ஞாயிறு, 8 அக்டோபர், 2023

இரண்டு பயணிகளின் உரையாடலிலுள்ள- ஆழ்ந்த பொருள்

 தற்போதை.ய போக்குவரத்து வசதி வாய்ப்புகள் போன்றில்லாத முற்காலத்தில் ஒருமுறை, இரண்டு வெவ்வேறு மனிதர்கள் தத்தம் கால்களால் நடந்தே செல்கின்றவாறான ஒரு மிகநீண்டதூர பயணம் செய்வதற்காக  புறப்பட்டனர். இருவரும் ஒரே பாதையில் செல்லவேண்டியிருந்தது, எனவே இருவரும் அந்த பயணத்தில் ஒன்றாக சேர்ந்தே பயனம்செய்ய முடிவு செய்து அவ்வாறே பயனித்தனர். ஏழு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரும்பிரிந்து தனித்தனியாக செல்ல வேண்டிய நேரம் வந்தது. முதல் பயணி , “அண்ணே, நாம் இருவருவரும் கடந்த  வாரம் முழுவதும் ஒன்றாக பயனித்தோம். நாம் இவ்வாறு நம்முடைய பயனத்தை துவங்குவதற்குமுன் நான் ஒரு பிரபலமான பணக்காரன் என்று உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் நீங்கள் என்னை விட பெரிய பணக்காரர் என்று தெரியவருகிறது.” எனக்கூறினார் .உடன் இரண்டாவது பயணி , "எப்படி" எனக்கேட்டார் முதல்பயனி, "கடந்த ஏழு நாட்களாக, நீங்கள் ஏதேனும் உங்களடைய சொந்த பணியை செய்வதற்காக என்னைத் தனியாக விட்டுவிட்டு செல்லும்போது, உங்களுடைய பையிலிருந்து ஏதாவவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் தொடர்ந்து தேடினேன், ஆனால் என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வளவு நாள் நாமிருவரும் சேர்ந்து மிக, நீண்டதூரம் பயனம் செய்து கொண்டு இருக்கின்றோம். அவ்வாறான நீண்டதூரபயனத்திற்கு மிக அதிக செலவாகும் அல்லவா அதற்காக நீங்கள் அதிக பணம் எடுத்து கொண்டு வந்திருப்பீர்கள் அல்லவா .ஆனால் உங்களிடம் எதுவும் இல்லையே இது எப்படி சாத்தியம்? நீங்கள் பணம் எதுவும் கொண்டு வரவில்லையா?" என சந்தேக கேள்வி எழுப்பினார் .அதனை தொடர்ந்து இரண்டாமவர் , “நிச்சயமாக நான்நீண்டதூர பயனத்திற்கு தேவைான பணம் கொண்டுவந்தேன். அதனுடன் என்னிடம் விலையுயர்ந்த வைரமும் சில வெள்ளி நாணயங்களும் உள்ளன." என பதிலளித்தா.ர் அந்த பதிலை கேட்டு முதல் பயனி மிகவும் ஆச்சரியப்பட்டு, "உங்களுடைய பையில் அதுபோன்ற பொருட்கள் இருந்தால்,நான்  எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால்  எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லையே ஏன்?" என்று கேட்டார். அதற்கு இரண்டாவது பயனி , "ஏனென்றால் நான் உங்களை தனியாக விட்டிட்டு வெளியே ஏதேனும் என்னுடைய சொந்த பணியை செய்வதற்காக  செல்லும்போதெல்லாம் வைரங்களையும், வெள்ளி நாணயங்களையும் பணத்தையும் உங்கள் பையில் வைத்து செல்வேன், நீங்கள் கடந்த ஏழு நாட்களாக  ஏதாவது கிடைக்குமா வென என்னுடைய பையை மட்டுமே அலசிக்கொண்டே ஆராய்ந்து இருந்தீர்களே தவிர. உங்களுடைய சொந்த பையில் ஏதேனும் உள்ளதாவென நீங்கள் நினைக்கவில்லை, பிறகு நீங்கள் எப்படி எதையும் என்னுடைய பையில் கண்டுபிடிப்பீர்கள்?"என பதிலளித்தார் .
ஆம் நாம் வாழ்கின்ற நம்முடைய வாழ்க்கையும் அவ்வாறுதான். இயற்கையானது நம்முடைய மகிழ்ச்சியை நமக்குள் வைத்திருக்கின்றது, ஆனால் இன்னும் நாம் மற்றவர்களிடம் இருப்பதை கண்டு பொறாமை பட்டுக்கொண்டே இருக்கிறோம், அவர்களிடம் இருப்பதைப் பெற விரும்புகிறோம். ஒருவர் பிறர் மகிழ்ச்சியாக வாழ்கின்றாற் எனக் காண்பதை நிறுத்திவிட்டு, நம்மிடம் உள்ள மகிழ்ச்சியைக் காண முயன்றால், அந்த நிமிடத்திலிருந்து ஒருவர் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...