சனி, 29 செப்டம்பர், 2018

பெற்றோர்களை பேணி காத்திடுவோம்


அன்பு என்பவனுடைய தந்தை சிறிய பொறியியில் பணிமனை யொன்றை நடத்தி வந்தார் அதில் தினமும் நாளொன்றுக்கு பன்னிரண்டு மணிநேரம் பணிசெய்து அதில் வரும் வருமானத்தை கொண்டு வாய்க்கு கைக்குமாக அன்புவினுடைய தந்தை குடும்பத்தை நடத்திவந்தார் அவர்களுடைய குடும்பம் குடியிருப்பதற்கு சொந்த வீடில்லை இருந்த போதிலும் கடன்வாங்காமல் சுயசார்பாக அன்புவினுடைய தந்தை வாழ்ந்துவந்தார் அன்புவாழ்ந்துவந்தது நடுத்தர குடும்பமானதால் அரசு பள்ளியில் மட்டுமே அன்பு படித்துவந்தான் இருந்தபோதிலும் பள்ளியிறுதிவகுப்பில் 70சதவிகிதம் மதிப்பெண் பெற்றதால் மருத்துவராகவோ அல்லது வேறு நல்ல தொழில் படிப்புகளிலோ அன்புவால் சேரமுடியவில்லை அதனால் அரசு கலைகல்லூரியில் சேர்ந்து படித்தான் படித்துமுடித்தவுடன் தனியார் நிறுவனத்தில் நல்ல பணியிலும் சேர்ந்தான் போதுமான வருமானம் அன்புவிற்கு வரத்துவங்கியதும் நல்ல பெண் ஒன்றுடன் அன்புவிற்கு திருமணம் செய்துவைத்தனர் அதனை தொடர்ந்து இரண்டு பிள்ளைகளும் அன்புவிற்கு பிறந்தனர் அன்பு பணிபுரிந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட பதவிஉயர்விற்கான தேர்வில் வெற்றிபெற்றதை தொடர்ந்து அன்புவிற்கு நல்ல பதவிஉயர்வும் கனிசமான சம்பளஉயர்வும் கிடைத்தன அதனால் கிடைத்த சம்பளத்த தொகையை தான்தோன்றி தனமாக தேவையில்லாத செலவுகளையும் ஆடம்பர செலவுகளையும் செய்து கட்டுப்பாடு எதுவுமில்லாமல் வாழ்ந்துவந்தான் ஆடம்பர செலவிற்கு ஏற்ப வருமானம் இல்லாததால் அதனை ஈடுகட்டுவதற்காக அன்பு ஏராளமாக கடன் வாங்கினான் அதனை தொடர்ந்து வாங்கிய கடனிற்கு வட்டிகட்டு-வதற்கும் ஆடம்பர செலவுகளுக்கும் போதுமான வருமானம் இல்லாமல் அன்பு தன்னுடைய வாழ்க்கையில் போராடி கொண்டிருந்தான் இவ்வாறு ஆடம்பரமாக செலவிடுவதால் தன்னுடைய பெற்றொருக்கு தன்னுடைய சம்பளத்திலிருந்து எந்தசெலவும் செய்வதில்லை அன்புவினுடைய தந்தையும் தன்னுடைய பணிமனையில் கிடைத்த வருமானத்தை கொண்டு சுயசார்பாக எப்போதும் போல் வாழ்ந்து வந்தார் இந்நிலையில் அன்புவினுடைய தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று மருத்துவம்செய்யவும் சாப்பிடுவதற்கு ம் பணிமனை வருமானம் இல்லாததால் அன்புவிடம் வந்து தங்களுடைய மருத்துவசெலவிற்கும் குடும்ப செலவிற்கும் பணம் வழங்குமாறு அன்புவினுடைய பெற்றோர்கள் கோரியபோது உடன் கடன்சுமையால் தத்தளிக்கும் நிலையில் எழுந்த கோபத்தில் அன்பு "வீட்டைவிட்டு உடன் ஓடிபோங்கள் நல்ல தனியார் பள்ளியில் என்னை படிக்கவைத்தும் ட்யூஷன் வைத்தும் படிக்கவைத்திருந்தால் நான் நல்ல மதிப்பெண் பெற்று தொழில்துறைபடிப்பில் சேர்ந்து