சனி, 1 ஜூலை, 2023

அரசனுக்கு பிச்சைக்காரன் பிச்சையிடுதல்

 ஒரு பிச்சைக்காரன் பிச்சை எடுக்கச் செல்ல அதிகாலையில் எழுந்தான். வெளியே செல்லும் முன், பிச்சை எடுக்கச் செல்லும் போது பிச்சைக்காரன் தன் பைகளை காலியாக வைக்கக் கூடாது என்ற மூடநம்பிக்கையின் காரணமாக ஒரு கை நிறைய ஏதாவது உணவுதானியத்தை எடுத்துபையில் வைத்தபின் வெளியில்செல்வது அவனுடைய வழக்கமான செயலாகும்.
 இன்று மாலைக்குள் தன் பையை நிரப்பிவிடலாம் எனநினைத்துக் கொண்டு பிச்சைக்காரன் தன் குடிசையை விட்டு வெளியே வந்தான்.
அப்போது, அந்நாட்டு அரசனின் தேர் தான் செல்லும் வழியில் எதிரே வருவதைக் கண்டான். அதைக் கண்ட பிச்சைக்காரன் மிகவும் மகிழ்ச்சி யடைந்தான், இன்று தனது வறுமை அனைத்தும் நீங்கிட, அரசனிடம் பிச்சை பெற்றால் போதும் தன் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று எண்ணினான்.
அரசனின் தேர் நெருங்க நெருங்க, பிச்சைக்காரனின் கற்பனையும் உற்சாகமும் பெருகியது
அரசனின் தேர் பிச்சைக்காரன் அருகே வந்தவுடன்  நின்றது. அரசன் கீழே இறங்கி பிச்சைக்காரனை அணுகினான்.
பிச்சைக்காரன் தனக்கு எதையாவது கொடுப்பதற்குப் பதிலாக, தனது விலையுயர்ந்த துணியை அவன் முன் விரித்து, அவனிடம் அரசனேபிச்சை கேட்கத் தொடங்கினான். அவ்வாறு அரசனே தன்னிடம் பிச்சை கேட்கும் போது தான் என்ன செய்வதென்றே அந்த பிச்சைக்காரனுக்கு புரியவில்லை. பிச்சைக்காரன் மேலும்எதையும் யோசிப்பதற்குள், அரசன் மீண்டும் பிச்சைக்காரனிடம் பிச்சையிடுமாறு கெஞ்சினான்.
பிச்சைக்காரன் தன் பைக்குள் கையை வைத்தான் ஆனால் எப்போதும் அப்பிச்சைக்காரண் மற்றவர்களிடம் இருந்து பிச்சை எடுப்பது மட்டுமே வழக்கமாகும் அதன்காரணமாக அவன் மனம் தன்னுடைய பையிலுள்ள உணவுதானியத்தை கொடுக்க சம்மதிக்கவில்லை.
இருந்தபோதிலும் எப்படியோ பையிலிருந்த கையளவு வைத்திருந்த தானியத்தில் இரண்டுதானியங்களை மட்டும்எடுத்து அரசன் தன்னிடம் பிச்சை கேட்டு கையேந்தி இருந்த துணியில் போட்டான்.  அரசனும் அந்த இரண்டு உணைவுதானியங்களை மட்டும் பிச்சையாக அந்த பிச்சைக்காரணிடம் வாங்கிகொண்டு தன்னுடைய தேரில் பயனத்தை தொடர்ந்தான்
அன்றுநாள் முழுவதும், பிச்சைக்காரனுக்கு வழக்கத்தை விட அதிகமான பிச்சை கிடைத்தாலும், அப்பிச்சைக்காரன் தனது பையில் இருந்து இரண்டு  தானியங்களை மட்டும் அரசனுக்கு  பிச்சையாக கொடுத்ததை குறித்து அதாவது தன்னிடமிருந்து இரண்டு தானியங்கள் அரசனுக்கு பிச்சையாக போய்விட்டதே என அந்த நாள் முழுவதும் அவ்வாறு பிச்சை கொடுத்ததற்காக வருந்தி கொண்டேயிருந்தான்.
அன்று மாலை தன்னுடை குடிசைக்கு திரும்பியபின் தன்னுடைய பையைச் சரிபார்த்தபோது அவனுடைய ஆச்சரியத்திற்கு அளவேயில்லாமல் போய்விட்டது
அவனுடைய பையில் தங்கத்தால் செய்யப்பட்ட இரண்டு  உணவு தானியங்கள் இருந்தன. தான் அரசனுக்கு பிச்சையிட்டதனால் தான் இது நடந்தது என்று புரிந்து கொண்டான். அடடா தான் கைநிறையை அள்ளி போட்டிருந்த தானிங்கள் முழுவதையும் அரசனிற்கு பிச்சையாக கொடுத்திருந்தால் நமக்கு ஏராளமாக தங்கத்திலான உணவுதானியங்கள் கிடைத்திருக்குமே என அந்த நேரத்தில்தான் நினைத்து வருந்தினன் அரசன் தன்னிடம் பிச்சை கோட்டபோது அவ்வாறு கைநிறைய உணவு தானியங்களை அள்ளி கொடுத்திருக்கலாம்  ஆனால் அப்பிச்சைக்காரனுக்கு பிச்சையாக அள்ளி கொடுத்து பழக்கமில்லை  மற்றவர்களிடம் பிச்சையாக வாங்கிதான்  பழக்கம் பிச்சையிடும் பழக்கம் அப்பிச்சைகாரனுக்கு இல்லாததால் அவ்வாறு செய்யமுடியவில்லை.
கற்றல்:
     1. கொடுப்பதால் எதுவும் குறையாது.
     2. எடுப்பதை விட கொடுப்பது பெரியது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...