கடற்கரையில் ஒரு வலுவான அலை வந்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் காலில்அணியும் செருப்பை அடித்து சென்றது இதைகண்டஅந்த குழந்தை, அந்த கடற்கரையின் மணல் மீது விரலால் - கடல் ஒரு திருடன் என எழுதியது. அதேகடற்கரையின் சிறிதுதூரத்தில் வாழும் மீனவர் ஒருவருக்கு அன்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்றபோது ஏராளமான மீன்கள் கிடைத்தது. அம்மீனவர் அதே கடற்கரையின் மணலில் - கடல் என்னை சீராட்டி வளர்க்கின்றது என எழுதினார். சிறிது நேரத்தில்அருகிலுள்ள ஊரில் வாழ்ந்துவந்த , ஒரு வாலிபர் அந்த கடலில் மூழ்கி இறந்தார். மகனின் இழப்பால் வருந்திய அவ்வாலிபனின் தாய் கடற்கரையின் மணலில் - கடல் ஒரு கொலையாளி என எழுதினார் . அதே கடற்கரையின் வேறொரு பகுதியில், ஏழ்மைநிலையிலுள்ள முதியவர் ஒருவர் அந்த கடற்கரையின் மணலில் ணன ஆறுதலுக்காக நடந்து கொண்டிருந்தபோது, ஒரு பெரிய சிப்பியில் விலைமதிப்பற்ற முத்து ஒன்றைக் கண்டெடுத்தார். அவர் அதே கடற்கரையின் மணலில் - கடல் மிகவும் தாராளமான கொடையாளிஎன எழுதினார் .
அப்போது திடீரென ஒரு பெரிய அலை வந்து அந்த கடற்கரையின் மனதில் அவ்வாறு எழுதிய எழுத்தையெல்லாம் அழித்து விட்டுச் சென்றது.
இதன் பொருள் என்ன?
அதாவது கடலானது பொதுமக்களின் கருத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை, எப்போதும் அதன் அலைகளால் அவற்றைஅழித்து விட்டு மகிழ்ச்சியாக இருக்கின்றது. நாமும் அவ்வாறு ஒரு கடல் போன்ற பரந்தமனப்பாண்மைக்கு மாற விரும்பினால், பயனற்ற பேச்சுகளுக்கு ஒருபோதும் கவனம் செலுத்த வேண்டாம். நம்முடைய வாழ்க்கையின் ஏற்படும் அனைத்து செயல்களுக்கும் அமைதியாக தைரியமாக உற்சாகமாக அவைகளை ஏற்று சொந்த வாழ்க்கைக்கு ஏற்ப அதற்கேற்ப பொருத்தமான முடிவு செய்திடுக. உன்னைபற்றி மற்றவர்கள் என்ன எண்ணுகின்றார்கள் என கவலைப்படவேண்டாம் ஏனெனில், அவ்வப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களின் கருத்துகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. அருந்த விழையும் ஒரு கோப்பை தேநீரில் ஒரு ஈ விழுந்திருந்தால், அந்த ஒரு கோப்பை தேநீரை ஈயுடன் கீழே கொட்டிவிடப்படும், ஆனால் அதுவே சுத்தமான நெய்யில் ஈ விழுந்திருந்தால், ஈயைமட்டும் தூக்கி எறியப்படும். என்பதை மனதில் கொண்டு, எப்போதும் ஆரோக்கியமாகவும், மகிழ்சியாகவும், வாழ கற்றுகொள்க
ஞாயிறு, 29 அக்டோபர், 2023
கடல் போன்று பரந்தமனப்பாண்மையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்திடுக
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
-
ஒரு வேளான் பண்ணைக்கு அருகிலிருந்த ஒரு காட்டில் முயல்ஒன்று வசித்து வந்தது அது தன்னுடைய இனமல்லாத மற்றபல்வேறு இன விலங்குளை நண்பர்கள்ஆக கொண்ட...
-
தற்போது சசேவ இன்கீழ் வரிசெலுத்தவோர் அனைவரும் GSTR 9 எனும் படிவத்தில் சமர்ப்பித்திடும் ஆண்டு அறிக்கையானது ஏற்கனவே சமர்ப்பித்திருக்கும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக