திங்கள், 24 ஜூலை, 2023

குயவனுக்கு மகிழ்ச்சியாக வாழ்வதற்கான அரசனின் சலுகை -

ஒரு காலத்தில் எல்லா வசதிவாய்ப்புகளுடனும் ஒரு நாட்டில் அரசன் ஒருவர் அரசாட்சி செய்து கொண்டிருந்தார். அவருக்கு அன்பான மனைவி, நல்ல பிள்ளைகள் நல்ல மக்கள்என்றவாறு இருந்தாலும் அவ்வரசன் மிக்அதிக மன வருத்த்ததுடனே இருந்தார்.
  ஒருமுறை அவ்வரசர் தன்னுடைய நாட்டில் உலாவந்துகொண்டிருந்தபோது ஒரு சிறிய கிராமத்தை வந்துஅடைந்தார், அங்கு ஒரு குயவர் (நல்ல களிமண்ணால் பானைகள், பாத்திரங்கள் போன்றவற்றைச் செய்பவர்) அந்த கிராமத்திலிருந்த கோவிலுக்கு வெளியே களிமண்ணாலான பாத்திரங்களை விற்றுக் கொண்டிருந்தார், அவருடைய அங்காடியில் சிலமண் பானைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது  அவரும் அதனஅருகில் அமர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக கிராமத்து பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். .
மன்னன் அந்த கோயிலுக்குள் சென்று திரும்பி வெளியே வரும்போது மகிழ்ச்சியாக கிராமத்து பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த குயவனைக் கண்டு அவன் அருகில் அமர்ந்தார்.உடன் தன்அங்காடியில் வந்தமர்ந்த அந்நாட்டு அரசனை கண்டதும் விருந்தினர்கள் எவரேனும் நம்முடையவீடு தேடி வந்தததும் செய்கின்ற நம்முடைய வழக்கமான செயலைபோன்று அந்த குயவன் அரசனுக்கு மரியாதையுடன் பாணையிலிருந்து தண்ணீரை முகர்ந்து அரசர் குடிக்குமாறு கொடுத்தார்.
  அம்மன்னனும் குயவனின் இவ்வாறான செயலால் அதிகம் ஈர்க்கப்பட்டார்.அரசன் அந்த குயவனின் வருமானத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.. மிகவும் குறைந்த அளவே அந்த குயவனுக்க வருமானம் வருவதை யூகித்தபின்னர்
அரசர் அவனிடம், “தம்பி, என்னுடன் நகரத்திற்கு வருவீர்களா?” என்றார். உடன் குயவன் , “இந்த கிராமத்தை விட்டிட்டு உங்களுடன் நகரத்திற்கு நான் வந்தால் என்னுடைய வருமானத்திற்கு நான்  என்ன செய்வேன்?” என்று சந்தேக கேள்வி எழுப்பினார்.
அரசன், " நீங்கள் இங்கு செய்வதை விட ஏராளமானஅளவில் மண்பானைகளை அங்கே செய்யலாம்." என்றார் .தொடர்ந்தப குயவன், "அவ்வாறு அதிகஅளவில் மண்பாணைகளை அங்கு செய்தால் அதனை நான் செய்வது?"
அதற்கு அரசர், “அவற்றை விற்று மிக அதிகஅளவில்  பணம் சம்பாதிக்கலாம்” என்றார். உடன் குயவன், “அவ்வாறு அதிக அளவில் சம்பாதித்த அந்தப் பணத்தை கொண்டு  நான் என்ன செய்வது?” என்று கேட்டார்.
அவனது கேள்வியால் ஆச்சரியப்பட்ட அரசன், “பணத்தை என்ன செய்வீர்கள்? பணம்தான் எல்லாமே.நம்முடைய வாழ்வே பணத்தின் மீதுதானே நடக்கின்றது” என்றார்
திரும்பவும குயவன், "இப்போது, அந்த அதிகஅளவிலான பணத்தை நான் என்ன செய்வது என்று சொல்லுங்கள்" என்ற வினவினார்
அரசன், "நீங்கள்அந்தபணத்தினை கொண்டு மிகவும் வசதியான வாழ்க்கையை வாழலாம், ." என்றார் இதைக் கேட்ட குயவன் மன்னனிடம், “மன்னிக்கவும், ஐயா இப்போது நான் என்ன செய்கிறேன் என்று சொல்லுங்கள்"   என வினவினான்.
இந்தக் கேள்வி அரசனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அதனால் மேலும் எதுவும் பேசாமல் மௌனமானார்.
சிறிது நேரம் கழித்து, மன்னர்  " நீங்கள் இங்கு முழுமையான மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்." என கூறினார்,
உடன் குயவன் சிரித்துக்கொண்டே, "ஆம் ,ஐயா அதைத்தான் நான் சொல்கிறேன், மகிழ்ச்சியை பணத்தால் வாங்க முடியாது" என்றார்.
அதனால் அரசன் அதிக ஆர்வத்துடன் , நதயவுசெய்து அத்தகைய மகிழ்ச்சியை எப்படி அடைவது என்று சொல்லுங்கள்." என வினவினார் உடன் குயவன், "கவனமாகக் கேளுங்கள், உங்கள் கைகளை கொடுப்பதற்கு மட்டும் பயன்படுத்துங்கள்."  பதிலளித்தார்
அரசன், "அது எப்படி?"
அதற்கு குயவன், “அரசே! யாரிடமும் கைநீட்டி கேட்காதீர்கள், கொடுக்கக் கற்றுக்கொள்க.. கொடுக்கக் கற்றுக் கொண்டால், மகிழ்ச்சியின் பாதையில் அடியெடுத்து வைத்துவிட்டீரகள் என்பதை புரிந்துகொள்க.
சுயநலத்தை கைவிட்டு பொதுநலனை தேர்ந்தெடு்த்திடுக..
பெரும்பாலானோரின் துக்கத்திற்கு மிகப் பெரிய காரணம், தங்களிடம் எது இருந்தாலும், அதில் அவர்கள் மகிழ்ச்சியடையாமல் , இல்லாததைப் பெறுவதில் முயன்று அதனை அடையமுடியாமல் அதற்காகள் வருத்தப்படுவதும்தான்.
இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்க, மனவருத்தங்கள் தாமாகவே போய்விடும்” என்று நீண்ட விளக்கமளித்தார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...