ஞாயிறு, 4 டிசம்பர், 2022

பெண்ணின் கோபமும் அதற்கான மருத்துவமும்

 ஒரு கிராமத்தில் வாழ்ந்துவரும் ஒரு பெண் தனக்குவருகின்ற கோபத்தால் எல்லாக் கட்டுப்பாட்டையும் இழந்து வாயில் வந்தவாறு திட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார் இதனால் அதிக பிரச்சினையாகி விடுவதும் வழக்கமான செயலாக இருந்துவந்தது   ஒரு நாள் தனக்கு கோபம் வருவது தனக்கு அடிக்கடி  பெரும் பிரச்சனையாகி வருவதையும்  வருத்தத்தில் மனம் எரிவதை போன்றும் உணர்ந்தார். மேலும் அப்பெண்ணுக்கு கோபம் வரும்போது  தான் நிராதரவாக இருப்பதாகவும்உணர்ந்தார் . ஒரு நாள்  மகாத்மா கிராமத்திற்கு வந்தார். அந்தப் பெண் அவரைச் சந்தித்து தன் கோபத்தை போக்க வழி கேட்க முடிவு செய்தாள். அதனால் அவள் மகாத்மாவைச் நேரில் சந்தித்து அவரிடம், "ஐயா, எனக்கு வரும் கோபத்தால் எனக்கு அடிக்கடி பிரச்சினையாகிவிடுகின்றது, என் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை, கோபத்தில், நான் அடிக்கடி மற்றவர்களைத் தவறாகப் பேசிவிடு கின்றேன், பின்னர் நான் வருந்துகிறேன். என் கோபத்தால், என் குடும்ப உறுப்பினர்கள் கூட என்னிடம் பேச பயப்படுகின்றனர. நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன்.நான் கோபப்படுவதை நிறுத்த உதவும் மருந்து ஏதேனும் இருந்தால் எனக்குக் கொடுங்கள்." எனக்கோரினார் உடன்மகாத்மா உள்ளே சென்று ஒரு பாட்டிலை கொண்டுவந்தார். அதை அவளிடம் கொடுத்து, "இனிமேல் உனக்கு கோபம் வரும்போதெல்லாம் இந்த மருந்தை சிறிதளவு குடித்துவிழுங்காமல் அப்படியே வாயில் வைத்து கொண்டு சிறிதுநேரம் அமைதியாக உட்கார்ந்திரு. இந்த மருந்து உனக்கு உதவும்" என்றார். மருந்து கிடைத்தவுடன் அந்த பெண் மகிழ்ந்தாள். அவருக்கு நன்றிகூறிவிட்டு தன் வீட்டிற்கு திரும்பினாள். அன்று முதல் கோபம் வரும்போதெல்லாம் மகாத்மா கொடுத்த அந்த பாட்டிலிலிருந்த சிறிதளவு மருந்து குடித்திடுவாள் ஆனால்அந்த மருந்தை விழுங்காமல் வாயில் வைத்துகொண்டு சிறிதுநேரம் அமைதியாக உட்கார்ந்து இருந்துவிட்டு மற்ற பணிகளை செய்திடுவாள் அதனால் அவளுக்கு மெல்ல மெல்ல கோபம் குறைய ஆரம்பித்தது. 15 நாட்களில், அந்தமருந்துமுழுவதும் காலியாகி விட்டது அதனால் , அவள் மீண்டும் மகாத்மாவிடம் நேரில் சென்று அடைந்து, "ஐயா நீங்கள் எனக்கு ஒரு அற்புதமான மருந்தைக் கொடுத்தீர்கள், நான் அதைக் குடித்தவுடன் என் கோபம் எல்லாம் மறைந்துவிடுகின்றது, இப்போது அந்த மருந்து காலியாகிவிட்டது, தயவுசெய்து மேலும் அந்த மருந்தை எனக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பாட்டில்களில் அதிகமாகக் கொடுத்தால் மிகப்பயனுள்ளதாக இருக்கும். " எனக்கோரினாள்  உடன் மகாத்மா சிரித்துக்கொண்டே, "மகளே, அந்த பாட்டிலில் மருந்து இல்லை. அதில் வெறும் தண்ணீர்தான் .." என்றார். இதை கேட்ட அந்த பெண் ஆச்சரியமடைந்து, "ஆனால்.." என்றாள். மகாத்மா , "நீ கோபமடைந்தவுடன் , அந்தப் பாட்டிலிலிரு்நது சிறிது தண்ணீரை குடித்து அதனை உள்ளேவிழுங்காமல் சிறிதுநேரம் அப்படியே வைத்திருந்தாய்,   வாயில் தண்ணீர் இருப்பதால் எதையும் உன்னால் பேச முடியவில்லை. உன்னுடைய கோபத்திலிருந்து விடுபட இதுவே ஒரே வழி. உனக்கு கோபம் வரும்போதெல்லாம் இதேபோன்று சிறிது தண்ணீர்குடித்து அந்த தண்ணீரை உள்ளேவிழுங்காமல் வாயில் வைத்து கொண்டு சிறிதுநேரம் அமைதியாக இருந்திடுக, ." என விளக்கமளித்து அறிவுரைகூறினார்
  கற்றல். கோபத்தால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரே வழி கோபமாக இருக்கும் போது அமைதியாக இருப்பதுதான்.



கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...