நல்ல பணி பெற்றிருப்பேன் அவ்வாறு செலவிடாமல் என்னை அரசுபள்ளியில் படிக்கவைத்து இவ்வாறு அரைகுறையாக வாழவைத்தீர்கள் உங்களுக்கு பணம் எல்லாம் கொடுக்கமுடியாது இந்த பக்கமே திரும்பி பார்க்காதீர்கள்" என பெற்றோர்களை விரட்டி அடித்தான் இதனால் மனம் நொந்து வெளியேறிய பெற்றோர்கள் அன்றாட செலவிற்கு போதிய வருமானம் இல்லாமல் வாடிவதங்க ஆரம்பித்தனர் இந்நிலையில் அன்புவின் நிறுவனத்தில் தொழில் தொடர்பாக அன்புவை வேறு மாநில சுற்றுலாவாக அனுப்பிவைத்தார்கள் சுற்றுலா சென்ற நகரத்தின் கடைத்தெருவில் ஏதாவது பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருட்களை வாங்கலாம் என அன்பு கடைத்தெரு பக்கம் சென்றான் அப்போது 10 வயது சிறுவன் ஒருவன் பிள்ளைகளுக்கான விளையாட்டு பொம்மைகளை விற்றுகொண்டிருந்தான் தன்னுடைய பிள்ளைகளுக்கு அந்த பொம்மைகளை அன்பு வாங்கியபோது அந்த சிறுவனிடம் "ஏன் தம்பி இந்த வயதில் பள்ளிக்கு செல்லாமல் இவ்வாறான பணியினை செய்கின்றாய்" என வினவியபோது "ஐயா விபத்தொன்றில் என்னுடைய தந்தையின் வலதுகை முறிந்து விட்டது அதனால் அவரால் பணிசெய்ய இயலவில்லை என்னுடைய தாய் நான்கைந்து வீடுகளில் வீட்டு வேலைசெய்து ஈட்டிடும் வருமானம் போதுமானதாக இல்லை அதனால் நான் இந்த பணியை செய்து ஏதோ கொஞ்சம் சம்பாதித்து எங்களுடைய குடும்பம் நடக்கின்றது" என பதிலிறுத்தான் அந்த சிறுவன் உடன் அன்பு "ஏன் தம்பி பள்ளிக்கு சென்று படிப்பதில்லையா?” என வினவியபோது "காலையில் பள்ளிக்கு செல்வதற்கு முன்பும் பள்ளிமுடிந்த பின்பும் மிகுதிநேரத்தில் இந்த பணியை செய்துவருகின்றேன்" எனக்கூறினான் ஒரு பத்துவயது பிள்ளைக்கு பெற்றோரின்மீது இருக்கும் இரக்கம் அக்கறைகூட நமக்கு இல்லையே என அன்புவிற்கு தான் பெற்றோரை திட்டி விரட்டிஅனுப்பிய செயல் நினைவில் வந்து சுருக்கெனமுள்குத்துவதை போன்ற தர்மசங்கடமாகிடவிட்டது அதனால் தன்னுடைய பெற்றோர்களின் நிலையை என்னி மனவருத்தமடைந்து எப்படியாவது உதவவேண்டும் என தீர்மானித்து தனக்கு ஏன்இவ்வளவு பணநெருக்கடி என சிந்தித்தபோது தேவையற்ற அனாவசிய ஆடம்பரசெலவுகள் ஏராளமாக செய்வதால் வருமானம் போதுமானதாக இல்லை என கண்டறிந்து உடனடியாக அவ்வாறான செலவுகளை தவிர்த்து உடன் பொற்றோர்களுக்கு தேவையான உதவியை செய்யதுவங்கினான் நம்முடைய பெற்றோர்கள் நாம் விரும்பிய வாறு படிக்கவைக்கவில்லை நாம் விரும்பிய வாழ்வை அமைத்து கொடுக்கவில்லை என வெறுத்திடாமல் அவர்களுடைய நிலைக்கேற்ப அரும்பாடுபட்டு நம்மை இந்த நிலைக்காவது உயர்த்தியதை எண்ணி பெற்றோர்களை காத்திடுவது நமது கடமை என உறுதி கொள்வோம்

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற

கருத்துகள் இல்லை: