சனி, 24 டிசம்பர், 2022

கொல்லனும் இரும்பு சங்கிலியும்

 முன்புஒருகாலத்தில், ரோம் நகரில் ஒரு கொல்லன் வாழ்ந்துவந்தார், அவர் தனது ஒப்பற்ற திறமைகளால் உலகம் முழுவதும் பிரபலமானார். அவர் தன்னுடைய உலைகளத்துடன்கூடிய பட்டறையில் எந்தவொரு பொருள் செய்தாலும், அதை யாராலும் உடைக்க முடியாத தாக இருந்தது. எனவே, அந்த கொல்லனின் பட்டறையில் செய்யப்பட்ட பொருட்கள் உலகம் முழுவதும் மதிக்கப்பட்டு, தொலைதூர சந்தையில்கூட விற்கப்பட்டன. ஒரு முறை, எதிரியால் ரோம்நகரின்மீது தாக்குதல் செய்யப்பட்டு அந்த போரில் தோற்றது. அதனால் ரோமில் இருந்த பல முக்கிய நபர்கள் பிடிபட்டனர். மொத்தத்தில் ரோமில் புகழ்பெற்ற  முப்பது நபர்கள் பிடிபட்டனர், அவர்களில் அந்த கொல்லனும் ஒருநபர்ஆவார். அவர்கள்அனைவரும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப் பட்டு அருகிலிருந்த மலையின்உச்சியிலிருந்து கீழே தரைக்கு உருட்டி விடுவதற்கு மலையின் உச்சிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் அனைவரும் மலையின் உச்சிக்கு கொண்டுவந்தபோது, அந்த சங்கிலியால் கட்டப்பட்டவர்களில் இருபத்திஒன்பது பேர்களும் தங்களுடைய உயிர் உடன்போகப்போகின்றது என அழுது கொண்டிருந்தனர், அழாத ஒரே நபர் அந்த கொல்லன் மட்டுமேயாகும். அதனால்  அவர்களில் ஒருவர் கொல்லனிடம், “நீமட்டும்எப்படி அமைதியாக இருக்கிறாய்? விரைவில் இங்கிருந்து நம்மை கீழே மரம் அடர்ந்து வளர்ந்துள்ள காட்டிற்குள் உருட்டிவிடப் போகின்றனர், இந்த மலையடியிலுள்ள காட்டில் வாழும் வன விலங்குகளால் நம்முடைய உடல்கடித்து தின்னப்படும்.“ என கூறியதற்குக் கொல்லன் , “கவலைப்படாதே நண்பா, நான் ஒரு கொல்லன், என் வாழ்நாள் முழுவதும் நான் ஏராளமான  சங்கிலிகளையும் கைவிலங்குகளையும் உருவாக்கி யிருக்கிறேன். அதனால் அவற்றைத் எவ்வாறு திறப்பது என எனக்குத் தெரியும், நீங்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். நாம் உருட்டிவிடப்பட்டவுடன், நான் முதலில் என்னை பினைத்த சங்கிலியை அவிழ்த்து விடுவேன், பின்னர் நான் உங்கள் அனைவரின் சங்கிலியையும் அவிழ்க்க உதவுவேன், பயப்பட வேண்டாம்.“ எனக்கூறினார். அதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் தைரியம் அடைந்து  நம்பிக்கையுடன் இருந்தனர் .அதன்பிறகு அவர்கள் அனைவரும் மலையின் உச்சியிலிருந்து உருட்டிவிடப்பட்டனர். அதனைதொடர்ந்த அவர்களஎல்லாரும் கடுமையாக முயற்சி செய்து மெதுவாக நகர்ந்து ஊர்ந்து  எப்படியோ கொல்லனின் அருகில் வந்தசேர்ந்தனர். அவர்கள் அனைவரும் கொல்லனின் அருகில்வந்து சேர்ந்ததபோது,  அங்கு கொல்லனும் தாங்கள் முன்பு அழுதுகொண்டிருந்ததேபோன்றே தனியாக அழுதுகொண்டிருப் பதைக் கண்டனர். அவர்களில் ஒருவர் , ""ஏன் என்ன செய்தி?  நீங்கள் எங்களுக்கு எல்லாம் தைரியமும் நம்பிக்கையும் அளித்தீர்கள் அதனால் நாங்கள் அனைவரும் நிம்மதியாக இருந்தோம் ஆனால் இப்போது  நீங்கள் மட்டும் ஏன் அழுகின்றீர்கள்? , இப்போது என்ன நடந்தது?"  என வினவியபோது கொல்லன், "நான் , ஏன் அழுகிறேன் என்றால் நான் இப்போது நம்மை பினைத்த இந்த சங்கிலிகளை உன்னிப்பாகப் பார்த்தபோது, அவற்றில் எனது முத்திரை இருப்பைதப் பார்த்தேன், இந்த சங்கிலிகள் நான் செய்தவை.. வேறுயாராவது செய்திருந்தால், அவ்வாறான சங்கிலிகளை என்னால்  உடைத்திருக்கமுடியும், ஆனால் நான் செய்த இந்த சங்கிலியை என்னால் கூட உடைக்க முடியாது. இப்போது, இங்கிருந்து நாம் தப்பிப்பது சாத்தியமில்லை. காட்டு விலங்குகளால் நாமனைவரும சாவது உறுதி"  எனக்கூறினார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...