சனி, 29 ஜூலை, 2023

திருமணத்திற்கான மணமகளின் தந்தையின் நிபந்தனை

ஒருமுறை  இளைஞன் ஒருவன் ஒரு இளம் பெண்ணைக் காதலித்தான். அதனை தொடர்ந்து அவ்விருவரும்திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். அவ்வாறான அவ்விருவரும் திருமணம் செய்துகொள்கின்ற முடிவினை அவ்விளம் பெண்ணின் தந்தை மிகுந்த தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார்.
 ஆனால் அதற்காக ஒரு நிபந்தனையுடன் மட்டுமே தாம் ஏற்றுகொள்வதாக கூறினார். அத்திருமணத்திற்கு அவ்விளைஞனின் கிராமத்திலிருந்தோ அல்லது குடும்பத்திலிருந்தோ  மிகவும் வயதுமுதிர்ந்த பெரியவர்கள் யாரும் அம்மண ப்பெண்ணின்  கி்ராமத்திற்கு வரக்கூடாது என்று அவர் கூறினார்.
அவரின் அந்நிபநதனையைப் பின்பற்றுவது மிகவும் கடினமான செயலாக இருந்தது,இருந்தபோதிலும் மணமகனி குடும்பத்தினர் அதனை ஒப்புக்கொண்டது.
திருமண நாளும் வந்தது. அத்திருமணத்திற்காக மணமகனின் கிராமத்து வயதுமுதிர்ந்த பெரியவர்கள் அனைவரையும் கிராமத்திலேய விட்டுவிட்டு இளையோர்கள் மட்டும் மணமகளின் கிராமத்திற்கு செல்ல அனைவரும்தயாராக இருந்தனர், ஆனால் அவர்களுள் மணமகனின் தாய்வழி தாத்தா மட்டும் அதனால் என்ன ஆனாலும் பரவாயில்லை தானும் அந்த திருமணத்திற்கு வருவேன் என பிடிவாதமாக இருந்தார். .
எனவே மணகனின் குடும்பத்தினர் அவரை மிக இரகசியமாக அழைத்துச் செல்ல முடிவு செய்தனர், மேலும் தாத்தாவை மறைந்திருக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
மணமகனின் உறவினர்களும்  மணமகளின் கிராமத்தை அடைந்ததும். மணப்பெண்ணின் தந்தை அவ்வனைவரையும் வரவேற்று அவர்களுள் மிகவும் வயதுமுதிர்ந்த பெரியவர் யாராவது வந்திருக்கிறார்களா என்று சரிபார்த்தார் ஆனாலும் அவரால் வயது முதிர்ந்த மணமகனி் தாத்தா மிக இரகசியமாக வந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை அவர்கள் ஒரு பெரிய கூடத்தில் நன்கு வசதியுடன் தங்கி ஓய்வெடுக்குமாறு கூறிச்சென்றார்.
மணமகளின் தந்தை திரும்பி சென்றபின்னர்இப்போது, மணப்பெண்ணின் தந்தை மணமகனுக்கு  - எங்கள் கிராமத்திற்கு அருகே உள்ள குளத்தை முழுவதும் பாலால் நிரப்ப வேண்டும், அப்போதுதான் இந்த திருமணம் நடக்கும், இல்லையெனில் திரும்பி செல்லுங்கள் என்ற நிபந்தனை செய்தி அனுப்பினார்.
அத்திருமணத்திற்கு வந்திருந்த மணமகனின் கிரமத்தார்களும் உறவினர்களும் எவ்வளவு  யோசித்தாலும், மணமகளின் தந்தை கூறிய நிபந்த.னையை எவ்வாறு நிறைவேற்றுவது என்ற வழியை கண்டுபிடிக்கமுடியவில்லை, அதனால் இறுதியில் திருமண முடிவை திரும்பப் பெறப்படும் என்று முடிவு செய்யப்பட்டு அனைவரும் தங்களது கிராமத்திற்கு மணமகனுக்கு திருமணத்தை செயற்படுத்தாமலேயே திரும்ப செல்வது என தயாராகிவிட்டனர்.
இதனை  கண்டமணமகனி்ன் தாத்தா வெளியே வந்து - என்ன நடந்தது? என கேட்டார்
உடன் அவரிடம் மணமகளின் தந்தையின் நிபந்தைகுறித்து  கூறப்பட்டது. அதைக் கேட்ட தாத்தா சிரித்துக்கொண்டே, போய் மணமகளின் தந்தையிடம் - குளத்தில் பால் நிரப்ப ஏற்பாடுகள் செய்துள்ளோம், ஆனால் குளத்திலுள்ள தண்ணீரை வெளியேற்றினால்தான் அது நடக்கும். என மணமகனி்ன் என்றார்
மணப்பெண்ணின் தந்தைக்கு இந்தச் செய்தி கிடைத்ததும், மணமகன் தரப்பிலிருந்து  வயதில்முதியவர் திருமணத்திற்கு வந்திருப்பதை புரிந்துகொண்டு மணமகன்குடும்பத்தார்களின் பதிலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார் உடன் மிகுதியாக இருந்த மணமகனின் கிராமத்திலிருந்த வயதுமுதிர்ந்த அனைவரையும் திருமணத்திற்காக தனது கிராமத்திற்கு வரச்செய்து மிகுந்த மரியாதையுடன் வரவேற்று அந்த திருமணத்தினை செய்து முடிக்கசெய்தார்.
இந்த எளிய கதை நம் பெரியவர்களையும் அவர்களின் அனுபவத்தையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கிறது.



கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...