ஒருமுறை ஒரு நகரத்தில், ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டவாறே தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியேஅடையாத ஒரு மனிதன் வாழ்ந்தான். அம்மனிதன் எப்பொழுதும் ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கொண்டு வருத்தத்துடன் இருப்பதே வழக்கமாகும். அவ்வாறான நிலையில் ஒரு நாள், துறவி ஒருவர் தற்போது போன்று வசதிஇல்லாத பழங்காலமானதால் பயனம் செய்வதற்கான ஒட்டகங்களின் கூட்டத்துடன் அந்நகரத்திற்கு அருகில் வந்து தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது உடன் அந்த நகரமக்கள் அனைவரும் அவரைப் பற்றியசெய்தியை அறி்ந்தவுடன் தங்கள் பிரச்சினைகளை அவரிடம் கூறி தீர்வு செய்து மகிழ்ச்சிடன் இருப்பதற்காக அந்த துறவியை காண சென்று கொண்டிருந்தனர், இந்தமனிதனும் அவ்வாறே தன்னுடைய பிரச்சினைகள் இவர்மூலமாகவாவது தீர்வுசெய்திடமுடியுமா என அந்த துறவியை காண முடிவு செய்து மறுநாள் விடியற்காலையிலேயே அங்கு சென்றபோது மாலை வரை அந்த துறவியைச் சந்திக்கும் வாய்ப்பு அந்த மனிதனுக்குக் கிடைக்கவில்லை. கடைசியாக துறவியை சந்திக்க அனுமதிகிடைத்து துறவியை சந்தித்தபோது அவரிடம், “ஐயா, நான் என் வாழ்க்கையில் எப்போதும் ஏதாவது பிரச்சினைகளால் சூழ்ந்து என்னால் மற்றவர்களை போன்று மகிழ்ச்சியாகவே வாழமுடியவில்லை., சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில், சில நேரங்களில் யாருடனாவது மோதல்கள், சில நேரங்களில் என் உடல்நிலை குறித்து கவலைப்படுவது என்றவாறு எல்லா நேரங்களிலும் ஏராளமானபிரச்சனைகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன என்னால் இவைகளை எதிர்கொள்ளமுடியாமல் தத்தளி்க்கின்றேன் அதனால் மிகவும் வருத்தத்துடனேயே வாழ்ந்துவருகின்றேன். தயவு செய்து என் வாழ்வில் எதிர்படுகின்ற எல்லா பிரச்சனைகளும் முடிந்து நான்மனமகிழ்ச்சியுடன் வாழக்கூடிய ஒரு தீர்வை கூறுங்கள்” என்றான் உடன் அந்த துறவி புன்னகைத்து, “மகனே, இன்று மிகவும் தாமதமாகிவிட்டது, நாளை உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன். எனக்காக ஒரு சின்ன வேலை செய்வாயா?” எனக்கோரினார் உடன்துறவிகூறுகின்ற பணியை செய்ய தான் தயாராக இருப்பதாக அந்த மனிதன் ஒப்புக்கொண்டான். துறவி, “மகனே நான் பயனம் செய்வதற்கு பயன்படுத்தி கொள்வதற்காக நூறு ஒட்டகங்கள் உள்ளன, அவற்றை இன்றிரவு நீ கவனித்துக் கொள்ள வேண்டும். நூறு ஒட்டகங்களும் ஓய்வெடுப்பதற்காக தரையில் படுத்ததும், நீ உறங்க செல்லலாம்." எனக்கோரியபின், துறவி ஓய்வெடுக்க தனது கூடாரத்திற்குள் சென்றார். மறுநாள் காலை துறவி அந்த மனிதனைச் சந்தித்தபோது, "மகனே, நேற்றிரவு நீ நன்றாகத் உறங்கினாயா?" என்று கேட்டார். உடன்அம்மனிதன், "ஐயா நேற்றிரவு முழுவதும் ஒரு ஒட்டகத்தை ஓய்வெடுக்க செய்யமுயற்சித்தால் உடன், மற்றொன்று எழுந்து நிற்கும் இவ்வாறு மாற்றி மாற்றி ஒன்று ஒய்வெடுக்கச்செய்ய முயற்சித்திடும்போது மற்றொன்று எழுந்து கொண்டே யிருந்தன நூறு ஒட்டகங்களையும் ஓய்வெடுப்பதற்காக பலவகையிலும் முயற்சிசெய்தேன், ஆனால் என்னால் அனைத்து ஒட்டகங்களையும் ஒரேநேரத்தில் ஓய்வெடுக்க செய்யமுடியவில்லை அதனால் நேற்றிரவு முழுவதும் என்னால் ஒரு கணம் கூட தூங்க முடியவில்லை.." என மிகச்சோர்வாகவும், சோகமாகவும் பதில் கூறினான் உடன்துறவி, "மகனே நீ எவ்வளவு முயற்சி செய்தாலும், அனைத்து ஒட்டகங்களும் ஒன்றாக ஓய்வெடுக்க செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டாய் அல்லவா. அதாவது சிலவற்றை ஓய்வெடுக்க செய்யமுயற்சித்தால் உடன் வேறு சில ஒட்டகங்கள் எழுந்து நிற்கும். அதே போன்று நம்முடைய வாழ்க்கையிலும் ஒரு பிரச்சனையை தீர்வு செய்தவுடன், மற்றொரு பிரச்சனை நம்முன்எழும் இதுதான் உலகநியதி. நம் உயிர் இருக்கும் வரை பிரச்சனைகளும் இருந்துகொண்டேயிருக்கும், சில நேரங்களில் குறைவாகவும்,வேறுசிலநேரங்களில் மிக அதிகமாகவும் இருக்கும் என்பதை புரிந்து கொள்க. " எனக்கூறினார் உடன் அம்மனிதன்"அவ்வாறாயின் மகிழ்ச்சியாக இருப்பதற்காக நான் என்ன செய்ய வேண்டும்?" என வினவினான். துறவி சிரித்துக்கொண்டே, "நேற்று இரவு என்ன நடந்தது? 1. பல ஒட்டகங்கள் நீ முயற்சி செய்யாமலேயே இரவு நேரத்தில் தானாகவே ஓய்வெடுக்க செய்யும், 2. உன்னுடைய முயற்சியால் பலவற்றை ஓய்வெடுக்க வைத்தாய், 3. பல ஒட்டகங்கள் உன்னுடைய கடுமையான முயற்சிக்குப் பிறகும் ஓய்வெடுக்க செய்யமுடியவில்லை, பின்னர் அவற்றில் சில தனியே ஓய்வெடுக்கசெல்வதை நீ கண்டாய் அதுபோன்று நம்முடைய வாழ்க்கையிலும் பிரச்சனைகள்.. 1. சில தானாகவே தீர்வாகிவிடும், 2. சிலவற்றை உன்னுடைய சொந்த முயற்சியால் தீர்வுசெய்கி்ன்றாய், 3. நிறைய முயற்சி செய்தும் வேறுசில தீர்வாகவில்லை...? அதனை அப்படியே விட்டுவிடு இதுபோன்ற பிரச்சனைகள் சரியான நேரத்தில் தானாகவே தீர்வாகிவிடும். எனவே, பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கையை அனுபவிக்க கற்றுக்கொள்க.." என நீண்ட விளக்கமளித்தார்
ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023
துறவிபயனம்செய்கி்ன்ற ஒட்டகங்கள் - வாழ்க்கையின் சிக்கல்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக