புதன், 26 செப்டம்பர், 2018

மற்றொருவருக்கு ஆபத்தில் உதவிசெய்தால் அவ்வாறே ஆபத்தில்நமக்கு மற்றவரிடமிருந்து உதவிகிடைக்கும்


கோடைகாலத்தில் ஒருநாள் எறும்பு ஒன்றிற்கு அதிக தாகமாக இருந்ததால் அருகில் தண்ணீர் எங்கு கிடைக்கும் என தேடி அலைந்தது கடைசியாக ஒரு சிறிய ஓடையில் தண்ணீர் இருப்பதை அறிந்து கொண்டது அதனைதொடர்ந்து சிறிய புல்லின் மீது ஏறி ஓடைக்குள் சென்று தாகம் தீர தண்ணீர் குடித்துவிட்டு கரையை நோக்கி அதே புல்லின்மீது திரும்ப வந்துகொண்டிருந்தது இந்த சமயத்தில் அதிக அளவு சூறாவளி போன்று காற்று சுழன்று அடித்ததால் எறும்பு ஊர்ந்து வந்த புல்லும் மிகவேகமாக சுழன்று ஆடியது அதனால் அதன்மீது ஊர்ந்துவந்த எறும்பு தண்ணீரில்விழுந்துவிட்டது அதனை தொடர்ந்து கரைசேரமுடியாமல் அந்த எறும்பு தண்ணீருக்குள் தத்தளித்து கொண்டிருந்தது இந்த சமயத்தில் காற்று வீசுவுதும் நின்றதால் அந்த ஓடைக்கருகிலிருந்த மரக்கிளையில் வந்தமர்ந்த புறாஒன்று தண்ணீரில் எறும்பு கரைக்கு வரமுடியாமல் தத்தளிப்பதை பார்த்து அதற்கு உதவிசெய்திடும் பொருட்டு ஒரு இலையை பறித்து அந்த எறும்புக்கருகில் போட்டது உடன் எறும்பும் அந்த இலையின்மீது ஒரு வழியாக ஏறியது சீராக காற்று வீசியதால் அந்த இலையும் ஓடையின் கரையில்ஒதுங்கியது எறும்பும் கரையேறி உயிர்பிழைத்தது அதன்பின்னர் வேடன் ஒருவன் மரத்தின்மீது உட்கார்ந்திருந்த அந்த புறாவை பார்த்து அதனை அடித்து வீழ்த்துவதற்காக தன்னுடைய வில்லில் அம்புவைத்து புறாவை குறிபார்த்தான் இதனை கண்ணுற்ற எறும்பானது தன்னுடைய உயிரை காத்த புறாவின் உயிரை காத்திடவேண்டும் என விறுவிறென ஊர்ந்து சென்று வேடனின் காலில் நறுக்கென கடித்தது அதனால் வேடன் எய்திய அம்பு குறிதவறி சென்றுவிட்டது புறாவும் உடன் பறந்து சென்றுஉயிர் தப்பிவிட்டது நாம் மற்றொருவருக்கு ஆபத்தில் உதவிசெய்தால் அவ்வாறே ஆபத்தில்நமக்கு மற்றவரிடமிருந்து உதவிகிடைக்கும் என்பது திண்ணம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...