புதன், 19 செப்டம்பர், 2018

தமிழ்நாட்டில் வாழும் நடுத்தரவர்க்கத்து மக்களின் தற்போதைய அவலநிலை


தமிழ்நாட்டில் தற்போது வாழ்ந்துவரும் மக்களுள் ஒரு இளவயது தந்தையானவர் தன்னுடைய இளம் மனைவி இருபிள்ளைகள் ஆகியோர்களுடன் சேர்ந்து ஒரு சிறியவீட்டில் வாழ்ந்துவந்தார். மேலும் தன்னுடைய கடுமையான உழைப்பினால் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர்களும் நன்றாக உண்பதற்கு மட்டும் பேதுமான அளவு சம்பாதித்துவந்தார் இந்நிலையில் அவருடைய இளம் மனைவியானவள் பக்கத்து வீட்டை பாருங்கள் எதிர்வீட்டை பாருங்கள் அவர்களெல்லாம் எப்படி சம்பாதித்து பிள்ளைகளுக்கு வகைவகையாக துனிமணி வாங்கி தருகின்றனர் என எப்போதும் பணம் பணம் என தொந்திரவு செய்துவந்தார் மேலும் அவருடைய பிள்ளைகள் தனியார் நடத்தும் ஆங்கில துவக்கபள்ளியில் மிக அதிக செலவழித்து சேர்த்து படிக்கவைத்திடுமாறு அவரை நிர்ப்பந்த படுத்தினார் இதையெல்லாம் எனக்காகவா கேட்கின்றேன் நம்முடைய குடும்பம் நன்றாக தலைநிமிர்ந்து இருந்தால்தானே நாலுபேர் நம்மை மதிப்பார்கள் என அதிக தொந்திரவுசெய்துவந்தார் அதனால் இந்த பிரச்சினையில் இருந்து தப்பிப்பது எப்படி என ஆராய்ந்துமுடிவாக பணிமுடிந்து உடன் வீட்டிற்கு வந்து சேராமல் மிகைநேர பணியை செய்து கூடுதலாக சம்பாதிக்க ஆரம்பித்தார் அதோடு மட்டுமல்லாமல் வீட்டிலிருந்தே தன்னுடைய பதவி உயர்விற்கான கல்வியையும் அதிகமான நேரத்தை செலவிட்டு படிக்கஆரம்பித்தார் ஆனால் அவருடைய குடும்பத்தாருடன் ஒருவேளை உணவை ஒன்றாக சேர்ந்து உண்ணவும் அவரது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவும் ஏங்கினார்.இருந்த போதிலும் அவர் படிப்பு வேலை மிகைநேர வேலை என கடினமாக முயன்று தேர்வில் வெற்றி பெற்றார்

இதன்பயனாக போதுமான அளவிற்கு சம்பாதிக்கும் மேற்பார்வையாளராக அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது அதனை தொடர்ந்து அவருடைய மனைவியானவள் தற்போதுநாம் இருப்பது எலிப்பொறி போன்று மிகச்சிறியவீடாக இருக்கின்றது நாமும் நம்முடைய பிள்ளைகளும் புழங்குவதற்கு பெரியவீடாக வேண்டும் என தொந்திரவு செய்ததால் பெரிய வீட்டிற்கு குடியேறினர் இதனை தொடர்ந்து அவருடைய மனைவி இந்த வீடு பெரியதாக இருப்பதால் தம்மால் வீடுமுழுக்க பெருக்கவும் கழுவவும் முடியாது வீட்டு வேலைக்கு பணியாளை நியமிக்கவேண்டும் என கோரி பணியாள் ஒருவரை நியமித்து வீட்டு பணிமுழுவதும் பணிஆளே செய்யும் அளவிற்கு வசதியாக வாழஆரம்பித்தார். மேலும் பிள்ளைகளை தனியார் மேல்நிலை பள்ளியில் அதிக செலவழித்து படிக்கவைக்கும்படியும் அவர்கள் பள்ளிக்கு சென்றுவருவதற்கு தனித்தனியாக இருசக்கரவாகணங்களை வாங்கி வழங்கும்படியும் கோரிக்கைவைத்ததோடு மட்டுமல்லாமல் இதையெல்லாம் எனக்காகவா கேட்கின்றேன் நம்முடைய குடும்பம் நன்றாக தலைநிமிர்ந்து இருந்தால்தானே நாலுபேர் நம்மை மதிப்பார்கள் என அதிக தொந்திரவுசெய்துவந்தார் அதனால் அதற்கடுத்த பதவிஉயர்விற்கான கல்வியை அவர் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார் இந்த நிலையில்கூட அவருடைய குடும்பத்தாருடன் ஒருவேளை உணவை ஒன்றாக சேர்ந்து உண்ணவும் அவரது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவும் ஏங்கினார். இருந்தபோதிலும் வேலைமுடிந்தவுடன் படிப்பு படிப்புமுடிந்தவுடன் வேலை என கூடுதல் நேரம் ஒதுக்கி படிக்க ஆரம்பித்து கடினமாக முயன்று தேர்வில் வெற்றி பெற்றார்

