திங்கள், 15 டிசம்பர், 2014

எந்தவொரு கேள்விக்கும் அவரவர் சூழ்நிலைக்கு தக்கவாறுதான் அதற்கான பதிலும் கிடைக்கும்


வகுப்பு ஆரம்பித்தவுடன் இரண்டாம் வகுப்பிற்குள் நுழைந்த கணித ஆசிரியர் அவ்வகுப்பில் படிக்கும் மாணவர்களில் ஒருவனிடம் "தம்பி! நான் ஒரு மாம்பழம் உன்னிடம் தருகின்றேன் ,மற்றொருமாம்பழம் தருகின்றேன் , மீண்டும் ஒருமாம்பழம் தருகின்றேன் என்றால் மொத்தம் எத்தனை மாம்பழம் உன்னிடம் இருக்கும்?" என கேட்டார்.

உடன் தயக்கமே இல்லாமல் அவனும் " நான்கு மாம்பழம் என்னிடம் இருக்கும் ஐயா!" என பதிலிறுத்தான். இதனை கேள்வியுற்றதும் என்ன நம்முடைய வகுப்பு மாணவர்களுள் இவன் மட்டும் கணிதத்தில் இவ்வளவு மக்காக இருக்கின்றானே! என யோசித்து "தம்பி! நன்றாக கவணி! நான் ஒரு மாம்பழம் உன்னிடம் தருகின்றேன், மற்றொருமாம்பழம் தருகின்றேன், மீண்டும் ஒருமாம்பழம் தருகின்றேன் என்றால் மொத்தம் எத்தனை மாம்பழம் உன்னிடம் இருக்கும்?" என கேட்டபோது மீண்டும் தயக்கமில்லாமல் "நான்கு மாம்பழம்தான் என்னிடம் இருக்கும் ஐயா!" என பதிலிறுத்தான்.

அவனுடைய தவறான பதிலை கேட்டவுடன் கோபம் அதிகமானாலும் வேறுவகையில் கேட்போம் என" தம்பி! நன்றாக கவணி! நான் உன்னிடம் ஒரு கொய்யாபழம் தருகின்றேன், மற்றொருகொய்யாபழம் தருகின்றேன், மீண்டும் ஒருகொய்யாபழம் தருகின்றேன் என்றால் மொத்தம் எத்தனை கொய்யாபழம் உன்னிடம் இருக்கும்?" என கேட்டபோது ஆசிரியரின் முகத்தை பார்த்து அவனும் உடனடியாக "மூன்று கொய்யாபழம் என்னிடம் இருக்கும் ஐயா!" என பதிலிறுத்தான். "பார்த்தாயா தம்பி! இப்போது நான்கூறிய கொய்யாபழ கணக்கைமட்டும் சரியாக கவணித்து கணக்கிட்டு சரியான விடையை கூறிவிட்டாய் பரவாயில்லை ஆனால் சற்றுமுன்பு நான் கேட்ட மாம்பழ கணக்கிற்கு சரியான பதிலை கூறு!" என மீண்டும் கேட்டபோது மறுபடியும் தயக்கமில்லாமல் நான்கு மாம்பழம் என்னிடம் இருக்கும் ஐயா!" என பதிலிறுத்தான்

அவனுடைய தவறான பதிலை கேட்டவுடன் கோபம் அதிகமானாலும் கட்டுபடுத்தி கொண்டு கொய்யாபழ கணக்கை சரியக கூறுகின்றாயே ஆனால் ஏன்தம்பி மாம்பழ கணக்கில் மட்டும் தவறான விடை கூறுகின்றாய் என பொறுமையாக கணிதஆசிரியர் அம்மாணவனிடம் விசாரித்தபோது "ஐயா! என்னிடம் ஏற்கனவே ஒருமாம்பழம் கால்சட்டைபையில் வைத்துள்ளேன் அதனோடு நீங்கள் மூன்று மாம் பழம் கொடுத்தால் என்னிடம் நான்கு மாம்பழம் தானே இருக்கும் அதனால்தான் முதல் கணக்கிற்கு அவ்வாறு நான்குமாம்பழம் என விடை கூறினேன் ஆனால் என்னிடம் கொய்யாபழம் எதுவும் இல்லை அதனால் நீங்கள் இரண்டாவதாக கேட்ட கொய்யாபழ கணக்கிற்கு மூன்று என கூறியதை நான் சரியாக பதில் கூறியதாக முடிவுசெய்தீர்கள்!" என பதிலளித்தான்.

ஆம் நாம் கோரும் எந்தவொரு கேள்விக்கும் முன்கூட்டியே நாம் முடிவுசெய்தவிடைக்கு பதிலாக எதிர்பார்க்காத விடைகிடைக்கின்றது எனில் விடைகூறுபவரின் பக்கத்திலிருந்து யோசித்தால் சரியோ தவறோ அவரவர் சூழ்நிலைக்கு தக்கவாறுதான் அதற்கான பதிலும் கிடைக்கும் என இதிலிருந்து முடிவுசெய்து கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...