ஞாயிறு, 19 மார்ச், 2023

அமைதியற்ற மனம்

 குளிர்காலத்தில் ஒரு நாள், குருவும் அவரது சீடனும்  அருகிலிருந்த கடற்கரையில் நடந்து வந்துகொண்டிருந்தனர், அப்போது புயலுடன் கூடியகடல்காற்று பலமாக வீசியது அதனால் கடலில் உயரமான அலைகள் எழுந்தகரைக்குவந்து .சேர்ந்தன.
சிறிது நேரம் நடந்த பிறகு, குரு தனது சீடரைப் பார்த்து, "தற்போதைய இந்தக் கடல்காட்சி உனக்கு என்ன நினைவூட்டுகிறது?" என வினவினார்
அதற்கு அவருடைய சீடன், "இது என் மனதையும் அதன் அமைதியற்ற எண்ணங்களையும் நினைவூட்டுகிறது ஐயா" எனபதிலளித்தார்.
உடன் குரு, "ஆமாம், நம்மனம் கடலிலுள்ள நடுநிலையான நீர் போன்றது. அதில் நல்லதும் இல்லை கெட்டதும் இல்லை அமைதியாக உள்ளது . ஆனால் கடலின் மீது வீசும்  கடுமையான புயலுடன் கூடிய இந்த கடல் காற்று ஆனது அதிக அலைகளை உருவாக்குகிறது, அவ்வாறே ஆசைகளும் அச்சங்களும் அமைதியான நம்முடைய மனதைஅலைகழித்து புதிய எண்ணங்களையும் கருத்துகளையும் உருவாக்குகின்றன." என்றார்
தொடர்ந்து குரு, "சரி, இப்போது சொல்லுங்கள், இவ்வளவு புயல் நிறைந்த கடலின் நடுவில் நீங்கள் படகில் செல்ல விரும்புகிறீர்களா?" என வினவினார்
உடன்அவருடைய  சீடன், "நான் செல்லமாட்டேன் ஐயா" என்று பதிலளித்தார்.
தொடர்ந்து குரு, "அதெல்லாம் சரிதான். ஆனால் உண்மையில், தற்போதைய கடுமையாக வீசிடும் இந்தப் புயலுக்குள்தான் நாம் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதுமட்டுமன்று பெரும்பாலான மக்கள் கடுமையான இவ்வாறான புயல்காற்றுடன் கூடிய கடலின் நடுவில் சுக்கான் இல்லாத படகில் பயனம் செய்வதை போன்றே தாங்கள் அவ்வாறான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என உணராவிட்டாலும் கூட வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், .
பொதுவாக நம்முடைய மனம் மிகவும் அமைதியற்றது, எல்லா வகையான எண்ணங்களும் கடல் அலைகளைப் போன்று குறுக்கும் நெடுக்குமாக இடைவிடாமல் வந்து செல்கின்றன, நம்முடைய மனதைக் கிளர்ச்சியுறச் செய்கிறது." என நீண்ட விளக்கமளித்தார்
அதற்கு அவருடையசீடன், "ஆமாம்..ஐயா. நான் இவ்வாறான செய்தியைதான்   உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன்" என்று பதிலளித்தார்.
குரு தன்னுடைய சீடனைப் பார்த்து புன்னகைத்து, "தண்ணீரை அசைய விடாமல் பிடித்துநிறுத்தி கடலை அமைதிப்படுத்த முடியாது. அமைதியான கடலின்மீது வீசும் காற்றை நிறுத்துவதுதான் அதற்கான ஒரேவழியாகும்.
நம்மனதில் எழும் பல்வேறு எண்ணங்கள், ஆசைகள், அச்சங்கள் இந்த கடல் காற்றைப் போன்றது, அதனை அமைதிப்படுத்த வேண்டும்.  கவனத்தையும் செயல்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும், அப்போதுதான்  கடலின் தண்ணீர் போன்ற நம்முடையமனம் அமைதியாக இருக்கும்." என அறிவுரை கூறினார்
தொடர்ந்து குரு தன்னுடைய சீடனிடம், "கடல் காற்றை அலட்சியப்படுத்துவது சாத்தியம் என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன நடக்கும்?" என வினவினார்
அதற்கு சீடன், "அவ்வாறு நடந்தால் கடலில் அலைகள் நின்றுவிடும்" என்றார்.
பின்னர் குரு, "உண்மையில், நீங்கள் இயற்கையாக  காற்றை புயல்காற்றைக் உங்களால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் உங்கள் மனதில் எழும் புயலுடன்கூடிய காற்று போன்ற பல்வேறு எண்ணங்களை கட்டுப்படுத்தலாம், இது  மனதை அமைதியாக்குகிறது." என்றார்
உடன் அவருடைய சீடன், "ஐயா, என் மனதில் எழும் புயலாக வீசும் காற்றினை போன்ற எண்ணங்களை தணிப்பதில் நான் வெற்றி பெற்றால், என்னைச் சுற்றியுள்ள உலகில் இன்னும் அமைதியையு கொண்டு வர முடியுமா?"என ஐயம் எழுப்பினார்

அதற்கு குரு, "உங்கள் மனதை ஒருமுகப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள், ஆற்றல் மற்றும் சுய ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் . உங்கள் மனதைக் கட்டுப்படுத்தி அதை அமைதியானதாக மாற்றினால், உங்கள் வாழ்க்கையை நீங்கள் கட்டுப்படுத்துவீர்கள்.
இருப்பினும், வெளி உலகத்தை மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டாம். உங்கள் உள் உலகத்தை மாற்றுவதற்கும் அமைதிப்படுத்துவதற்கும் கவனம் செலுத்துங்கள். உங்கள் உள் உலகத்தை நீங்கள் கட்டுப்படுத்த முடிந்த பிறகே, உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியும்". என அறிவுரை கூறினார்



கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...