ஞாயிறு, 27 நவம்பர், 2022

பெண்ணின் புகாரும் விமானபணிப்பெண்ணின் பதிலும்

  ஒரு அழகான பெண் புறப்பட தயாராக இருந்த ஒரு விமானத்திற்குள் நுழைந்து தனது இருக்கையைத் தேடி சுற்றிப் பார்த்தாள். கைகள் இல்லாத ஒரு நபருக்கு அருகில் அவள் இருக்கை இருப்பதைக் கண்டாள். அந்த ஊனமுற்றவரின் அருகில் உட்காரஅந்த பெண் தயங்கினாள். அவள் விமானபணிப்பெண்ணை அருகில் அழைத்து, “இந்த இருக்கையில் நான் வசதியாக உட்கார்ந்து என்னால்  பயணிக்க முடியாது” என்றாள். உடன் விமானபணிப்பெண் “ஏன்“, என வினவியபோது,அந்தப் பெண் , “ஏனெனில் என்னுடைய பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவருக்கு இரண்டு கைகளும் இல்லை, அத்தகையவர்களின் அருகில் நான் அமர்ந்து பயணிக்க முடியாது“. என பதிலளித்தார். மேலும் தொடர்ந்து,  தனது இருக்கையை வேறு இடத்திற்கு மாற்றித்தருமாறு விமான பணிப்பெண்ணிடம் கோரிக்கை விடுத்தார். நன்கு படித்த  கண்ணியமான ஒரு பெண்ணிடம் இருந்து இவ்வாறான கோரிக்கையக் கேட்டு விமான பணிப்பெண் திகைத்துப் போனார். இருந்தபோதிலும் பயனாளரின் கோரிக்கையை ஏற்கவேண்டியது விமான சேவை நிறுவனத்தின் அடிப்படை கடமையல்லவா அதனால் அந்த விமான பணிப்பெண் வேறு காலி இருக்கைகள் ஏதேனும்இருக்கின்றதா என தேடி பார்த்தார் ஆனால் காலி இருக்கை எதுவும் கிடைக்கவில்லை. அதனால் விமான பணிப்பெண்  அந்த பெண்பயனியிடம், “அம்மா, இந்த சாதாரண வகுப்பு இருக்கையில் காலி இருக்கை எதுவும்இல்லை, ஆனால் இந்தவிமானத்தில் பயனம் மேற்கொள்ளும்  பயணிகளின் வசதியைக் கவனிப்பது எங்கள் பொறுப்பு. அதனால் இந்த பிரச்சினையை தீர்வுசெய்வதற்காக நான் விமான ஓட்டியிடம் சென்று அடுத்து என்னசெய்யவேண்டும் என கேட்டுவருகிறேன். அதுவரை நீங்கள்பொறுமையாக இருங்கள்.." எனக்கூறிவிட்டு விமானபணிப்பெண் விமான ஓட்டியை சந்திக்க கிளம்பிசென்றாள். சிறிது நேரம் கழித்து, அப்பணிப்பெண் மீண்டும் வந்து அந்த பெண்பயனியிடம் வந்து, “அம்மா! உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறேன். இந்த முழு விமானத்திலும், ஒரு இருக்கை மட்டுமே காலியாக உள்ளது, ஆனால் அது முதல் வகுப்பில் உள்ளது. நான் எங்கள் விமான குழுவின் தலைவரிடம் பேசினேன், எங்கள் நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக , சாதாரண வகுப்பு  இருக்கையில் பயனம் செய்திடும் ஒருவரை முதல் வகுப்பில் பயணிக்க அனுமதிக்கலாம் எனும் ஒரு அசாதாரண முடிவை எடுத்தோம்." என கூறியதும் அந்த அழகான பெண் மிகவும் மகிழ்ச்சியுடன் “மிக்க மகிழ்ச்சி இப்போதே நான் அந்த இருக்கைக்கு செல்கின்றேன்" என தனது எதிர்வினையை வெளிப்படுத்தி சொல்ல முயற்சிக்குமுன்.அந்த விமானபணிப்பெண் “மன்னிக்கவும் அம்மா சிறிது பொறுங்கள் நான்  முழுவதையும் கூறி முடிக்கவில்லை" எனக் கூறிக்கொண்டே இரண்டு கைகளையும் இழந்த ஊனமுற்ற நபரை நோக்கி  அவரிடம் பணிவுடன், “ஐயா, உங்களால் முதல் வகுப்பில் பயனம் செய்ய முடியுமா..? ஏனென்றால், ஒரு முரட்டுத்தனமான பயணியுடன் பயணம் செய்து நீங்கள் தொந்தரவு அடைவதை நாங்கள் விரும்பவில்லை". என கேட்டுக்கொண்டார் இந்தசெய்தியைக் கேட்ட மற்ற பயணிகள் அனைவரும் கைதட்டி இந்த முடிவை வரவேற்றனர். இப்போது அந்த அழகிய பெண் தன்னுடைய தலைகுனிந்து கொண்டாள்  அவமானத்தால் தன்னுடைய தலையை உயர்த்த முடியவில்லை. அப்போது ஊனமுற்றவர் எழுந்து, “நான் ஒரு முன்னாள் இராணுவ வீரன், இராணுவ நடவடிக்கையின் போது வெடிகுண்டு வெடித்ததில் எனது இரு கைகளையும் இழந்தேன். முதலில், இந்தப் பெண்ணின் சொற்களைக் கேட்டபோது, நான் மனம் உடைந்து போனேன், அப்போது  — இப்படிப்பட்டவர்களின் பாதுகாப்பிற்காக நான் என் உயிரைப் பணயம் வைத்தேன், என் கைகளை இழந்தேன்..!! என மிகவருத்தப்ட்டேன் ஆனால், இந்த விமான ஊழியர்களின் முடிவை கோட்டபோது, என்னுடையநாட்டிற்கும் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும் நான் என் கைகளை இழந்தது சரிதான் என்று என்னை நினைத்து பெருமைப்படுகிறேன்".. என்று கூறிவிட்டு, முதல் வகுப்பில் பயனம் செய்திடச் சென்றார், அந்த அழகான பெண் மிகவும் அவமானத்தில் தலைகுனிந்தபடி தனது இருக்கையில்  அமர்ந்தாள்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...