சனி, 24 ஆகஸ்ட், 2019

ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத்தேர்வு


நிறுவனத்தின் நிருவாகி: உன்னைபற்றி சொல்.
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்: நீ என்பதற்கான பதில் பெயரே உன்னை என்பதாகும் ஐயா!
நிறுவனத்தின் நிருவாகி: இந்த நிறுவனத்தில் நீ என்னஎதிர்பார்க்கின்றாய்?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்: இந்த நிறுவனம் மாதாமாதம்எனக்கு சரியாக சம்பளம் கொடுக்குமா என்பதே என்னுடைய எதிர்பார்ப்புகள் ஐயா!
நிறுவனத்தின் நிருவாகி: முந்தைய நிறுவனத்தில் பணிபுரியும்போது உன்னுடைய சாதனை என்ன?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்: அங்கு மதியம் சாப்பிட்டபின்னர் பணியிடத்தில் தூங்காமல் விழித்திருப்பதுதான் என்னுடைய மிகமுக்கியமான சாதனையாகும் ஐயா!
நிறுவனத்தின் நிருவாகி: ஏன் இந்த நிறுவனத்திற்கு பணிபுரியவரவிரும்புகின்றாய்?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்: வேறு எந்த நிறுவனமும் என்னை நேர்முகத்தேர்விற்கு அழைக்கவில்லை அதைவிட இந்த நிறுவனம் என்னுடைய வீட்டிற்கு அருகில் உள்ளது அதனால்தான் ஐயா!
நிறுவனத்தின் நிருவாகி: ஏன் முந்தைய நிறுவனத்தின் பணியை விட்டு வெளியில் வந்துவீட்டீர்?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்: முன்பு நான் பணிபுரிந்த நிறுவனமானது தன்னுடைய அலுவலகத்தை வேறு எங்கோ இடம் மாற்றிகொண்டதுர் அவ்வாறுஅந்தஅலுவலகத்தினை எங்கு மாற்றினார்கள் என அதன் மாற்றப்பட்டமுகவரி பற்றி எனக்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை அதனால் அந்தநிறுவனத்தின் பணியை வீட்டுவிட்டேன்ஐயா!
நிறுவனத்தின் நிருவாகி: இந்த நிறுவனத்தில் மாதத்தில் இருபத்திநான்கு நாட்கள் வெளியில்பயனம் செய்யவேண்டும் அவ்வாறான பணியை செய்யமுடிமா?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்: ஆஹா! ஊர்சுற்றும் பணியென்றால் எனக்கு மிகவும் விருப்பமானதுதான் ஐயா! ஆனால் நான் எங்கு செல்கின்றேன் என்றுமட்டும் கேள்விகேட்ககூடாது!.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...