சனி, 14 நவம்பர், 2020

நிர்வாகத்திற்கு அவர்களின் பணியாளர்கள் அனைவருடைய அடையாளமும் தெரியுமா?

ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உற்பத்தி சரியாக நடைபெறுகின்றதா தொழிலாளர்கள் அனைவரும் விழிப்புடன் பணிபுரிகின்றனரா என ஆய்வு செய்வதற்காக தங்களுடைய தொழிற்சாலைக்குள் பார்வை யிட்டு கொண்டே சென்றபோது, ஒரு இளைஞன் மட்டும், பணி எதுவும் செய்யாமல் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு வெட்டியாக பொழுது போக்குவதைக் கவனித்தார் . உடன் அந்த இளைஞனை அருகில் அழைத்து , "நீங்கள் மாதம் ஒன்றிற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள்?" என நிருவாக இயக்குநர் வினவினார் . அந்நிறுவனத்தின் நிருவாக இயக்குநர் தன்னிடம் இது போன்ற தனிப்பட்ட கேள்வி கேட்கப்பட்டதில் அந்த இளைஞன் மிகவும் ஆச்சரியப்பட்டான், இருந்தபோதிலும் , "ஐயா! நான் ஒரு மாதத்திற்கு ரூ.20000.00 சம்பாதிக்கிறேன், ஐயா! என்னிடம் ஏன் அவ்வாறு கேட்கின்றீர்கள்? ஐயா !" என அந்த இளைஞன் பதிலுக்கு அவரிடம் வினவினான். உடன் நிருவாக இயக்குநர் பதிலேதும் சொல்லாமல், தனது பணப்பையிலிருந்து ரூ.60000.00 பணத்தை எடுத்து எண்ணிக்கை செய்து அந்த இளைஞனிடம் கொடுத்து, "இங்கே தொழிற்சாலையில் பணி செய்வதற்காக மட்டுமே தொழிலாளர்களுக்கு சம்பளம் தருகிறேன், வெட்டியாக பணிஎதுவும் செய்திடாமல் பொழுது போக்குவதற்காக அல்ல! இதோ உங்களுடைய 3 மாத சம்பளம், வாங்கி கொண்டு இப்போதே நீங்கள் இந்த தொழிற்சாலையில் விட்டு வெளியில் செல்லலாம் நாளைமுதல் நீங்கள் இங்கு பணிசெய்வதற்காக திரும்பி வர வேண்டாம் ".என க்கூறி அந்த இளைஞனை விரட்டினார் அதனை தொடர்ந்து அந்த இளைஞனும் தொழிற்சாலையிலிருந்து விரைவாக வெளியேறிச் சென்றான். பின்னர் அந்த தொழிற்சாலையின் நிருவாக இயக்குநர் அருகில் நின்றுகொண்டிருந்த ஒருசில பணியாளர்களிடம் , "இதே செயல் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் உங்கள் அனைவருக்கும் பொருந்தும்".என்று மிகவும் கோபத்துடன் கூறினார் அதன் பின்னர் அங்குஇருந்த தொழிலாளர்களில் ஒருவரை அழைத்து, "நான் இப்போது பணியை விட்டு வெளியேற்றிய இளைஞன் யார்?" என வினவினார் அதற்கு அந்த தொழிலாளியிடமிருந்து - "அந்த இளைஞன் தேநீர் இடைவேளையில் தொழிலாளர் அனைவருக்கும் தேநீர் வழங்கிடுபவன், ஐயா!" எனும் ஒரு அற்புதமான பதில் வந்தது.


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...