கல்லூரியில் பயிலும் மாணவர்களில் ஒரு மாணவன் ஒருமுறை தங்களுடைய வகுப்பில் பயிலும், மற்றொரு மாணவனை குறும்பு செய்து விளையாட நினைத்தான். அதற்காக அம்மாணவன் எழுதும் ஒரு தாளினை எடுத்து அதில் - நான் ஒரு முட்டாள் - என எழுதிய, பின்னர் அந்த தாளினை தான் குறும்பு செய்து விளையாட விரும்பும் வகுப்பு தோழரின் முதுகில் ஒட்டினார், அந்த தாள் அம்மாணவரின் முதுகில் ஒட்டப்பட்டதால் அதுகுறித்து அந்த மாணவனுக்கு எதுவும் தெரியாது அதனால் அம்மாணவன் அதனை கவனிக்காமல்.தன்னுடைய பணியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் மாணவனின் முதுகில்- நான் ஒரு முட்டாள் - எனும் தாள் ஒட்டப்பட்டதைப் பார்த்த மற்றொரு மாணவனிடம் அந்த தாளை ஒட்டிய மாணவன், இந்த மாணவனை கேலி செய்வதற்காகத்தான் நான் இதை ஒட்டினே் இது குறி்த்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதனை தொடர்ந்து அந்தநாள் முழுவதும் கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் அந்த கல்லூரி மாணவரின் முதுகில் ஒட்டுப்பட்டிருந்த - நான் ஒரு முட்டாள் - என ஒட்டப்பட்ட தாளினை பார்த்து அந்த மாணவனின் முதுகுக்கு பின் கிண்டலும் கேலியும் செய்துசிரித்து கொண்டிருந்தனர். அன்றைய நாளின் கடைசி நேர வகுப்பிற்கு கணித விரிவுரையாளர் வந்துசேர்ந்தார், கணித விரிவுரையாளர் வந்தவுடன் முந்தையநாளில் நடத்தப்பட்ட கணித பாடத்திற்கான கணக்கு ஒன்றினை சுவரிலிருந்த கரும்பலகையில் எழுதி இந்த கணக்கினை யாரால் தீர்வுசெய்ய முடியும் என அந்த வகுப்பு மாணவர்களை பார்த்து கேட்டுக் கொண்டார். அந்த கணக்கு மிகக்கடினமாக இருந்ததால், அவ்வகுப்பில் இருந்த கல்லூரி மாணவர்களுள் முதுகில் - நான் ஒரு முட்டாள்- எனும் தாள் ஒட்டப்பட்ட மாணவனை தவிர வேறுஎந்த மாணவரும் அந்த கணக்கினை தீர்வுசெய்திட முடியும் என தங்களுடைய கைகளை உயர்த்தவில்லை. விரிவுரையாளர் அந்த மாணவரை மட்டும் அழைத்து கரும்பலகையில் அந்தகணக்கிற்கான வழிமுறையை எழுதி தீர்வுசெய்து விடை காணுமாறு அழைத்தார். உடன் அம்மாணவன் அந்த கணக்கிற்கான தீர்வுகாண கரும்பலகையை முன்னோக்கிச் சென்றுபோது, அந்த மாணவனது முதுகுக்குப் பின்னால் அனைத்து மாணவர்களும் கிண்டலும் கேலியும் செய்து சிரித்து கொண்டிருந்தனர். அதை அந்த வகுப்பு விரிவுரையாளர் கவனித்தார். வகுப்பு மாணவர்களின் கிண்டலும் கேலிக்கும் மத்தியில், அம்மாணவர் அந்தகணக்கிற்கான வழிமுறையை கரும்பலகையில் மிகஎளிதாக எழுதி தீர்வுசெய்துவிட்டு திரும்பிச் செல்லவிருந்தார். அப்போது விரிவுரையாளர் அவரைத் தடுத்துநிறுத்தி அவரைப் பாராட்டி முதுகில் தட்டிகொடுத்த பின் அம்மாணவரின் முதுகில் ஒட்டியிருந்த- நான் ஒரு முட்டாள்- எனும் தாளினையும் பிய்த்து அகற்றினார். தொடர்ந்த விரிவுரையாளர் அந்த தாளினை அந்த கல்லூரி மாணவரிடம் கொடுத்து - இந்த தாள் உங்கள் முதுகில் ஒட்டியிருந்தது. - நான் ஒரு முட்டாள்- என தன்னுடைய முதுகில் ஒட்டியிருந்த தாளினை கண்டு அந்தக் கல்லூரி மாணவர் மிகவும் வெட்கப்பட்டார். பின்னர் விரிவுரையாளர் மற்ற வகுப்பு மாணவர்களை அழைத்து, “மாணவர்களே இன்று உங்களுக்கு மிக முக்கியமான கருத்து ஒன்றினை கூறவிழைகிறேன்... இந்த தாளை பற்றி இம்மாணவருக்கு விவரம் தெரிந்திருந்தால் இந்த கணக்கினை தீர்வுசெய்திட இவர் முன்வந்திருக்க மாட்டார்.அல்லவா அதே போன்று உங்கள் வாழ்நாள் முழுவதும், உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க, மற்றவர்கள் உங்கள் முதுகிற்கு பின்னால் பல்வேறு மோசமான செய்திகளை பரப்பிடுவார்கள். வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், மக்கள் உங்களுக்குக் கொடுக்கும் இந்த பட்டப்பெயர்களைப் புறக்கணித்து, நீங்கள் கற்றுக்கொள்வதற்கும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், உங்களை மேம்படுத்திகொள்வதற்கும் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திகொள்ளுங்கள்." என அறிவுரை கூறினார்
என்ன வாசகரே மற்றவர்கள் புறங்கூறுவதை புறக்கணித்து உங்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பினை பயன்படுத்தி கொள்வீர்களா
ஞாயிறு, 11 டிசம்பர், 2022
யாரோஒருவர்முதுகில் கேலிசெய்திடும்தாளை ஒட்டுவது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக