சனி, 15 செப்டம்பர், 2018

எந்தவொரு பிரச்சினையையும்மிகஎளிதாக திறம்பட தீர்க்க முடியும்.


முன்னொரு காலத்தில் ஒரு கால் ஒரு கை ஒரு கண் ஆகியவை மட்டும் கொண்ட ஆனாலும் மிகவும் புத்திசாலியாகவும் திறனுடனும் கூடிய அரசனொருவன் அரசாட்சி செய்துவந்தார் அதனால் . அவருடைய நாட்டில் மக்கள் அனைவரும் அனைத்து வசதிகளுடன் மிகவும் மகிழ்சியாக வாழ்ந்து வந்தனர் இந்நிலையில் அந்த அரசன். ஒரு நாள் தன்னுடைய அரண்மனை முழுவதையும் சுற்றி பார்த்துகொண்டுவரும்போது அரண்மனையின்சுவற்றில் அவருடைய மூதாதையர்களின் ஓவியங்களைக் கண்டார். அதை போன்று தன்னுடைய குழந்தைகள்அல்லது வருங்காலசந்ததிகள் இதே அரண்மனையில் எல்லா முன்னோர்களுடன் சேர்ந்து தன்னையும் நினைவு கூறுவதற்காக தனக்கென ஒரு ஓவியம் வரைந்தால் நல்லது என்று அந்தஅரசன் நினைத்தார். ஆனால், அவருடைய உருவப்படத்தினை வரைந்தால் அவரது உடல்குறைபாடுகளுடனேயே காட்சியளிக்கும் அது பார்வைக்கு நன்றாக இருக்காதே என்ன செய்வது என்ற சந்தேகம் எழுந்தது இருந்தபோதிலும் அவருடைய நாட்டிலும் பிற நாடுகளிலிலும் உள்ள புகழ்பெற்ற ஓவியர்களை நேரடியாக அழைத்து. அரண்மனையில் தன்னுடைய உருவப்படத்தை அவர்கள் வரையவேண்டும் எனதன்னுடைய விருப்பத்தினை மன்னர் அறிவித்தார். அந்த ஓவியமானது தன்னுடைய குறைபாடுகள் எதுவும் தெரியாமல் தன்னுடைய உருவப்படத்தை யாரொருவர் வரைகின்றாரோ அவருக்கு தகந்த வெகுமதி அளிக்கப்படும்.என அறிவித்தார் அதனைதொடர்ந்து வந்திருந்த ஓவியர்கள் அனைவரும் அரசனுடைய ஒரே ஒரு காலையும் ஒரே கண்ணையும் வைத்து அவ்வாறான குறையெதுவும் தெரியாத அந்த அரசனுடைய அழகான உருவப்படத்தினை எவ்வாறு வரைவது என யோசிக்க ஆரம்பித்தார்கள். மேலும் அது சாத்தியமற்றது, என அனைவரும் ஓவியும் வரையும் போட்டியில் பின்வாங்கி சென்றார்கள் ஆனால் அவர்களுள் ஒரு ஓவியர் மட்டும் தனது கையை உயர்த்தி, தான் அந்த பணியை செய்வதாக ஒப்புக்கொண்டார் "அரசே நீங்கள் விரும்பும் உங்களுடைய அழகிய உருவப்படத்தினை நிச்சயமாக நான் வரைவேன்" என்று ஆனித்தரமாக கூறினார். அதனால் அவ்வரசன் மிகமகிழ்ச்சியாக அந்த ஓவியருக்கு அனுமதியளித்தார், அந்த ஓவியரும் நீண்டகாலஅவகாசம் எடுத்து கொண்டு திரைச்சீலையில் அந்த அரசனின் அழகான ஓவியத்தை வரைந்து காண்பித்தார் அரசசபையில் இருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் அரசனின் அழகிய உருவப்படத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர் அந்த ஓவியத்தில் அரசர் குதிரை மீது உட்கார்ந்திருந்தார், ஒரு கால் மட்டும் காட்சிக்குக தெரிந்தது, ஒருகையால் வில்லில் அம்பை வைத்து பிடித்து கொண்டு தன்னுடைய , ஒரு கண்ணால் மட்டும் அந்த அம்பில் குறிபார்த்திடுமாறு அவ்வுருவப்படம் அமையுமாறு வரைந்திருந்தார். அவ்வரசனின் குறைபாடுகளை மிகபுத்திசாலித்தனமாக மறைத்து அரசனின் அழகிய உருவப்படத்தை அந்த ஓவியர் உருவாக்கியிருப்பதைப் பார்த்த அரசன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அந்த ஓவியருக்கு தான்வாக்களித்தவாறு நல்லதொரு பெரிய பரிசினை வழங்கி கவுரவித்தார்

அதேபோன்று: நாம் எப்போதும் மற்றவர்களுடைய குறைபாடுகளை புறக்கணித்திட வேண்டும். மேலும் மற்றவர்களின் பலவீனங்களை மறைக்க முயற்சிப்பதற்கு பதிலாக, அவரகளிடமுள்ள திறமைகளை மட்டும் கவனிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் நாம் எதிர்மறையான சூழ்நிலையைகூட நமக்கு சாதகமான முறையில் அணுகினால், நம்முன் எழும் எந்தவொரு பிரச்சினையையும்மிகஎளிதாக திறம்பட தீர்க்க முடியும்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...