அதனால் உடன் நல்ல கைநிறைய சம்பாதிக்கும் அளவிற்கு அதிகாரியாக பதவி உயர்வு அவருக்கு கிடைத்தது இதனை தொடர்ந்து அவருடைய மனைவியானவள் தற்போதுநாம் இருக்கின்ற வீடு நாமும் நம்முடைய பிள்ளைகளும் புழங்குவதற்கு போதுமானதாக இல்லை இதைவிட பெரியவீடாக வேண்டும் என தொந்திரவு செய்ததால் பெரிய அரண்மணை போன்ற வீட்டிற்கு குடியேறினர் அவருடைய மனைவி இந்த வீடு மிகபெரியதாக இருப்பதால் ஒரு பணியாளை வைத்து வீடுமுழுக்க பெருக்கவும் கழுவவும் முடியாது வீட்டு வேலைக்கு ஒருவர் என்றும் சமையள் செய்வதற்கு ஒருவர் என்றும் வீட்டைசுற்றியுள்ள தோட்டத்தை பராமரிக்க ஒருவர் என்றும் அம்மனைவியின் கால் கைகளை பிடிப்பதற்கு ஒரு பணியாள் என்றும் ஏராளமான பணியாட்களை நியமிக்கவேண்டும் என கோரி பணியாட்களை நியமித்து வீட்டு பணிமுழுவதும் பணிஆட்களே செய்யும் அளவிற்கு வசதியாக உடல் உழைக்காமல் சோம்பேறியாக மாறிவாழஆரம்பித்துவிட்டார் மேலும் பிள்ளைகளை தனியார் மருத்துவ கல்லூரியில் அதிக செலவழித்து படிக்கவைக்கும்படியும் அவர்கள் கல்லூரிக்கு சென்றுவருவதற்கு தனித்தனியாக இரண்டு மகிழ்வுந்து வாகணங்களை வாங்கி வழங்கும்படியும் கோரிக்கை அதிகமானதால் அதற்கடுத்த மேல்அதிகாரி பதவிஉயர்விற்கான கல்வியை அவர் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார் இந்நிலையும் அவருடைய குடும்பத்தாருடன் ஒருவேளை உணவை ஒன்றாக சேர்ந்து உண்ணவும் அவரது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவும் ஏங்கினார்.இருந்தபோதிலும் வேலைமுடிந்தவுடன் படிப்பு படிப்புமுடிந்தவுடன் வேலை என கூடுதல் நேரம் ஒதுக்கி படிக்க ஆரம்பித்து கடினமாக முயன்று தேர்வில் வெற்றி பெற்றார்

இவ்வாறான கல்வியை யாராலும் இவ்வளவு விரைந்து படித்துவெற்றிபெற முடியாது என்பதால் இவருக்கு உடன் மேல்அதிகாரியாக பதவி உயர்வு கிடைத்தது ஒருவழியாக மிகப்பெரிய அளவு கல்வியையும் அதனை தொடர்ந்து மிகப்பெரிய பதவியும் கிடைத்தது என நிம்மதியாக மறுநாள்முதல் அவருடைய குடும்பத்தாருடன் ஒன்றாக சேர்ந்து சாப்பிடலாம் மகிழ்வாக அதிகநேரம் ஒன்றாகக்கூடி இருக்கலாம் என திட்டமிட்டு உறங்க சென்றார் மறுநாள் காலையில் அவருடைய வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்தபோது அவர் மட்டும் எழமுடியாது நீண்ட தூக்கத்தில் இருந்தார் அப்போதுதான் அவருடைய மனைவியும் பிள்ளைகளும் அடடா குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒன்றாக உணவருந்தி மகிழ்வாக இருக்கலாம் என எப்போதும் கூறிக்கொண்டே இருந்தாரே அவ்வாறு முடியாமல் போய்விட்டதே இனி என்ன செய்வது என அழஆரம்பித்தனர். ஆம் நாம் எப்போதும் கையிலிருக்கும் கலாக்காயை உண்டு மகிழ்வோடு வாழாமல் மரத்தின் உயரத்தில் உள்ள பலாக்காய்தான் வேண்டும் என அடம்பிடித்திருப்பதை போன்று கையிலிருப்பதை விட்டிட்டு பறப்பதை பிடிப்பதற்காக முயன்று தோல்வியுறுகின்றோம்

நண்பர்களே!சகோததர்களே! எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு தேவையென்றாலும் பணத்தை நாம் சம்பாதிக்கலாம் ஆனால் அரிதான நமக்கு கிடைத்த இந்த வாழ்வைநம்முடைய குடும்பத்தாரோடு மகிழ்ச்சியோடு வாழ உறுதி கொள்வோம்

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற

கருத்துகள் இல்லை: