சனி, 10 அக்டோபர், 2020

கடின உழைப்பிற்காக பாராட்டுதல்

 
கல்வியில் சிறந்த விளங்கிய ஒரு இளைஞர் ஒரு பெரிய நிறுவனத்தில் நிருவாக பதவியான அலுவலக மேலாளர் பணிக்கு விண்ணப்பித்தார். அவரை நேர்காணலிற்கு அழைப்பதற்காக அவருடைய விண்ணப்பத்தை சரிபார்த்திடும் போது அவ்விளைஞர் மேல்நிலைப் பள்ளி முதல் முதுகலை கல்வி வரை, எந்த வருடத்திலும் மதிப்பெண் குறைவாக பெறாமல் அதிகமதிப் பெண்களுடனே கல்விகற்று முடித்தது தெரியவந்தது மேலும் அவ்விளைஞர் கல்விகற்கும் போது மிகச்சிறந்த சாதனைகள் பல புரிந்திருந்ததும் எல்லா வழிகளிலும் மிகச்சிறப்பாக வெற்றிபெற்று வந்திருந்ததும் தெரியவந்தது. அந்நிறுவனத்தின் பணியாளர் களை தெரிவுசெய்வதில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நிருவாக இயக்குநர் அவ்விளைஞரை நேர்காணலிற்காக அழைத்திருந்தார் அந்நேர்காணலின்போது நிருவாக இயக்குநர் "நீங்கள் கல்வி நிறுவனத்தில் பயிலும்போது அதற்காக உதவித்தொகை ஏதேனும் பெற்றீர்களா?" என வினவியபோது அவ்விளைஞர் “இல்லை ஐயா! நான் உதவித்தொகை எதுவும் பெறாமல் பயின்று வெற்றி பெற்றேன் ஐயா !” என்று பதிலளித்தனர். அதனை தொடர்ந்து "நீங்கள் கல்வி பயிலுவதற்காக உங்களுடைய பள்ளி கட்டணத்தை உங்களுடைய தந்தை செலுத்தினாரா?" என அந்நிருவாக இயக்குனர் கேட்டார். அதற்கு அவ்விளைஞர் "இல்லை ஐயா ! நான் ஒரு வயதாக இருந்தபோது என் தந்தை காலமானார், அதனால் என்னுடைய பள்ளி கல்லூரி ஆகியவற்றின் கட்டணங்கள் அனைத்தையும் செலுத்தியது என் அம்மா தான்" என பதிலளித்தார்,
தொடர்ந்து அந்நிருவாக இயக்குனர் " உங்களுடைய அம்மா எங்கே பணி செய்துவருகின்றார்?" என வினவியபோது அவ்விளைஞர், “என்னுடைய அம்மா பொதுமக்களின் துணிகளை துவைத்து வழங்கிடும் பணி செய்து வருகின்றார் அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு நான் கல்வி பயிலு வதற்கான கட்டணங்களை செலுத்துவந்தார் ” என பதில் கூறினார்
உடன் நிருவாக இயக்குனர் அந்த இளைஞனின் இரு கைகளையும் காட்டுமாறு க் கேட்டுக்கொண்டார். அவ்விளைஞர் தன்னுடைய மென்மையான இரு கைகளையும் நிருவாக இயக்குநரின் பார்வைக்கு நீட்டி காட்டியபோது நிருவாக இயக்குநர் "நீங்கள் எப்போதாவது உங்களுடைய அம்மா பொதுமக்களின் துணிகளை துவைக்கும் போது அந்த பணியைசெய்வதற்காக உங்களுடைய அம்மாவிற்கு உதவியிருக்கிறீர்களா?" என வினவினார் , அவ்வி ளைஞர், “ஒருபோதும்,அந்த பணியைசெய்ய என்னுடைய அம்மா என்னை விடுவதில்லை ஐயா ! நான் உயர்கல்வி வரை நன்கு கல்வி கற்று வெற்றி பெற வேண்டும் என்று என் அம்மா எப்போதும் விரும்பினார்ஐயா !. மேலும், என்னுடைய அம்மா என்னை விட வேகமாக துணிகளைதுவைத்திடுவார் ”. என பதில் கூறியதைதொடர்ந்து
அந்நிருவாகஇயக்குனர், “அவ்வாறாயின் . இன்று நீங்கள் உங்களுடைய வீட்டிற்கு திரும்பிச் சென்று உங்களுடைய தாயின் இருகைகளையும் சுத்தம் செய்திடுக, பின்னர் நாளை காலை இங்கு வந்து என்னைப் பார்த்திடுக ”. எனவிடை கொடுத்தனுப்பினார்
அந்நிறவனத்தில் தனக்கு பணி கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக அவ்விளைஞர் உணர்ந்தார். அதனால் மிக மகிழ்ச்சியுடன் தங்களுடைய வீட்டிற்கு திரும்பிச் சென்று தன்னுடைய தாயின் கைகளை சுத்தம் செய்யஅனுமதிக்குமாறு தனது தாயிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது தாயார் தன்னுடைய மகன் இவ்வாறு அனுமதி கேட்பதை மிகவிசித்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்ந்தார், அவ்வாறான கலவையான உணர்வுகளுடன், தன்னுடைய மகனிடம் தனது இரு கைகளையும் நீட்டி காட்டினார். அவ்விளைஞர் தனது தாயின் இருகைகளை தண்ணீரால் மெதுவாக கழுவினார். அவ்வாறு தனது தாயின் கைகளை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தபோது அவ்விருகைகளும் மிகவும் சுருக்கம் சுருக்கமாகவும் மேலும் காயங்கள் பல ஏற்பட்டு அவை ஆறிய பின்னர் பல்வேறு வடுக்களினால் கரடுமுரடாகவும் இருப்பதை முதல் முறையாக கவனித்தார் அதனால் அவர் மிகவும் வேதனையாக தன்னுடைய கைகளால் தாயின் இருஉள்ளங்கைகளை தண்ணீரால் கழுவிய போது அவரது கண்ணீரும் அவரது தாயாரின் கைகளில் விழுந்தது
