சனி, 25 பிப்ரவரி, 2023

அரசனும் ஒருவிவசாயியும் - சம்பாதித்த பணத்தின் பயன்பாடு

 ஒரு நாள் ஒருநாட்டின் மன்னர் மாறுவேடத்தில் தனது நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அவ்வாறு  சுற்றுப்பயணம் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு கிராமத்தின் வயல் அருகே சென்றார், அங்கு கிழிந்த ஆடைகளை அணிந்திருந்த விவசாயி  ஒருவர் மரத்தின் நிழலில் அமர்ந்து உணவு உண்டுகொண்டிருந்தார்.
அவ்விவசாயியின் கிழிந்த ஆடைகளைப் பார்த்த மன்னன், "இந்த விவசாயி தன்னுடைய வாழ்க்கையில்  நன்கு வசதியுடன் வாழ  சில பொற்காசுகளைக் கொடுக்க வேண்டும்" எனமுடிவுசெய்தார்.
அரசன் அவ்விவசாயியுடன்  சிறிது நேரம் கலந்துரையாடியபின், "நான் உன்னுடைய நிலத்தின் வழியாகவந்து கொண்டிருந்தபோது, உன்னுடைய வயலில் இந்த நான்கு பொற்காசுகளைக் கண்டேன்.  இவை உங்களுடைய வயலில் கிடைத்ததால், நீங்கள்தான் அவற்றிற்கான உரிமையாளர் இந்தாருங்கள் இவற்றை வைத்துக் கொள்ளுங்கள்." எனக்கூறியவாறு அப்பொற்காசுகளை விவசாயியிடம் வகொடுத்தார்
உடன்விவசாயி, "வேண்டாம் ..ஐயா அவை என்னுடைய நிலத்தில் கிடைத்தாலும் அவை என்னுடைய  நாணயங்கள் அல்ல, அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் அல்லது வேறு யாருடையது என தேடிப்பிடித்து அவருக்கு கொடுங்கள். அவை எனக்கு தேவையில்லை" எனக்கூறி அவற்றை வாங்க மறுத்துவிட்டார்.
அரசன் விவசாயியின் அவ்வாறான மிகவும் விசித்திரமான   பதிலை கேட்டு மிக ஆச்சரியத்துடன், "யாரும் பொற்காசுகளை கொடுத்தால் எனக்குத் தேவையில்லை! எனக்கூறமாட்டார்கள் நீங்கள் ஏன் இவற்றை  வேண்டாம் என்று கூறுகிறீர்கள்" என வினவினார்.
உடன் விவசாயி"ஐயா, நான் தினமும் நான்கு அணாக்கள் (பழைய இந்திய நாணயம்) சம்பாதித்தாலே எனக்கு போதுமானதாக எண்ணி,  மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவருகின்றேன்.. எனக்கு தற்போது அவ்வாறானஅளவிற்கு வருமானம் கிடைக்கின்றது  அதற்கு மேல் இந்த பொற்காசுகள் எனக்கு தேவையேயில்லை", விவசாயி விளக்கமளித்தார்.
மன்னன் மிகவும் வியந்து, "என்ன? நான்கு அணா மட்டுமே சம்பாதித்தாலே, போதுமென மகிழ்ச்சியாக இருக்கின்றேன் எனக்கூறுகின்றீர்களே. அது எவ்வாறு சாத்தியமாகும்?" என வினவினார்
அதற்கு விவசாயி, "ஐயா, நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் அல்லது எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து மகிழ்ச்சி இல்லை. மகிழ்ச்சி என்பது உங்களுடைய பணத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பொறுத்தது ஆகும்" ,  என பதிலிருத்தார் .
"அப்படியானால் உங்களுடைய நிலத்தில் கிடைத்த இந்த நான்கு பொற்காசுகளை நான் என்ன செய்வது?" என்று கிண்டலாக  கேட்டார் அரசர்.
விவசாயி அவசரமாக, தன்னுடைய நிலத்தில்வீடுபட்ட வேலையை செய்வதற்கு கிளம்பிகொண்டிருந்தார் அதனால் அதற்கு  முன்,அரசன் வழங்கவிருந்த பொற்காசுகளை பெறாமல் மறத்துதால் அதனை என்ன செய்வது என்ற கேள்விக்கு பதில் கூறவேண்டுமல்லவா அதனால்"இந்த நான்கு பொற்காசுகளில் ஒன்றை  கிணற்றில் போட்டுவிடுங்கள், இரண்டாவதைகொண்டு உங்களுடைய கடனை அடைத்து,கடன்கணக்கினை நேர்செய்துகொள்ளுங்கள் மூன்றாவதை    கடனாகக் கொடுத்துவிடுங்கள், நான்காவது காசினை மண்ணில் புதைத்துவிடுங்கள்" என்று கூறினார்.
அரசனுக்கு விவசாயியின் அந்த பதிலின்படி அந்த நான்கு பொற்காசுகளை என்னசெய்வது என புரியாமல் திகைத்துநின்றுவிட்டார். விவசாயியின் அந்த பதிலிலால் அரசனுக்கு எழுந்த சந்தேகத்தினை தீர்வுசெய்திடுமாறு அவ்விவசாயியிடமே கேட்க விரும்பினார், ஆனால் அரசன் அந்த சந்தேகத்தினை கேட்பதற்கு முன், விவசாயி தனது வயலில் வேலையை தொடர்ந்து செய்வதற்குச் சென்றுவிட்டார்.
அதனால் அரசன் விளக்கமெதுவும் பெறாமல் தனது அரண்மனைக்குத் திரும்பினார், மறுநாள் காலையில் தன்னுடைய அரசவையை கூடியவுடன், நேற்றைய நிகழ்வை முழுவதுமாக விவரித்தார், மேலும் விவசாயி அவ்வாறு கூறிய செயாதிகாகான விளக்கத்தைஅனைவரிடமும் கேட்கத் தொடங்கினார்.
அரசவையினர் தத்தமது சொந்த கருத்துகளை மட்டுமேகூறினர், ஆனால் யாராலும்விவசாயி கூறியதற்கான சரியான விளக்கத்தை கூற முடியவில்லை, இறுதியில் அவ்விவசாயியையே அரசவைக்கு நேரில்அழைத்து விளக்கம் கோரலாம் எனமுடிவு செய்யப்பட்டது. நீண்டநாட்களுக்குப் பிறகு, விவசாயி  அரசவைக்கு வந்து சேர்ந்தார், . அப்போது அரசன் தனது மாறுவேடப் பயணத்தைப் பற்றி விவசாயியிடம் கூறி, அவரை மரியாதையுடன் அரசவையில் உட்கார வைத்தார்
அரசன், "உங்கள் பதிலால்  நான் அதிகம் ஈர்க்கப்பட்டேன், உங்களுடைய அந்த நான்கு பொற்காசுகளை செலவிடும் விளக்கத்தை அறிய விரும்புகிறேன். தயவுசெய்து நீங்கள் அதை விளக்கமாக இந்த அவைக்கு கூறிடுங்கள்?" என கோரியபோது  விவசாயி, "அரசே, நான்சொன்னது போல், கிணற்றில் ஒரு பொற்காசினை போடுங்கள் என்றால், குடும்பத்தை பராமரிக்க செலவிடுங்கள் என்பதாகும் இரண்டாவதை,கொண்டு கடனை அடைத்து, கடன்கணக்கினை நேர்செய்துகொள்ளுங்கள் என்றால் நம்முடைய பெற்றோரின் கடனை அடைத்திடுங்கள்என்பதாகும் அதாவது,  வயதான பெற்றோரின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை பராமரித்தலாகும்.
மூன்றாவதை    கடனாகக் கொடுத்துவிடுங்கள் என்றால் நம்முடைய குழந்தைகளை நன்கு பராமரித்து அவர்களின் கல்விக்காக செலவிடுங்கள் என்பதாகும், நான்காவது  கினற்றில் போடுதல் என்பது, அந்த பொற்காசினை சேமித்து வைத்தால்  பிற்காலத்தில்தேவையானபோது யாரிடமும் கடன் வாங்காமல் அந்த சேமிப்பிலிருந்து பயன்படுத்தலாம்  என்பதாகும்." என நீண்ட விளக்கமளித்தார்
என்ன வாசகரே நீங்களும் சம்பாதித்த பணத்தை  அவ்வாறு  சரியாக செலவிடுவீர்களா

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...