ஞாயிறு, 26 மார்ச், 2023

பணக்காரனாக வேண்டும் - ஏழையின் வேண்டுகோள்

 முன்னொரு காலத்தில் ஒரு பரமஏழை இருந்தார். அவர் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு ஆசிரமத்திற்கு தினமும் செல்வார்
தினமும் அவ்வாசிரமத்தில் துப்புரவு பணி செய்து  வந்தார். அதன் பிறகுதான் அவர் தன்னுடைய அன்றாட பணிசெய்வதற்குச் செல்வார்.
ஒரு நாள், அவ்வாசிரமத்தின் குரு அவ்வேழையிடம், "நீங்கள் ஏன் தினமும் ஆசிரமத்திற்கு வருகிறீர்கள்?" என வினவியபோது
அதற்கு ஏழை, "ஐயா நீங்கள் என்னை ஆசீர்வதித்தால், எனக்கு நிறைய செல்வம் கிடைக்கும் அதனால் நான் பெரிய பணக்காரனாகி நிம்மதியாக வாழ்வேன்" என்று பதிலளித்தார்.
குரு , "நீ இங்கு வருவது அதற்காக மட்டும்தானா?" என வினவியபோது
உடன் அந்த ஏழையானவர் "ஆம்,ஐயா" என நேர்மையாக ஒப்புக்கொண்டார்.
அந்த ஏழையானவர் தொடர்ந்து, "ஒரு வண்டியில் ஏராளமாக சரக்குகளை  ஏற்றி சென்று விற்பதும். அதனடிப்படையில் நிறைய பணம் சம்பாதிப்பதும்தான் எனது நோக்கம், அதனால்தான் உங்களுடைய ஆசிரமத்திற்கு தினமும் உங்களை பார்க்க வந்து செல்கின்றேன், நான் மகிழ்ச்சியாக வாழும் நாட்கள் எப்போது வரும் என்று எனக்குத் தெரியவில்லை." என கூறினார்
குரு, "கவலைப்படாதே. நேரம் வரும்போது வாய்ப்புகளின் கதவுகள் உன் முன் திறக்கும்" என்றார்.
ஏழை தன்னுடைய வழக்கமான பணி செய்வதற்கு சென்றார் காலம் மிகப்பெரிய  திருப்பத்தை கொடுத்தது, விரைவில் அந்த ஏழை மனிதன் அதிக பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். அதனால் ஏற்பட்ட  அதிக பணிச்சுமை யினால் ஆசிரத்திற்கு வழக்கமாக செல்வதை நிறுத்தினார்.
பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு நாள் காலை , அந்த மனிதர் ஆசிரமத்தில் முன்பு போன்று சுத்தம் செய்யும் பணியை செய்து கொண்டிருந்தார்.
அதனைப் பார்த்த குரு ஆச்சரியமாக, " ஏன் என்ன செய்தி இத்தனை வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கிறாய். நீ பெரிய பணக்காரன் ஆனாய் என்று கேள்விப்பட்டேன்" என்று கேட்டார்.
அதற்கு அந்த மனிதர், "நான் நிறைய பணம் சம்பாதித்தேன். என் பிள்ளைகளுக்கு நல்ல வீடுகளில் திருமணம் நடந்தது. எதற்கும் குறைவில்லை ஆனால் இன்னும் என்  மனதில் மட்டும் அமைதி இல்லை.
நான் தினமும் இங்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் வர முடியவில்லை. ஐயா, நீங்கள் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தீர்கள், ஆனால் வாழ்க்கையின் அமைதியை மட்டும் கொடுக்கவில்லை." எனக்கூறினார்.
தொடர்ந்து குரு, "ஆனால் நீங்கள் அதை எப்போது கேட்டீர்கள்? நீங்கள் கேட்டது உங்களுக்கு கிடைத்தது, இல்லையா? பிறகு ஏன் இப்போது  வந்தீர்கள்?" என வினவினார்
அம்மனிதனின் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிந்தன, அவர் குருவிடம், " இனி நான் உங்களிடம் எதையும் கேட்க மாட்டேன், எனக்கு மனஅமைதி மட்டும் கிடைச்செய்யங்கள்" என வேண்டினார்.
குரு, "நிச்சயமா, அமைதிக்காக மட்டுமே இங்கு வருவீர்களா? உங்கள் சேவைக்கு ஈடாக வேறு எதையும் கேட்க மாட்டீர்களா?" என்றார்.
அம்மனிதன் குருவிடம், "எனக்கு எதுவும் வேண்டாம். ஐயா பணம் சம்பாதிப்பதைவிட மன அமைதி மிகவும் விலைமதிப்பற்றது என்பதை நான் புரிந்துகொண்டேன். ஐயா நான் தினமும் இங்கு வந்த சேவைசெய்கின்றேன்" என்றார்  

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...