தன்னுடைய தாயாரின் இந்த இரு கைகள்தான் தினமும் பொதுமக்களின் துணிகளை துவைத்து வந்தன மேலும் தன்னுடைய பள்ளி கல்லூரி கட்டணங்களை செலுத்த உதவின என அவ்விளைஞர் முதல் முறையாக மிகவருத்தத்துடன் உணர்ந்தார் . தன்னுடைய தாயின் கைகளில் உள்ள காயங்களும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் தன்னுடைய பட்டப்படிப்பு, கல்விசார்ந்த சிறப்புகள், ஆகியவைகளுடன் தன்னுடைய எதிர்காலத்திற்காக செலுத்த வேண்டிய விலையாகவும் இருப்பதை என எண்ணி அவ்விளைஞரின் மனம் துடிதுடித்தது . தனது தாயின் கைகளை சுத்தம் செய்தபின், அவ்விளைஞர். அன்றைய மீதமுள்ள துணிகளை துவைக்கும் பணியை தன்னுடைய தாய் செய்வதற்கு பதிலாக தானேசெய்து முடித்தார். அன்று இரவு, தாயும் மகனும் மிக நீண்ட நேரம் தங்களுடைய வாழ்க்கையின் நிகழ்வுகள் குறித்து விவாதித்தார்கள். அடுத்த நாள் காலை, இளைஞர் நிருவாகஇயக்குநரின் அலுவலகத்திற்குச் சென்றார்.
நிருவாகஇயக்குநரை கண்டவுடன் அவ்விளைஞரின் கண்களில் தாரையாக கண்ணீர் விடுவதை நிருவாக இயக்குனர் கவனித்தார். "உங்களுடைய வீட்டில் நேற்று என்ன நடந்தது அதன் காரணாக நீங்கள்என்ன, கற்றுக்கொண்டீர்கள் என்று சொல்ல முடியுமா?" என நிருவாகஇயக்குநர் வினவினார் அதற்கு அவ்விளைஞர், “நான் என்னுடைய அம்மாவின் கைகளை சுத்தம் செய்ததோடு மட்டுமல்லாமல், மீதமுள்ள துணிகளை துவைத்திடும் பணியை நானே செய்தேன்”. என பதில் கூறினார் அதனை தொடர்ந்து அந்நிருவாகஇயக்குனர் , "தயவுசெய்து அப்போது எழுந்த உங்களுடைய உணர்வுகளை கூறுங்கள்" என கோரியபோது .
அவ்விளைஞர், “ 1,முதலில் கடின உழைப்பினை பாராட்டுவது என்றால் என்னவென்று நான் தெரிந்து கொண்டேன் அதாவது . என்னுடைய அம்மா இல்லாமல், நான் இன்று இந்த அளவிற்கு வெற்றிகரமாக கல்வி கற்று இருக்க முடியாது என்பதை தெரிந்துகொண்டேன். 2, இரண்டாவது ஒன்றாகஇணைந்து பணி செய்வதன் மூலம்,அதாவது என்னுடைய அம்மாவிற்கு உதவுவதன் மூலம், எந்தவொரு பணையையும் தனியாக செய்வது எவ்வளவு கடினமானது என்பதை இப்போதுதான் உணருகிறேன். 3.மூன்றாவதாக, குடும்ப உறவினரின் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் பாராட்டவேண்டும் என தெரிந்து கொண்டேன் ”. எனக்கூறினார்
நிருவாக இயக்குனர், “இதைத்தான் நான் எனது மேலாளராக வருபவரிடம் எதிர்பார்க்கிறேன். மற்றவர்கள் செய்திடும் பணியைப் பாராட்டக்கூடிய , பணியாற்றும் போது ஏற்டும் துன்பங்களை அறிந்த , வாழ்க்கையில்பணத்தை மட்டுமே தனது ஒரே இலக்காக கொள்ளாத ஒரு நபரை மேலாளராக நியமிக்க விரும்பு கிறேன். நீங்கள் இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் நாளைமுதல் இந்த பணியில் சேரலாம் " என கூறினார் . அதன்பின்னர் அந்நிறுவனத்தில் அவ்விளைஞர் அந்த பணியில் சேர்ந்து மிகவும் கடினமாக உழைத்தார், பிற்காலத்தில் அந்த இளைஞரின் கீழ் பணிபுரிபவர்களின் மதிப்பையும் மரியாதையைப் பெற்றார். ஒவ்வொரு பணியாளரும் விடாமுயற்சியுடனும் ஒரு குழுவாகவும் ஒருங்கிணைந்து பணியாற்றிடுமாறு செய்து. அந்நிறுவனத்தின் செயல்திறன் மிகவும் மேம்படுவதற்காக பாடுபட்டார்.
நீதி: ஒருவர் தங்களின் அன்புக்குரியவர்கள் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பினை தமக்கு வழங்குவதற்கு எடுக்கும் சிரமத்தை புரிந்துகொண்டு மதிக்க கற்றுகொள்ளவேண்டும் . மிக முக்கியமான செய்தி என்னவென்றால், நாம் வாழ்க்கையில் வெற்றிகரமாக முன்னேற்றம் அடைந்ததற்கு பின்னால் அதற்காக கடின உழைப்பை வழங்கியவரை மதிக்க கற்றுக்கொள்வதுதான்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...