சனி, 7 நவம்பர், 2020
ஒரு போர்வீரனின் கதை
வியட்நாம் நாட்டுடனான போரில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்த கொண்டிருந்த ஒரு போர்வீரன் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து தனது பெற்றோரை தொலைபேசியில் அழைத்தார். “அம்மா! அப்பா!, நான் இப்போது வியட்நாம் நாட்டுடனான போர்முடிந்து நமது வீட்டிற்கு திரும்பிவந்து கொண்டிருக்கின்றேன், ஆனாலும் உங்களிடம் ஒரு கோரிக்கை ஒன்று உள்ளது. அதை நிறைவேற்றுவீர்களா ?." என தன்னுடைய பெற்றோரிடம் கோரியபோது,அவனது பெற்றோர்கள் “மகனே! நன்றாக இருக்கின்றாயா உன்னுடைய கோரிக்கையை கூறு நாங்கள் கண்டிப்பாக நிறைவேற்றிடுவோம்." என உறுதி அளித்தார்கள் . அதனை தொடர்ந்து “ அதாவது , என்னுடன் சக போர்வீரர் நண்பர் ஒருவரை நம்முடைய வீட்டிற்கு அழைத்து வர விரும்புகின்றேன். " என அந்த போர்வீரன் கூறினான். உடன் அந்த போர்வீரனுடைய பெற்றோர்கள்,“மகனே ! கண்டிப்பாக நாங்கள் அவரை சந்திக்க விரும்புகிறோம்" என பதிலளித்தனர். தொடர்ந்து “ஆனாலும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது,” என்று அவர்களுடைய மகன் கூறியபோது ,“அந்த செய்தி என்னவென்று கூறு மகனே !" என மிகஆவலுடன் பதிலளித்தனர். “நடந்துமுடிந்த வியட்நாம் போரில் நண்பர் மிகவும் மோசமாக காயமடைந்து ஒரு காலையும் ஒரு கையையும் இழந்து விட்டார் .அதனால் நம்மை போன்று அவரால் நன்றாக நடக்கவும் வாழவும் முடியாது. அவர் வேறு எங்கும் செல்லவிரும்பவில்லை, அதனால் அவர் நம்முடன் வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ”எனக்கூறினார். அதனை தொடர்ந்து “அவருடைய இந்த நிலையை கண்டு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்மகனே! இருந்தபோதிலும், அவர் வேறு எங்காவது அனாதைகள் இல்லத்தில் வாழலாம் அல்லவா! ” என அந்த போர்வீரனின் பெற்றோர்கள் பதில் கூறியபோது அவர்களுடைய மகன் "இல்லை!இல்லை! அவர் நம்முடன் நம்முடைய வீட்டில் மட்டுமே வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."என பிடிவாதமாக கூறியபோது “மகனே!, நீ என்ன கேட்கின்றாய் என்று உனக்குத் தெரியாது. அத்தகைய ஊனமுற்ற ஒருவர் நம்முடன் இருக்க அனுமதித்தால் அவர் நமக்கு பயங்கர சுமையாக இருப்பார்.நாம் வாழ்வதற்கு நம்முடைய சொந்த வாழ்க்கை இருக்கிறது, இதுபோன்று தேவையில்லாத சுமைஒன்றை தூக்கிகொண்டு செல்லுமாறான நிலைக்கு அனுமதிக்க முடியாது. நீ மட்டும் நம்முடைய வீட்டிற்கு வந்து சேர் உன்னுடைய நன்பரை மறந்துவிடு. உன்னுடைய நண்பர் தான் சுயமாக வாழ அவரே ஏதாவது ஒரு வழியைக் கண்டு பிடிப்பார். ” என மறுத்து பேசினர் .அதனை தொடர்ந்து அவர்களுடைய மகன் தொலைபேசியை பாதியில் வைத்துவிட்டான். அவர்களுடைய மகனிடமிருந்து வேறு எந்த தகவலும் அந்த போர்வீரனின் பெற்றோர்களுக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், ஒருசில நாட்களுக்குப் பிறகு, அந்த போர்வீரனின் பெற்றோர்களுக்கு சான் பிரான்சிஸ்கோ போலீசாரிடமிருந்து அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பின்போது அவர்களது மகன் ஒரு கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டான் என்ற தகவல் அவர்களிடம் கூறப்பட்டது. இது ஒரு தற்கொலை என்று போலீசார் நம்பினர். அந்த பெற்றோர்கள் சான் பிரான்சிஸ்கோவிற்கு மிகவும் மனவருத்ததுடன் விரைந்து சென்றனர் அங்கு அவர்களுடைய மகனின் உடலை அடையாளம் காண அந்நகர சவக்கிடங்கிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்நகர சவக்கிடங்கில் தங்களுடைய மகனை அடையாளம் கண்டுகொண்டனர், ஆனால் அவர்களின் மகனுக்கு ஒரு கையும் ஒரு காலும் மட்டுமே இருந்தன. என்ற அவர்கள் அறியாத ஒன்றையும் கண்டுபிடித்தனர், அதனை தொடர்ந்து அதிக மனவருத்தத்துடன் “ஐயய்யோ! தன்னுடைய உடல் குறையை மறைத்து உடல் குறைபாடுடை தன்னுடைய நண்பனசேர்ந்து வாழ அனுமதிகோட்டதை மறுத்துவிட்டோமே!" என அந்த போர்வீரனின் பெற்றோர்கள் அழுது புரண்டனர் .
நீதி : இந்த கதையில் வரும் பெற்றோர்களை போன்றே நம்மில் பலரும் வாழ்ந்துவருகின்றோம். அதாவது உடல் குறையில்லாத சகமனிதர்களிடம் நாம் அன்புசெலுத்தவிழைவோம் , ஆனால் உடல் குறையுடன் நமக்கு சிரமத்தை ஏற்படுத்தும் அல்லது நமக்கு சங்கடத்தை உருவாக்கும் நபர்களை நாம் ஒருபோதும் அன்பு செலுத்த விரும்புவதில்லை. அதாவது உடல்குறையுள்ளவர் களிடமிருந்து நாம் விலகி இருப்போம். அதாவாது இவ்வாறானவர்கள் நமக்கு சுமையாக இருப்பார்கள் என நினைத்து அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழவிரும்புவோம்ஆனாலும் அவ்வாறானவர்களிடம் அன்பு செலுத்தவும் சகமனிதர்கள் போன்று அரவணைத்து செல்லவும் வேண்டும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக