சனி, 21 செப்டம்பர், 2019

எப்போதும் நல்லவைகளையே அனைவரின் பார்வையில் படுமாறு மாற்றி கொண்டுசெல்வது சிறந்தது


.முன்னொரு காலத்தில் அரசனொருவன் இருந்தான் அவன் அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்ற நல்ல திறனுடைய அரசனாக அரசுபுரிந்து வந்தான் ஏதோவொரு அசம்பாவித நிகழ்வினால் அவனுடைய ஒரு காலும் ஒரு கண்ணும் இழந்துவிட்டான் ஆனாலும் அனைவராலும் விரும்பம்படுமாறு திறனுடன் ஆட்சி புரிந்துவந்தான் தன்னைபற்றிய நினைவுகள் பிற்காலத்தில் நிலையாக இருக்கவேண்டுமெனில் தலைநகருக்கு அருகிலிருந்த மலைகுன்றுகளில் தன்னை அழகிய ஓவியமாக வரைந்துவைத்தால் நல்லது என திட்டமிட்டு அவ்வாறு தன்னை அழகிய ஓவியமாக வரைந்திடுமாறு கேட்டு கொண்டான் அதனடிப்படையில் பலஓவியர்களும் உடல் குறைபாடுகளுடைய அரசனை எவ்வாறு அரசன் கோரியவாறு ஒரு அழகிய ஓவியமாக வரைய முடியும் என தயங்கினர் மயங்கினர் ஆனாலும் ஒரு ஓவியர் மட்டும் அரசன் காட்டில் வேட்டையாடும்போது அம்பினை குறிபார்ப்பது போன்று ஒரு கண்மட்டும் தெரியுமாறும் மற்றொருகண் மறைந்திருக்குமாறும் அவ்வாறே குறிபார்ப்பதற்கு ஏதுவாக ஒருகாலை மடித்து நிற்குமாறு அரசனுடைய குறைகளை மறைத்து சிறந்த ஓவியமாக தெரியுமாறு அரசனை ஓவியமாக வரைந்தார் அரசனின் உடலில் பல குறைபாடுகள் இருந்தாலும் அவைகளை பார்ப்பவர்கள் காணமுடியாமல் மறைத்து சிறந்த உயிரோட்டமுடைய ஓவியமாக வரைந்ததை அனைவரும் பார்த்து புகழ்ந்தனர் அவ்வரசனும் அந்த ஓவியனுக்கு வாக்களித்தவாறு ஓவியம் வரைவதற்காக பொன்னும் பொருளும் வழங்கி கவுரவித்தான் அதேபோன்று நம்முடைய வாழ்வில் எதிர்படும் நல்லவைகள் கெட்டவைகள் ஆகியவற்றில் எப்போதும் நல்லவைகளையே அனைவரின் பார்வையில் படுமாறு மாற்றி கொண்டுசெல்வது சிறந்தது எனமதில் கொள்க.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...