிகாட்டுங்கள்" என்று கோரினார்.
உடன் அந்த வயதான துறவி , "நீங்கள் யார்?" என கேட்டபோது
அறிஞர், "என்னை உங்களுக்குத் தெரியாதா? நான் புனித நூல்கள் போன்ற பலவற்றையும் நன்கு கற்றறிந்தவன் அதனால்  இந்த நகரத்தில் எனக்குப் பெரும் புகழ் உண்டு  நான் பல வேதங்களை கற்றிருந்தாலும் இன்னும் வாழ்க்கையின் உண்மைதன்மையை என்னால்  கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த உண்மைதன்மையைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் நான் உங்களிடம் வந்தேன்." என அவர் கூறினார்
முதிய துறவி , "அப்படியா மிக்கநல்லது நீங்கள் உங்களுக்குத் தெரிந்ததை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொண்டு வருகிறீர்களா, ஏனென்றால் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவற்றினை திரும்பவும் நான் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. உங்களுக்குத் தெரியாத செய்திகளை மட்டுமே நாம் விவாதித்தால் நான் கற்றுக்கொடுத்தால்  மட்டுமே அது உங்களுக்கு நல்லது." என அறிவுரைக்கூறினார்
அதனை தொடர்ந்து அவ்வறிஞர் உடன் தன்னுடைய இருப்பிடத்திறகு திரும்பி வந்து தனக்கு தெரிந்தவற்றை தான் கற்றுக்கொண்டவற்றை எழுதத் தொடங்கினார். அவற்றை முழுமையாக எழுதும்போது மூன்று வருடங்கள் கழிந்தன அவ்வளவு அறிவு அவருக்கு இருந்தது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவ்வறிஞர் ஆயிரக்கணக்கான பக்கங்கள் நிரப்பப்பட்ட பெரியபையுடன் அம்முதிய துறவியை காண திரும்பவும்சென்றார்.
அவ்வளவு அதிக பக்கங்களின் குவியலைகண்டஅம்முதிய துறவி, "இந்த வயதில் என்னால் இவ்வளவையும் படிக்க முடியாது. இதை இன்னும் சுருக்கிஎழுதிகொண்டுவாருங்கள்" என்றார்.
அவ்வறிஞர் திரும்பி சென்று முன்னர் எழுதியவைகளை சுருக்கமாக எழுதத் தொடங்கினார். அதற்கு மூன்று மாதங்கள் பிடித்தன.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவ்வறிஞர் மீண்டும் அம்முதியதுறவியிடம் சென்றார். இம்முறை அவ்வறிஞரிடம் மிகக் குறைவான பக்கங்களே இருந்தன, ஆனால் அவையும் நூறு பக்கங்களின்அளவு இருந்தன.
அவ்வயதான துறவி, "இதுவும் அதிகமாகும். என்னுடைய உடல் பலவீனமாகிவிட்டது. கண்கள் பலவீனமாகிவிட்டன, இவ்வளவு படிக்கக்கூட முடியாது. இவைகளின் சுருக்கமான சாராம்சத்தை மட்டும் என்னிடம் கொண்டு வாருங்கள்." எனக்கூறினார்
அவ்வறிஞர் திரும்பிச் சென்று ஏழு நாட்களுக்குப் பிறகு சில பக்கங்களாகத் தனது அறிவின் சாராம்சத்தை  எழுதி கொண்டுவந்தார்.
அவ்வயதான துறவி அதைக் கண்டு, "உங்களுக்குத் தெரியும் எனக்குமிக வயதாகிவிட்டது, அதிகம் படிக்கமுடியாது.  அதை இன்னும் சுருக்கமாகச் சொல்லுங்கள்" என்றார்.
அதைக் கேட்ட அவ்வறிஞருக்கு, அம்முதியதுறவி என்ன சொல்ல முயல்கின்றார் என்பது புரிந்தது, எனவே அவ்வறிஞர் உடனடியாக வேறொரு அறைக்குச் சென்று ஒரு வெற்றுக் காகிதத்தைக் கொண்டு வந்தார்.
அதைப் பார்த்து முதிய துறவி சிரித்துகொண்டே, "இந்த வெற்றுக் காகிதம் என்றால் நான் வெறுமையாக இருக்கிறேன், முற்றிலும் காலியாக இருக்கிறேன் என்று அர்த்தமாகும்.. இப்போது நீங்கள் புதிய செய்திகளை கருத்துகளை தெரிந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும் தகுதி பெற்றுள்ளீர்கள், ஏனென்றால் இப்போது உங்களுக்கு எதுவும் தெரியாது என்ற அடிப்படையை நீங்கள் புரிந்து கொண்டீர்கள்." என அறிவுரை கூறி தன்னுடைய  கருத்துகளை கூறத்துவங்கினார்


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...