ஜூலை2017 இலிருந்து நடைமுறைபடுத்தியுள்ள சரக்கு சேவைவரியானது ( சசேவ(GST)) ஏற்கனவே நடைமுறையில் இருந்த மத்தியஅரசின் உற்பத்திவரி சேவைவரி மாநிலஅரசின் மதிப்புக்கூட்டுவரி நுழைவரி போன்ற அனைத்த வரிகளையும் ஒன்றிணைந்த ஒருவரியாகும் இந்த புதிய சரக்குசேவரி( சசேவ) யானது உற்பத்தி செய்கின்ற இடத்திற்கு பதிலாக நுகர்வுசெய்கின்ற இடத்தில் விதிக்கபடுதே மிகமுக்கிய திருப்பமாகும் நுகர்வோர் அல்லாத நபர்ஒருவர் பெறும் பொருள் அல்லது சேவைக்கு செலுத்திடும் வரியை தாம் வேறொரு நபருக்கு வழங்கிடும்போது தான் ஏற்கனவே செலுத்திய வரியை கழித்து சரிசெய்து கொண்டு நிகரவரியைமட்டும் செலுத்தினால் போதும் அதாவது ஏற்கனவே நடைமுறையில் இருந்த மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரியை(VAT) போன்று விதிக்கப்படுவதே இந்த சரக்கு சேவைவரியின் முக்கியதன்மையாகும்
பொதுவாக ஒரு பொருளை அல்லது சேவையை வழங்கிடும் தொடர் சங்கிலியில் உற்பத்தியாளர் ,மொத்தவிற்பணையாளர் சில்லறை விற்பனையாளர், நுகர்வோர் ஆகிய நான்கு நபர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்
இதில் உற்பத்தியாளர் தன்னுடைய உற்பத்திக்கான மூலப்பொருளை அல்லது சேவையை பெறும்போது செலுத்திடும் உள்ளீட்டு வரியை தான் உற்பத்தி செய்திடும் பொருளை மொத்த விற்பணையாளருக்கு வழங்கும்-போது அவரிடமிருந்து வசூலிக்கும் வரியில் கழித்து சரிசெய்துகொண்டு நிகர வரியைமட்டும் செலுத்தினால் போதும்
அவ்வாறே மொத்த விற்பணையாளர் தான் உற்பத்தியாளரிடமிருந்து பொருளை அல்லது சேவையை பெறும்போது செலுத்திய வரியை சில்லறை விற்பணையாளரிடம் வழங்கும்போது அவரிடமிருந்து வசூலிக்கும் வரியில் கழித்து கொண்டு நிகர வரியைமட்டும் செலுத்தினால் போதும்
அதேபோன்று சில்லறை விற்பணையாளர் தான் மொத்த விற்பணை-யாளரிடமிருந்து பொருளை அல்லது சேவையை பெறும்போது செலுத்திய வரியை நுகர்வோரிடம் வழங்கும்போது அவரிடமிருந்து வசூலிக்கும் வரியில் கழித்துசரிசெய்து கொண்டு நிகர வரியைமட்டும் செலுத்தினால் போதும்
இதனை விரிவாக பார்ப்பதற்குமுன் இந்த சரக்குசேவைவரியானது மாநிலத்திற்கான மாநிலசரக்குசேவைவரி(SGST)யென்றும் மத்தியஅரசிற்கான மத்திய சரக்குசேவைவரி(CGST)யென்றும் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் நிகழ்விற்கு ஒருங்கிணைந்த சரக்குசேவைவரி(IGST)யென்றும் இந்தியஅரசின் நேரடிஆளுகைக்கு உட்பட்ட யூனியன் பிரதேசங்களில் யூனியன் சரக்குசேவைவரி(UGST)யென்றும் நான்குவகையான சட்டங்கள் நடைமுறைபடுத்தவிருக்கின்றன
மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் நிகழ்விற்கான ஒருங்கிணைந்த சரக்குசேவைவரி(IGST)யின் உள்ளீட்டு வரியை மத்தியஅரசின் மத்திய சரக்குசேவைவரி(CGST)யிலும் ஒருங்கிணைந்த சரக்குசேவைவரி(IGST)யிலும் கழித்துசரிசெய்து கொண்டு நிகரவரிமட்டும் செலுத்திடலாம்
அவ்வாறே மத்திய சரக்குசேவைவரி(CGST)யின் உள்ளீட்டு வரியை மத்தியஅரசின் மத்திய சரக்குசேவைவரி(CGST)யிலும் ஒருங்கிணைந்த சரக்குசேவைவரி(IGST)யிலும் கழித்துசரிசெய்து கொண்டு நிகரவரிமட்டும் செலுத்திடலாம்
மேலும் மாநிலஅரசின் மாநிலசரக்குசேவைவரி(SGST)யின் உள்ளீட்டு வரியை ஒருங்கிணைந்த சரக்குசேவைவரி(IGST)யிலும் மாநிலசரக்குசேவைவரி(SGST) யிலும் கழித்துசரிசெய்து கொண்டு நிகரவரிமட்டும் செலுத்திடலாம்
இந்த நிகழ்வை ஒரு எடுத்துகாட்டுடன் காண்போம் ஒரு உற்பத்தியாளர் வழங்கிடும் பொருள் அல்லது சேவைக்கு CGST வரிவிகிதம் 10% என்றும் SGSTவரிவிகிதம் 5% என்றும் அவர் தன்னுடைய உற்பத்திபொருளிற்கு அல்லது சேவைக்கு தேவையான மூலப்பொருளை ரூபாய்.1000/- அடக்க விலையில் பெறுகின்றார் அப்போது அவர் மத்தியசசேவரியாக ரூபாய்.100/- உம் மாநிலசசேவரியாக ரூபாய்.50/- உம் ஏற்கனவே செலுத்தியிருக்கின்றார் எனக்கொள்வோம் இவர் அதனுடன் ரூபாய்.300/- இற்கு மதிப்புகூட்டி மொத்த-விற்பணையாளருக்கு ரூபாய்.1300/- இக்கு வழங்குகின்றார் எனில் இவர் மத்தியஅரசின் மசசேவரியாக ரூபாய்.130/-உம் மாநிலஅரசின் மாசசேவரியாக ரூபாய்.65/-உம் செலுத்திடவேண்டுமெனில் இந்த உற்பத்தியாளர் மத்திய அரசிற்கு செலுத்தவேண்டிய மசசேவரியான ரூபாய்.130/ இல் இவர் ஏற்கனவே மத்தியஅரசிற்கு செலுத்திய உள்ளீட்டு மசசேவரியான ரூபாய்.100/-ஐ கழித்து சரிசெய்து கொண்டு நிகரமாக ரூபாய்.30/-மட்டும் செலுத்தினால் போதும். அவ்வாறே இந்த உற்பத்தியாளர் மாநிலஅரசிற்கு செலுத்தவேண்டிய மாசசேவரியான ரூபாய்.65/- இல் இவர் ஏற்கனவே மாநில அரசிற்கு செலுத்திய உள்ளீட்டுமாசசேவரியானரூபாய்.50/-ஐ கழித்து சரிசெய்து கொண்டு நிகரமாக ரூபாய்.15/-மட்டும் செலுத்தினால் போதும்
பின்னர் மொத்தவிற்பணையாளர் இதன்மீது ரூபாய்.200/- இக்கு மதிப்பினை கூட்டி மொத்தம் ரூபாய்.1500/- இக்குசில்லறை விற்பணையாளருக்கு வழங்குகின்றோர் எனக்கொள்வோம் இவர் மத்தியஅரசின் மசசேவரியாக ரூபாய்.150/-உம் மாநிலஅரசின் மாசசேவரியாக ரூபாய்.75/-உம் செலுத்திட-வேண்டு மெனில் இந்த உற்பத்தியாளர் மத்தியஅரசிற்கு செலுத்தவேண்டிய மசசேவரியான ரூபாய்.150/ இல் இவர் ஏற்கனவே மத்தியஅரசிற்கு செலுத்திய உள்ளீட்டு மசசேவரியானரூபாய்.130/-ஐ கழித்து சரிசெய்து கொண்டு நிகரமாக ரூபாய்.30/-மட்டும் செலுத்தினால் போதும். அவ்வாறே இந்த மொத்தவிற்பணையாளர் மாநிலஅரசிற்கு செலுத்தவேண்டிய மாசசேவரியான ரூபாய்.75/- இல் இவர் ஏற்கனவே மாநிலஅரசிற்கு செலுத்திய உள்ளீட்டுமாசசேவரியானரூபாய்.50/-ஐ கழித்து சரிசெய்து கொண்டு நிகரமாக ரூபாய்.15/-மட்டும் செலுத்தினால் போதும்
இதன்பின்னர்சில்லரை விற்பணையாளர் இதன்மீது ரூபாய்.100/- இற்கு மதிப்புகூட்டி நுகர்வோருக்கு ரூபாய்.1600/- இக்கு வழங்குகின்றார் எனில் இவர் மத்தியஅரசின் மசசேவரியாக ரூபாய்.160/-உம் மாநிலஅரசின் மாசசேவரியாக ரூபாய்.80/-உம் செலுத்திடவேண்டுமெனில் இந்த சில்லறைவிற்பணையாளர் மத்தியஅரசிற்கு செலுத்தவேண்டிய மசசேவரியான ரூபாய்.160/ இல் இவர் ஏற்கனவே மத்தியஅரசிற்கு செலுத்திய உள்ளீட்டு மசசேவரியான ரூபாய்.150/-ஐ கழித்து சரிசெய்து கொண்டு நிகரமாக ரூபாய்.10/-மட்டும் செலுத்தினால் போதும். அவ்வாறே இந்த சில்லறைவிற்பணையாளர் மாநிலஅரசிற்கு செலுத்தவேண்டிய மாசசேவரியான ரூபாய்.80/- இல் இவர் ஏற்கனவே மாநில அரசிற்கு செலுத்திய உள்ளீட்டுமாசசேவரியானரூபாய்.75/-ஐ கழித்து சரிசெய்து கொண்டு நிகரமாக ரூபாய்.5/-மட்டும் செலுத்தினால் போதும்
ஒட்டுமொத்தமாக உற்பத்தியாளர் மொத்தவிற்பணையளர் சில்லரை விற்பணையாளர் ஆகியோர் தாம் பொருளை அல்லது சேவையை வழங்கிடும்போது மத்தியஅரசிற்கு Rs. 60 (= Rs. 30+Rs. 20+Rs. 10) மட்டும் CGST ஆகவும் அவ்வாறே மாநில அரசிற்கு Rs. 80 (= Rs. 65+Rs. 10+Rs. 5) SGST ஆகவும் உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோர் வரையிலான இந்த வழங்கலின் தொடர் சங்கிலியில் மதிப்பு-கூட்டப்பட்டஅளவிற்கு மட்டும் மொத்த வரியில் அவரவர்களும் தாம் ஏற்கனவே செலுத்திய உள்ளீட்டு வரியை கழித்து சரிசெய்துகொண்டு நிகரவரியை மட்டும் செலுத்துகின்றனர் இதனை பின்வரும் அட்டவணையின்வாயிலாக எளிதாக அறிந்து கொள்ளலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக