ஞாயிறு, 5 மார்ச், 2023

பறவையின் கோரிக்கை மரம் மறுப்பு! நிராகரிப்பு பற்றிய கதை

 
பருவகாலம் மாறி மழைகாலம் வரவிருந்தது. அதனால் மழைவருவதற்குள் தங்களுக்கு ஒரு கூடு கட்டினால்தான் தாங்கள் மழைகாலத்தில் பாதுகாப்பாக வாழமுடியும் என முடிவுசெய்து எந்த மரத்தில் கூடுகட்டினால் நன்றாக இருக்கும் என ஒரு ஜோடி பறவைகள் தங்களுக்கான கூடு கட்ட மரத்தைத் தேடிக் கொண்டிருந்தன. அவ்வாறு அவை பொருத்தமான மரத்தினை தேடிபறக்கும் போது ஆற்றின் கரையோரத்தில் பலமரங்கள் இருப்பதைப் பார்த்தன . அவைகளுள் தங்களுக்கு கூடு கட்டுவதற்கு ஏற்ற மரம் ஒன்றைக் கண்டன.
அப்பறவைகள் அம்மரத்திற்குஅருகில் சென்று, "மழைக்காலம் வருவதற்கு முன் நாங்கள் வாழ்வதற்கான ஒரு கூடு கட்ட வேண்டும், தயவுசெய்து உங்கள் கிளைகளில் ஒன்றில் எங்களுக்கான கூடு கட்ட அனுமதிக்கின்றீர்களா" என அனுமதி கேட்டன.
உடன் அந்த மரமானது, "இல்லை, என்னுடைய கிளைகளில் உங்களுக்கான கூட கட்ட அனுமதிக்க முடியாது" என்று மறுத்தது. அப்பறவைகள் அம்மரத்திடம் பலமுறை கெஞ்சியும் அம்மரம் ஒப்புக்கொள்ளவில்லை
அந்த மரம் தங்களுக்கான கூடகட்டமறுத்ததால் பறவைகள் சோகமடைந்தன. அப்பறவைகள் தங்களுக்கான கூடுகட்டுவதற்காக வேறு ஏதாவது பொருத்தமான மரத்தினை தேடிகண்டுபிடிப்போம் என புறப்படத் தயாராகும்போது அவை அம்மரத்திடம், "இப்படிப்பட்ட ஆணவம் நல்லதன்று. ஒரு நாள் நீ உன் அகங்காரத்தினால்வேரோடு முறிந்து அழிந்து போவாய், ." எனக்கூறிச் சென்றன.
அப்பறவைகள் அவ்வாறு கூறியபோது மரம் எதுவும் பதிலுக்கு சொல்லும் முன், அப்பறவைகள் விருட்டென்று பறந்து சென்றன.
பறவைகள் தங்கள் தேடலைத் தொடர்ந்தன, விரைவில் அருகிலிருந்த காட்டினை அடைந்தன.அந்தகாட்டில் ஏராளமாக மரங்கள் இருந்ததால் அந்த பறவைகள் மிகவும் மகிழ்ச்சியுற்று தங்களுக்கு கூடுகட்டுவதற்கான பொருத்தமான மரமொன்றினை தேடிக்கண்டுபிடித்து அதில் தங்களுக்கான கூடுஒன்றினை கட்டி மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தன, விரைவில் மழைக்காலம் வந்தது. இரண்டு பறவைகளும் இப்போது தங்கள் கூட்டில் மிகவும்பாதுகாப்பாக இருந்தன
ஒரு நாள் மிக பலமாக புயல் ஒன்று வீசியது அதனோடு இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்தது, அந்த பலமாக வீசி புயலாலும், பலத்த மழையினாலும், பறவைகளுக்கு கூடு கட்டுவதற்கு அனுமதி மறுத்த  மரம் வேறோடு தரையில்  விழுந்தது. அதனோடு மழையினால் ஆற்றில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடியது அவ்வெள்ளத்தில்  பறவைகளுக்கு கூடு கட்டுவதற்கு அனுமதி மறுத்த  மரம் அடித்து செல்லப்பட்டது
மழை நின்றதும்.அப் பறவைகள் உணவு தேடி பறந்தன. அவை ஆற்றின் மேல் பறந்து சென்றுகொண்டிருந்தபோது, ஆற்றின்  வெள்ளத்தில் தங்களுக்கு கூடு கட்டுவதற்கு அனுமதி மறுத்த  மரம் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டன.
 மரத்தின் நிலையைப் பார்த்த, அப்பறவைகள் கீழே தாழபறந்து அந்த மரத்தின் அருகே சென்று, "ஒரு நாள் நீ உன் அகங்காரத்தினால்  உன்  வேரோடு முறிந்து அழிந்து போவாய், என்று நாங்கள் கூறினோம். இன்று அந்த நாள் வந்துவிட்டது. இது உன் அகங்காரத்தின் விளைவு" என்றன.
அதற்கு மரம், "பறவைகளே நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள். மழைகாலத்தில் நான் இவ்வாறு வேறோடு பெயர்ந்து வீழ்ந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவேன் என்றும், இந்த மழைக்காலத்தில் தொடர்ந்து என்னால் வாழ முடியாது என்றும் எனக்குத் தெரியும். அதனால்தான் நான் அன்று உங்களுக்கான கூடுகட்டுவதற்காக மறுத்தேன்.
என் கிளையில் நீங்கள் கூடு கட்டியிருந்தால் இன்று நீங்களும் உயிருடன் இருந்திருக்க மாட்டீர்கள் உங்களுடைய கூட அழிந்து போயிருக்கும். அன்று, இதையெல்லாம் உங்களிடம் விவரமாக சொல்ல முடியவில்லை, நான் மறுத்ததால் நீங்கள் வருத்தப்பட்டீர்கள். பரவாயில்லை நீங்களாவது மகிழ்ச்சியோடு வாழுங்கள்." என நீண்ட விளக்கமளித்தது
மரத்தின அவ்வாறான நீண்ட விளக்கத்தை கேட்டவுடன், பறவைகள் அன்று தாங்கள் மரத்திடம் அவ்வாறு கோபமாக பேசியதை எண்ணி மிகவும் வருத்தமடைந்தன, தாங்கள் முன்பு அவ்வாறு கூறியதற்கு தங்களை மன்னித்திடுமாறு அமரத்திடம் மன்னிப்பு கோரின.
கற்றல்:
நாம் நம்முடைய வாழ்க்கையில் பல நேரங்களில் ஏதாவதொரு நிராகரிப்பை  சந்திக்க வேண்டியிருக்கும். கண்டிப்பாக அவ்வாறான, நிராகரிப்பைக் கேட்க யாரும் விரும்ப மாட்டார்கள். நிராகரிப்பு நம் உணர்வுகளைப் புண்படுத்துகிறது, இருந்தபோதிலும் அந்த நேரத்தில் நாம் நம்முடைய உணர்வுகளைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம்.
அவ்வாறு மறுத்தவர்களுக்கு அதற்கான காரணங்கள் இருந்திருக்க வேண்டும் அல்லது நம்முடைய நலனுக்காக கூட மறுத்திருக்க முடியும் என்பதை நாம் திறந்த மனதுடன் சிந்திப்பதில்லை.
எனவே, "இல்லை" என்று யாராவது கூறினால், அதனால் மனதில் வருத்தம் கொள்ளாதீர்கள் அவர்மீது கோபப்படாதீர்கள். அவரைப் பற்றி தவறாக நினைக்காதீர்கள். யாரோ ஒருவரின் "இல்லை" என்பது நம்மை ஏதேனுமொரு பெரிய சிக்கலில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதற்காக கூட இருக்கலாம். என மனத்தில் மகிழ்ச்சியடைந்திடுக

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...