முன்னொரு காலத்தில் ஒரு அரசன் தன் நாட்டின் அரச குருவை மிகவும் மதிக்கும் பழக்கம் கொண்டிருந்தான். அரசகுரு அரசவைக்கு வரும் போதெல்லாம், அரசன் தன் அரியணையிலிருந்து மரியாதைக்காகஎழுந்து நின்று வணக்கம் கூறி தன்னுடைய இருக்கையில் உட்காருவது வழக்கமான செயலாகும்.
ஒரு நாள் அரசர் அரசகுருவிடம், "ஒருவரின் நடத்தை சிறந்ததா அல்லது அவரது அறிவு சிறந்ததா என்பதை கூறுக" என்று கேட்டார்.
அரசகுரு, "எனக்கு சில நாட்கள் அவகாசம் கொடுங்கள், உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன்" என்றார்.
அடுத்த நாள், அரச குருவானவர் மன்னரின் கருவூலத்திற்குச் சென்று, அங்கிருந்து சில பொற்காசுகளை எடுத்து, தனது பையில் வைத்து எடுத்துக் கொண்டு சென்றார். கருவூலத்தலைவர் இதைப் பார்த்தார், ஆனால் அவர்அரச குருஎன்பதால் அவருடைய பதவியைக் கருத்தில் கொண்டு அமைதியாக இருந்தார்.
அரச குருவானவர் சில நாட்கள் இதேசெயலையே தொடர்ந்து செய்து வந்தார். அதாவது அரசகுரு தினமும் அரசின் கருவூலத்திற்கு வந்து அங்கு சில தங்க நாணயங்களை எடுத்து தனது பையில் வைத்துஎடுத்துக்கொண்டு வெளியே செல்வது வழக்கமாகும். இதை அரசுகருவூலத்தலைவர் பார்த்தும் ஒன்றும் செய்யஇயலாமல் அமைதியாக இருந்துவந்தார்.
இந்த செயல் பல நாட்களாக நடந்து வந்ததால், அரசுகருவூலத்தலைவர் அரசனிடம் சென்று இவ்வாறு நடைபெறுகின்ற முழுவிவரத்தையும் கூறினார்.
இதன்பிறகு அரசகுரு ஒரு நாள் மன்னரின் அரசவைக்கு சென்றார், ஆனால் இப்போது அரசரோ மரியாதையாக எழுந்து நின்று அரசகுருவை வரவேற்க வில்லை அல்லது மரியாதை நிமித்தமாக அரியணையில் எழுந்து சென்று வரவேற்கவுமில்லை.
பொற்காசுகளை எடுத்துச் செல்லும் செய்தி அரசனுக்கு வந்துசேர்ந்துவிட்டது என்பதை அரசகுரு புரிந்து கொண்டார்.
மன்னன் தன் குரலை உயர்த்தி அரசகுருவிடம், "அரசுகருவூலத்திலிருந்து பொற்காசுகளை எடுத்துசென்றவிட்டாயா?" என்று மரியாதை இல்லாமல் கேட்டார். உடன் அரசகுவும் , "ஆம். உண்மைதான்" என்றார்.
உடன் அரசன் மிகவும் அதிககோபமடைந்து, "ஏன் இப்படி செய்தாய்?" என திட்டினார்
அதனை தொடர்ந்து அரசகுருவானவர் புன்னகைத்து, "நான் வேண்டு மென்றேதான் அரசாங்க கருவூலத்திலிருந்து தங்கக் காசுகளை எடுத்துசென்றேன்.அரசே ஒருவரின் நடத்தை பெரியதா அல்லது அறிவாற்றல் பெரியதா என்ற கேள்வியை நீங்கள் கேட்டீர்கள் அல்லவா அந்த கேள்விக்கான சரியான பதில் எதுவென உங்களுக்குக் காட்ட விரும்பினேன்.அதற்காக அரசரின் அனுமதியின்றி நான் அரசாங்க கருவூலத்திலிருந்து தங்கக் காசுகளை எடுத்துசென்றேன் இந்த செயலை அறிந்ததும், வழக்கமாக செய்யும் மரியாதைக்காக எழுந்துநின்று வணக்கம் கூறி வரவேற்பதற்கு பதிலாக நான் இந்த அரவைக்கு வரும்போது அரியணையில் இருந்து எழுந்துநின்று வரவேற்கவில்லை. மாறாக நீங்கள் உங்கள் குரலை உயர்த்தி என் மீது கோபத்துடன் திட்டினீர்கள்.
தங்க நாணயங்களை எடுத்துச்செல்வதற்கு முன்பும் என்னுடைய அறிவு என்னுடன் இருந்தது, தங்கக் காசுகளை அரசனிடம் கேட்காமல் எடுத்துச்சென்ற பிறகும் அது என்னிடம் உள்ளது. ஆனால், நான் நடத்தையில் தவறியவன் என என்னைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவுடனே, என் மேல் கொண்டுள்ள மரியாதையை இழந்துவிட்டீர்கள்.
என் நடத்தையின் காரணமாகவே நீங்கள் என்னை மதிக்கிறீர்கள், ஆனால் எனது நடத்தை மாறியவுடன், என்னைப் பற்றிய எண்ணங்களும் மாறிவிட்டன, அதனால் உங்களால் என்னை மதிக்க முடியவில்லை." என நீண்ட விளக்கமளித்தார்.அரசன் அதனை புரிந்துகொண்டு அரசகுவைப் பாராட்டினார்.நமது நடத்தை நன்றாக இல்லை என்றால், நாம் எவ்வளவுதான் கல்வி, பதவி , செல்வம் கூட நம்மிடம் இருந்தாலும் நம்மை யாரும் மதிக்கமாட்டார்கள்.
ஞாயிறு, 16 ஜூலை, 2023
அறிவு அல்லது நடத்தை எது பெரியது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக