வியாழன், 1 நவம்பர், 2018

இந்தியாவில் தொடக்கத் தொழில் திட்டம்(Startup Scheme)


இந்திய அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளில் 50இற்கும் மேற்பட்ட + தொடக்கத் தொழில் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு தொடக்கத் தொழில் திட்டமும் இந்திய தொழில் தொடக்க சூழலை மேம்படுத்தும் நோக்கம் கொண்டதாகும் . தற்போது இந்தியாவில் 4,400 மேற்பட்ட தொழில்நுட்பங்கள் இந்த தொடக்கத் தொழில் திட்டங்களின் பட்டியிலில் உள்ளன, மேலும் இந்த எண்ணிக்கை 2020 க்குள் 12,000 க்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான தொடக்கத்தொழில் திட்ட திறனாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவும் பிரிட்டனும் முதலிரண்டு இடங்களில் உள்ளன இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும், அதன் உலகளாவிய தொழில்சாம்ராஜ்ஜியங்களுக்கு ஏற்ப, இந்தியா பெருமையடைவதற்கு அதன் சொந்த பில்லியன் டாலர் கிளப் என்பது உள்ளது. இதில் ஃபிளிப்கார்ட், ஸ்நாப்சீல், ஓலா, இன்மொபி, பேடிம் போன்ற தொடக்கதொழில்களும் அடங்கும். தற்போது $ 100 மில்லியன் நிதி திரட்டல் மூலம், ஃபின் டெக்நிறுவனத்தின் மொபிகுவிக் என்ற தொடக்கத் தொழில் திட்டம் கூட இந்த யூனிகார்ன் கிளப்பில் சேர தயாராகவிருக்கின்றது அவ்வாறாயின் . இந்தியாவின் தற்போதைய தொடக்கத் தொழில் திட்டம் என்றால் என்ன என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும் நிற்க இந்தியாவில் ஒரு நிறுவனம் ஆனது 1.பொதுவான தொழில் எனில் ஏழு ஆண்டுகளுக்குள், உயிரி தொழில்நுட்பம் எனில் பத்தாண்டுகளுக்குள், 2.முந்தைய நிதியாண்டின் ஏதேனும் ஒரு வருடத்தில் வருட வருமானம் ரூ 25 கோடிக்கு மிகாமல், 3புத்தாக்கங்கள் அல்லது செயல்முறைகள் அல்லது சேவைகளின் புதுமை, மேம்பாடு அல்லது முன்னேற்றம், அல்லது ஒரு உயர்ந்த தொழில் முனைவோர் அல்லது வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் அல்லது செல்வத்தை உருவாக்குதல் ஆகியவற்றை ஏற்படுத்துதல், ஆகிய நிபந்தனைக்களுக்குட்பட்டு துவக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு நிறுவனமும் தொடக்கத் தொழில் நிறுவனம் ஆகும். இந்த வரையறைக்குட்பட்ட நிறுவனம் இந்த நோக்கத்திற்காக அமைக்கும் இடைநிலை மந்திரி சபைகுழுவிடமிருந்து சான்றிதழைப் பெற்றுக் கொண்டபின், இந்த தொடக்கதொழில்நிலைக்கான வரி சலுகைகள் பெற தகுதியுடையதாக இருக்கும் ஆயினும் இந்த நிபந்தனைகளை பூரத்தி செய்வதற்காக ஏற்கனவே உள்ள ஒரு வியாபாரநிறுவனத்தினை பிரிப்பது அல்லது புனரமைப்பு செய்வதன் மூலம் அத்தகைய தொடக்கதொழில் நிறுவனம் அமைக்கப்பட்டதாக இருக்ககூடாது மேலு்ம்முந்தைய நிதியாண்டிற்கான வருவாய் 25 கோடியைக் கடந்துவிட்டிருந்தாலும் இணைத்தல் அல்லது பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து பொதுவான தொழில் எனில் 7 வருடங்கள் நிறைவு செய்யப்பட்டிருந்தாலும் , உயிரி தொழில்நுட்பம் எனில் பத்து வருடங்கள் நிறைவு செய்யப்பட்டிருந்தாலும் தொடக்கதொழில் என்ற வரையறைக்குள் வராது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...