சனி, 20 மே, 2023

அரசனின் ஆணையும் அமைச்சரின் ஆலோசனையும் -

 முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் ஒருமுறை, குறிப்பிட்ட ஒரு நபரின் முகத்தை காலையில் முதன்முதலாக பார்ப்பதால் ஏற்படுகின்ற ஆபத்து ,மோசமானஅன்றைய நிலை ஆகியவற்றினால் மிகப் பிரபலமானார் .அதனால் அவ்வூர் பொதுமக்கள் அனைவரும் காலையில் அக்குறிப்பிட்ட நபரை முதன்முதலில் காண்பதற்கே அஞ்சினர்  அதனை தொடர்ந்த அவ்வூர்  மக்கள் அனைவரும் சேர்ந்து அவரைப் பற்றி அந்நாட்டு அரசரிடம் புகார் செய்தனர்.
ஆயினும் இந்த செய்தியை அந்நாட்டு அரசன்  நம்பவில்லை, எனவே அரசன் அதை தானே சரிபார்க்க முடிவு செய்தார். அதனால் ஒரு நாள், அரசன் அந்த நபரை தனது அரண்மனைக்கு அழைத்து, அவருக்கு தன்னுடைய அரண்மலையில் ஒருநாள் இரவு தங்க இடம் கொடுத்தார்.
அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன் தான் செய்யவேண்டியபணியை துவங்குவதற்கு முன் அரசன் அந்த நபரைச் சந்திக்க முடிவு செய்து  அரசன் அக்குறிப்பிட்ட நபரின் முகத்தினை முதன்முதலில்ப் பார்த்தார். தொடர்ந்து அவ்வரசன் தன்னுடைய வழக்கமான பணிகளை செய்யத்துவங்கினார்
தற்செயலாக, அன்று கால அட்டவணையின் படி அரசன் தன்னுடைய பல்வேறு பணிகளை உடனடியாக முடிக்கவேண்டியிருந்ததால் அதிகவேலைபளு காரணமாக, அரசனால் அந்த நாள் முழுவதும் சாப்பிட நேரம் கிடைக்கவில்லை. எனவே, அந்த மனிதனின் முகம் உண்மையில் மோசமானது என்ற முடிவுக்கு மன்னர் வந்தார்.
எனவே, அரசன் அன்றை யநாள்முடிவில் அந்த மனிதனுக்கு மரண தண்டனை விதித்தார்.
மறுநாள் அந்நாட்டி்ன் அமைச்சர் ஒருவர் அரசனின் இந்த உத்தரவைப் பற்றி கேள்விப்பட்டு உடனடியாக மன்னரிடம் சென்று, "இந்த நிரபராதிக்கு ஏன் மரண தண்டனை விதிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு மன்னன், "அமைச்சரே, நான் நேற்று . காலையில் என்னுடைய வழக்கமான அனைத்து பணிகளையும் துவங்குவதற்கு முன்இவரின் முகத்தைப் பார்த்ததனால், ஒரு நாள் முழுவதும் உணவு உண்ணக்கூட முடியவில்லை" என்றார்.
அதற்கு அமைச்சர், "அரசே! அந்த மனிதனின் முகத்தைநீங்கள் முதன் முதலாகப் பார்த்தீர்கள், அதனால் ஒரு நாள் முழுவதும் உங்களாால் உணவு உண்ணமுடியவில்லை, ஆனால் அந்த மனிதனைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். நேற்று காலையில் அந்த நபர் முதன் முதலில் பார்த்தது உங்கள் முகத்தைத்தான், அதனால் அவர் இன்று மரண தண்டனையைப் பெற்றார். இப்போது யாருடைய முகத்தை காண்பது மோசமானது ஆபத்தானது என நீங்களே முடிவு செய்யுங்கள். ." என க்கூறினார்
அமைச்சரின் இந்த விளக்கத்தைக் கேட்ட அரசன், இவ்வாறு சிந்தித்துப் பார்க்காததால் திடுக்கிட்டார்.
தொடர்ந்து அமைச்சர், "அரசே! எந்த ஒரு நபரின் முகத்தினையும் முதன்முதலாக பார்ப்பதும் மேசமானதும் ஆபத்தானதும்  இல்லை, நாம் பார்க்கும் அல்லது நினைக்கும் விதம்தான் அவ்வாறாக இருக்கின்றது. அதனால் தயவு செய்து அவரை விடுவித்து விடுங்கள்" என்ற கோரிக்கைய வைத்தார்.
அரசன்  அமைச்சர்ரி கூறிய செய்தியை புரிந்துகொண்டு உடன் அந்த நபருக்கு விதித்த மரணதண்டனையிலிருந்து அவரைவிடுவித்தார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...