மெய்நிகர் நாணயம்(BitCoin) என்பது ஒரு புதிய, முழுவதும் எண்ம-நிலையிலான சமனுக்குசமமான (P2P) நாணயம்ஆகும்
தற்போது பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் நம்மால் பயன்-படுத்திவரும் தங்க நாணயங்களுக்கும்,தொட்டுணரக்கூடிய பணத்தாட்களுக்கும் பதிலாக இணையசேவைகளின் வாயிலாக இதனை பயன்படுத்த முடியும், மேலும் தற்போது இணையத்தில் பணபரி-வர்த்தனைக்காக வங்கிகளில் சேமிப்பது வேறு நபர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு அந்த வங்கிகளின் வாயிலாக நம்முடைய பணத்தை பேபால் அல்லது பேடிஎம்போன்ற இடைத்தரகர்களின் சேவைகளை பயன்படுத்தி வழங்கும் செயல் போன்றில்லாமல் இந்த மெய்நிகர் நாணயத்தை(BitCoin)கொண்டு இருநபர்கள் அல்லது இருநிறுவனங்களுக்கு (பயனாளர்களுக்கு )இடையே தற்போது நாம் பயன்படுத்திவரும் பணபரிவர்த்தனை போன்றே இந்த எண்மநிலை நாணயத்தை பரிமாறிகொள்ளமுடியும்
இணையத்தின் வாயிலாக பயன்படுத்திவரும் தற்போதைய பணநடவடிக்கைக்-களுக்கு பதிலாக மெய்நிகர் நாணய(BitCoin)த்தினை பயன்படுத்திட செய்தால் பின்வரும் ஒரு சில முக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கவுள்ளன.
1இந்த மெய்நிகர் நாணயம்(BitCoin) ஆனது ஒரு உலகளாவிய, பரவலாக்கப்பட்ட நாணயம் ஆகும் அதாவது உலகம் முழுவதும் பயன்படுத்த ஒரு சாத்தியமான இந்த மெய்நிகர் நாணய(BitCoin)த்தை தன்னுடைய நாட்டிற்கு மட்டுமே இது சொந்தமானது என எந்தவொரு நாடும் உரிமை கொண்டாடமுடியாது அதனால் உலகமுழுவதும் எங்கிருந்தும் எங்குவேண்டுமாணாலும் பணபரிவர்த்தனை செய்வது மிக எளிய செயலாகிவிடும் மேலும் பொருட்களை கொள்முதல் செய்பவர்களுக்கு இடையே கொள்முதல் செய்பவரின் நாட்டு நாணயமாக வழங்குவதா அல்லது பொருட்களை வழங்குபவரின் நாட்டு நாணயமாக வழங்குவதா என இந்த பணபரிமாற்ற நடவடிக்கைக்கு எந்த பரிமாற்ற அளவை எடுத்துகொள்வது என்ற குழப்பத்தை தீர்ப்பதற்காகவென நீண்ட விவாதம் எதுவும் தேவையில்லாததாகி-விடுகின்றது
2.இரண்டாவதாக இவ்வாறு பரவலாக்கப்பட்ட நாணயங்களின் பரிவர்த்தனைகளை கட்டுப்-படுத்திடுவதற்காகஅல்லது இந்த நாணயத்தின் மதிப்பை நிர்வகிக்க தற்போது ஒருநாட்டின் அனைத்து பணநடவடிக்கை-களையும் கட்டுபடுத்திடுகின்ற ரிசர்வு வங்கி அல்லது தேசிய வங்கி போன்று எந்தவொரு அமைப்பும் இதற்காகவென தனியாக தேவையில்லை . அதாவது இவ்வாறு நாடுகளின் நாணங்களை பொருட்படுத்தாமல் இந்தமெய்நிகர் நாணய(BitCoin) செலாவணியின் உலக பொருளாதார செயல்திறன் ஆனது அரிய உலோகங்கள், எண்ணெய் ஆகிய பொருட்களின் மதிப்பைபோன்றே அதன் மதிப்பு தக்க வைத்து கொள்ளும் அல்லது அமைந்திருக்கும் . மேலும் குறிப்பிட்ட பகுதியின் பணமதிப்பு வீழ்ச்சியினால் உலகபொருளாதாரமே வீழ்ந்துவிட்டது என்ற பாதிப்பு எதுவும் இதில் இல்லை ; ஆயினும் இணையஇணைப்பு செயல்படவில்லை யென்றால் அந்தகுறிப்பிட்ட இடம் தவிர மிகுதி உலகமுழுவதும் அதனால் பாதிப்பெதுவும் ஏற்படாது
3.மூன்றாவதாக , பணபரிமாற்றங்களானவை இருநபர்களுக்கு இடையே நேரடியாக எந்தவொரு இடைத்தரகரின் தலையீடு எதுவுமில்லாமல் செய்யப்படுகின்றன, அதனால் இந்த இடைத்தரகர்களுக்கான கட்டணம் எதுவும் செலுத்திடத் தேவையில்லாததாகி விடுகின்றது . ஆயினும் துவக்கத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டும் இந்த நாணயத்தை நிர்வகிப்பதற்காக சிறிதளவு கட்டணம் இருக்கும், ஆனால் அது தற்போதைய செந்தர கட்டணத்தைவிட மிகவும் குறைவாகவே இருக்கும்
,4.நான்காவதாகு நாம் சொந்தமாக இந்த மெய்நிகர் நாணயங்களை(bitcoins) நம்முடைய கணினியில் ஒரு பணப்பையான (wallet) கோப்பில் சேமித்துக்-கொள்ளலாம் ஏனெனில், நம்முடைய இந்த மெய்நிகர் நாணய நிதியின் மீது நமக்கு முழு அதிகாரம் உண்டு. இந்த மெய்நிகர் நாணய(Bitcoins)lத்திற்கென தனியாகஒரு நிறுவனத்தில் "கணக்கு" ஒன்றினை துவக்கி வைத்திடவேண்டும் அதிலிருந்து நமக்குதேவையானபணத்தை எடுத்து செலவிடவேண்டும் போன்ற நடவடிக்கை எதுவும் தேவையில்லை
மேலும், தற்போது ஒரு வங்கியின் நடவடிக்கையான "சிறிய அச்சிடப்பட்ட", பணத்தாட்களை பயன்படுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்புகள், படிவங்கள் அல்லது இதர வரம்பிற்குள் அல்லது எல்லைக்குள் செயல்படவேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடு எதுவும் இந்த நடைமுறையில் இல்லை.
5. இறுதியாக, இந்த மெய்நிகர் நாணயம்(BitCoin) ஆனது தற்போது நாம் பயன்படுத்திவரும் பணத்திற்கு ஈடாகவும் அதற்கு மாற்றாகவும் பரிமாறிக்கொள்ள பயன்படவிருக்கின்றது மேலும் இவ்வாறான பரிமாற்றத்திற்காக நாம் கூடுதலாக செலவேதும் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை அதுமட்டுமல்லாது இணையத்தின் வாயிலாக பொருட்களையும் சேவைகளையும் பெறுவதற்கு மிகப்பெரிய வழியில் பணப்பரிமாற்றத்திற்காக இது உதவ தயாராக இருக்கின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக