ஒரு இனிப்புக் கடைக்காரர் தன்னுடைய கடைக்கு தேவையான வெண்ணெயை ஒரு விவசாயியிடம் வாங்குவது வழக்கமாகும்,அவ்வாறுஒரு நாள் அந்த விவசாயியிடம் ஒரு கிலோ வெண்ணெய் வாங்கியபோது அந்தஇனிப்புக் கடைக்காரர், “ விவசாயி கொடுத்துவருகின்ற வெண்ணெயின் எடையை ஒருநாள்கூட சரிபார்த்ததே இல்லை, அதனால் இன்று சரிபார்த்திடுவோம் ” என நினைத்தார். எனவே அவர் அளவுகோலின் ஒரு பக்கத்தில் வெண்ணெயையும் மறுபுறம் 1 கிலோ எடைக்கல்லையும் வைத்து சரிபார்த்தபோது அன்று வாங்கிய வெண்ணெயானது 1கிலோவிற்கும் குறைவாக இருப்பதைக் கண்டார். அதனால் அந்த இனிப்புக்கடைகாரர் அதிக கோபமடைந்து அந்த நகரத்தின் நகரமன்றத் தலைவரிடம் சென்று அந்தவிவசாயி தன்னை ஏமாற்றியது குறித்து புகார் கூறினார்.அதனை தொடர்ந்து அந்த நகரமன்றத்தலைவர் இனிப்புக்கடைக்காரர் விவசாயி ஆகிய இருவரையும் நேரடி விசாரணைக்கு அழைத்தார்.அந்த விசாரணையின்போது "நீங்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கும் குறைவான வெண்ணெய் கொடுத்து இனிப்பு கடைக்காரரை ஏமாற்றுவது சரியா" என நகரமன்றத் தலைவர் வினவினார். அதற்கு விவசாயி, "ஆனால்.. இது 1 கிலோ வெண்ணெய்தான் ஐயா" என்றார். உடன் கோபமடைந்த நகரமன்றத் தலைவர், "ஆனால் இனிப்புக் கடைக்காரர் அதனை சரிபார்த்தபோது, அதன் எடை 1 கிலோவிற்கும் குறை வாகவே இருக்கின்றதே." என மேலும் வினவினார். அதனால் அந்த விவசாயி அதிக குழப்பத்துடன், "ஐயா, பொருட்களை எடையிட்டு கணக்கிடு வதற்கென தனியாக என்னிடம் எடைகற்கள் எதுவும் இல்லை ஐயா." என பதில் கூறினார் ,அதனை தொடர்ந்து நகரமன்றத் தலைவர் "அவ்வாறாயின் நீங்கள் விற்பனை செய்திடும் வெண்ணெயை எவ்வாறு எடையிட்டு கொடுத்து வருகின்றீர்கள்? அதனை1 கிலோ என்று எவ்வாறுச் சொல்வது?" என மீண்டும் வினவியதற்கு அவ்விவசாயி, "ஐயா, இன்று நான் அவரிடமிருந்து 1 கிலோ இனிப்பு வாங்கினேன். அந்த இனிப்புப் பொட்டலத்தை எடுத்து வெண்ணெயை எடையிடுவதற்கு தராசின் மறுபக்கத்தில் வைத்து எடையிட்டு கொடுத்தேன். இதேபோன்று நான் வாரத்திற்கு ஒருமுறை இவரிடம் ஒரு கிலோ இனிப்பு வாங்குவேன் அதனை அந்த வாரமுழுவதிற்கும் வைத்துகொண்டு வெண்ணெயை எடையிட்டு வழங்குவது வழக்கமாகும் " என பதில் கூறினார் இந்த பதிலைக் கேட்டு இனிப்புக்கடைக்காரர் திகைத்துப் போனார், இப்போது தனது ஏமாற்றும் பணி அம்பலமாகிவிட்டதால் வெட்கமடைந்தார்.
கற்றல். இந்த இனிப்பு விற்பவரைப் போல நமக்கும் வாழ்க்கையில் நாம் கொடுப்பதுதான் கிடைக்கும். நாம் மற்றவர்களுக்கு என்ன கொடுக்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும், ஏனென்றால் வாழ்க்கையில் நாம் விதைப்பதையே நாம் அறுவடை செய்திடுவோம் ...
சனி, 17 டிசம்பர், 2022
மற்றவர்களை ஏமாற்றிடும் இனிப்புக் கடை உரிமையாளரின் புகார்!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக