சனி, 28 செப்டம்பர், 2019

நம்முடைய வாழ்க்கையில் பணத்தினால் நமக்கான மகிழ்ச்சியை வாங்க முடியாது


ஒருபணக்கார, விலையுயர்ந்த ஆடை அணிகலண்களை அணிந்த பெண் மனநல மருத்துவ ஆலோசகர் ஒருவரிடம் சென்று தன்னுடைய வாழ்க்கையில் முழுவதும் தனக்கு வெறுமையாகவும் பயனற்றதாகவும் இருப்பதாக புகார் அளித்தார், மேலும் தன்னுடைய கணவன் காலமான பிறகு தான் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பெரிய வீட்டில் தான் மட்டும் தனியாக நெடுமராக நின்றுவிட்டதாகவும் தன்னுடைய பெரிய வீடு ,அதில் தற்போது உள்ள ஆடம்பரமான கார், விலையுயர்ந்த வீட்டு உபயோகபொருட்கள், பிரஞ்சு வாசனை திரவியம், பாரசீக தரைவிரிப்பு, இறக்குமதி செய்யப்பட்ட இசைக்கருவிகள்ஆகியவை அனைத்தும் தனக்கு பயனற்ற பொருட்களாக தோன்றுவதாகவும் கூறினாள் . அதுமட்டுமல்லாது மிகநீண்ட சிந்தனைக்குப் பிறகு, தான் ஏதாவது செய்யவேண்டும் என முடிவு செய்ததாகவும் ஆயினும் அடுத்து என்ன செய்வது எனும் மிகப்பெரிய கேள்விக்கு தன்னால் விடை காண முடியாமல் தொக்கி நிற்பதாகவும் . எனவே தனக்கு மிக நிரந்தரமான நீண்டகால மகிழ்ச்சியைத் அடைவதற்கான ஆலோசனை கூறி வழிகாட்டிடும் ஒரு ஆலோசகரைப் தேடிவருவதாகவும் அவ்வாறான ஆலோசகர் தாங்கள்தான் அதனால் தாங்கள் தனக்கு இந்நிலையில்தக்க ஆலோசனைகளைகூறி வழிகாட்டிடுமாறு அவரிடம் கோரினாள்.

உடன் அந்த ஆலோசகர் தன்னுடைய அலுவலக மாடிகளை சுத்தம் செய்துகொண்டிருந்த ஒரு வயதான பெண்மணியை அழைத்தார். பின்னர் ஆலோசகர் அந்த பணக்கார பெண்மணியிடம், "மாரியம்மாவிற்கு எப்படி மகிழ்ச்சி கிடைத்தது என்பதைக் அவர் கூறுவதை தாங்கள் இங்கே கேட்கப் போகின்றீர்கள். நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், அந்தம்மாள் கூறுவதைசிறிது செவிசாய்த்து கேட்டால் மட்டும் போதுமானதாகும்" என்று கூறி மாரியம்மாவை தன்னுடைய வாழ்க்கை பற்றிய கதையை அந்த பணக்கார பெண்மணியிடம் விவரமாக எடுத்துகூறிடுமாறு கேட்டு கொண்டார் அந்த மனநலஆலோசகர்.

அதனை தொடர்ந்து அந்த வயதான துப்புரவுப் பணிபுரியும் மாரியம்மாள் தன்னுடைய கையில் வைத்து பணிசெய்துகொண்டிருந்த விளக்குமாறை கீழே போட்டுவிட்டு வந்து அந்த பணக்கார பெண்மணிக்கு அருகிலிருந்தவொரு நாற்காலியில் அமர்ந்து தன்னுடைய கதையை கூற ஆரம்பித்தாள் "என் கணவர் மலேரியாவால் இறந்தார், பின்னர் மூன்று மாதங்களுக்குப் பிறகு எங்களது ஒரே மகன் கார் விபத்தில் கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து எனக்கு உதவ யாரும் வரவில்லை எனக்கு பேச்சுதுனைக்குகூட யாரும் அருகில்இல்லை. எனக்கு எதுவும் இல்லை எல்லாமே இழந்துவிட்டது போன்ற ஒரு வெற்றிடம் என்கண்முன் நின்று என்னை பயமுறுத்தியது அதனால்இரவில். என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை, சரியாக வேளாவேளைக்குஎன்னால் சாப்பிட முடியவில்லை, அதனால் என்னுடைய வாழ்க்கையை அன்றோடு முடிந்தது என்று துக்கத்தில் அழக்கூடமுடியாதல் தத்தளித்து தவித்துகொண்டிருந்தேன்" .

"இந்நிலையில் அன்றொருநாள் மாலை, வீட்டிற்கு வெளியில் சென்று திரும்பி வரும்போது சிறிய பூனைக்குட்டியொன்று என்னைப் பின்தொடர்ந்து வீட்டிற்குள் உள்நுழைந்தது அது குளிர்காலமானதால் வெளியே மிகவும் குளிர்ச்சியாக இருந்தது அதனால் அந்த பூனை குட்டியை பார்க்க மிகபாவமாக இருந்தது . அதற்கு எப்படியாவது உதவவேண்டும் என எண்ணி அந்த பூனைக்குட்டியை உள்ளே விட முடிவு செய்தேன். மேலும் கொஞ்சம் பாலை காய்ச்சி அந்த பூனைக்குட்டிக்காக ஒரு தட்டில் ஊற்றினேன் அதனைதொடர்ந்து, அந்த பூனைக்குட்டி தட்டை சுத்தமாக நக்கி பாலைகுடித்துவிட்டு என்னுடைய காலடியில் வந்து என்னுடைய பாதத்தில் தன்னுடைய முகத்தினை தேய்த்தது அப்படியே என்னுடைய காலடியில்படுத்து கொண்டது அதனை கண்டவுடன் , ஒரு சிறிய உயிருள்ள மிருகத்திற்கு சிறிதளவு உதவியஉடன் தனக்கு உதவியவர்களுக்கு தன்னுடைய நன்றியைஎவ்வாறு தெரிவித்து கொண்டதென அறிந்து முதன் முறையாக என்னுடைய மனதில் மகிழ்ச்சியுடன் நான் சிரித்தேன்."

"ஒரு சிறிய பூனைக்குட்டிக்கு உதவுவது என்னைப் புன்னகைக்கச் செய்ததால், அதேபோன்று இவ்வுலகில் வாழும் மக்களுக்காக ஏதாவது உதவிசெய்வது என்னை மேலும் மகிழ்ச்சியாக மாற்றக்கூடும் என்று நான் நினைத்தேன். எனவே அடுத்த நாள் நான் கோதுமைமாவினால் சிலரொட்டிகளை சுட்டெடுத்துகொண்டு, பக்கத்து வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக படுக்கையில்இருந்த ஒரு வயதானவரிடம் கொடுத்து உண்ணுமாாறு உபசரித்தேன் உடன் அவர் மிகமனமகிழ்வுடன் தன்னுடைய மகளைபோன்று தனக்கு உதவியதற்கு மிகவும் நன்றிகூறினார் . இவ்வாறே ஒவ்வொரு நாளும் நான் யாராவது ஒருவருக்கு உதவிய செய்திட முயற்சித்தேன். அதனை தொடர்ந்து அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்று, என்னை விட நன்றாக நிம்மதியுடன் தூங்கும் மனமகிழ்ச்சியுடன் சாப்பிடும் யாரையும் நான்பார்க்கவில்லை. தற்போது மற்றவர்களுக்கு ஏதாவது உதவி செய்வதன் மூலம் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். "என்று கூறினாள்

இவ்வாறு மாரியம்மாள் கூறியதை கேட்ட பணக்கார பெண்மணி "இந்த உலகில் பணத்தினால் வாங்கக்கூடிய அனைத்து பொருட்களையும் என்னிடம் வைத்திருக்-கின்றேன், ஆனால் அவ்வாறான பணத்தினால் எனக்கான மகிழ்ச்சியைகூட வாங்கமுடியும் என இதுவரை இறுமாந்திருந்தேனே" என மிகவும்ஓலமிட்டு அழ ஆரம்பித்ததாள்.

நம்முடைய வாழ்க்கையில் பணத்தினால் நமக்கான மகிழ்ச்சியை வாங்க முடியாது அதற்கு பதிலாக மற்றவர்களுக்கு உதவுகின்ற நம்முடைய செயலால் மற்றவர்களை எவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்பதைப் பொறுத்து நம்முடைய மகிழ்ச்சியான வாழ்க்கைஅமைந்திருக்கும் .என தெரிந்து கொண்டாள் அந்த பணக்கார பெண்மணி அதன்பிறகு அந்த பணக்கார பெண்மனி அந்த நகரின் ஒரு தொண்டு நிறுவனத்தின் தலைவரானார். இப்போது அந்த பெண்மணி மக்களுக்கு சேவை செய்வதிலும், அவர்களுக்கு அன்றாடம் மகிழ்ச்சியைக் அளிக்க கூடிய செயல்களை கண்டுபிடிப்பதிலும் மும்முரமாக இருக்கின்றார் .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...