சனி, 3 நவம்பர், 2018

வெற்றிக்கதை - ஒரு சாதாரண மனிதனும் முயற்சிசெய்தால் வாழ்க்கையில் மிகசிறந்த வெற்றியாளராக மலரமுடியும்


மைக்கேல் ஜோர்டான்என்பவர் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் எனும் நகரின் ஒதுக்குபுறத்திலுள்ள குடிசைகளாலான பகுதியில், 1963 ஆம் ஆண்டு பிறந்தார். அவருக்கு நான்கு உடன்பிறப்புகள் இருந்தனர் அதனால் அவரது தந்தையின் வருவாய் முழுவதும் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. அதனை தொடர்ந்து அவர் ஒரு சாதாரண ஏழை குடும்பஉறுப்பினராக மிகவும் நம்பிக்கையற்ற எதிர்காலத்தை நோக்கி வாழ்ந்துவந்தார். அவருடைய 13 ஆவது வயதில் அவரது தந்தையானவர் மைக்கேல் ஜோர்டனிடம் பயன்படுத்திய ஆடை ஒன்றை கொடுத்து: " இந்த ஆடையின் மதிப்பு எவ்வளவாக இருக்கும்?" எனவினவினார் அதற்கு ஜோர்டான் , " இது ஒரு டாலர் மதிப்பிருக்கும்." என பதில் கூறியதை தொடர்ந்து அவரது தந்தை, " இந்த பயன்படுத்திய ஆடையை இரண்டு டாலர்களுக்கு உன்னால் விற்க முடியுமா? அவ்வாறு இரண்டு டாலர்கள்விலைக்கு இதை விற்க முடியும் என்றால்,நம்முடைய குடும்பத்திற்கு தற்போது பேருதவியாகும்." எனகோரினார் உடன் ஜோர்டான், "அப்பா! நீங்கள் கோரியவாறு இதனை விர்பணை செய்வதற்கு நான் முயற்சி செய்கிறேன், ஆனால் என்னால் அதற்கு உத்தரவாதம் எதுவும் தரமுடியாது ." என்றுகூறி அந்த பயன்படுத்தி ஆடையை நன்கு துவைத்து காயவைத்து மடிப்பாக செய்து மடித்து.வைத்தார் அடுத்த நாள், அவர் அருகிலிருந்த கூட்டம் மிகுந்த சந்தைக்கு அதனை எடுத்துசென்று. ஆறு மணி நேரத்திற்கு மேல் அதனுடைய விலையை கூவிதிரிந்து கொண்டிருந்தார் இறுதியாகஅவருடைய தந்தை கூறிய 2 டாலர்விலைக்கு அதை விற்க முடிந்தது. அவர் அந்த இரண்டு டாலர் பணத்தினை எடுத்து கொண்டு வீட்டுக்கு ஓடிவந்து தன்னுடைய தந்தையிடம் மகிழ்ச்சியுடன் வழங்கினார். பின்னர், ஒருசில நாட்கள் கழித்து, அவரது தந்தை அவரிடம் மீண்டும் மற்றொரு பயன்படுத்திய ஆடையை, கொடுத்து "தற்போது இதனை நீ 20டாலருக்கு விற்க முடியுமா ? " என கோரினார் உடன் ப யத்தில், ஜோர்டான் "ஐயய்யோ!அது எப்படி சாத்தியம் இதனை நன்கு துவைத்து காயவைத்து மடிப்பாக செய்தாலே அதிகபட்சம் இரண்டு டாலர்கள் மட்டுமே கிடைக்கும்." என பதட்டத்துடன் பதிலிறுத்தார் அதனை தொடர்ந்து அவரது தந்தை, " நீ ஏன்புதியவழியில் முயற்சி செய்ய கூடாது? அவ்வாறாக இதனை 20டாலரில் விற்பணை செய்வதற்கு புதிய வழியில் முயற்சி செய்துதான் பாரேன் ." என அவரிடம் அந்த பழைய ஆடையை ஒப்படைத்தார் மைக்கேல் ஜோர்டான் அதிக பயத்தில் ஒரு சில மணி நேரம் அப்படியே உட்கார்ந்துவிடடார் பிறகு, இறுதியாக, அவருக்கு புதிய வித்தியாசமான யோசனை ஒன்று தோன்றியது அதனை செயல்படுத்தலாம் என முடிவுசெய்தார் அதாவது அந்த பழைய ஆடையை நன்கு துவைத்து காயவைத்து மடிப்பாக செய்துமடித்துவைத்த பின்னர் அருகிலிருந்த ஒரு ஓவியரிடம் மிக்கி மவுஸ் எனும் படத்தை அந்த ஆடையில் வரையச்செய்து அதற்காக அந்த ஓவியருக்கு 2 டாலர் வழங்குவதாக உறுதியளித்து சந்தைக்கு எடுத்து சென்றார் பணக்காரவீட்டு சிறுவன் ஒருவன் மிக்கிமவுஸின் ஓவியம் வரையப்பட்ட இந்த ஆடையைபார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியுற்று தன்னுடைய பெற்றோரிடம் இந்த மிக்கிமவுஸ் வரையப்பெற்ற பழையஆடையை தனக்கு வாங்கிதருமாறு தொந்திரவு செய்ததை தொடர்ந்து இறுதியாக 25 டாலர்களுக்கு அதனை அந்த பணக்கார குடும்பத்திற்கு விற்பணைசெய்தார் இந்த தொகை ஜோர்டானுடைய தந்தையின் ஒரு மாத ஊதியத்திற்கு சமமாகும். அதனால் ஜொர்டானும் அவருடைய வீட்டில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் மகிழ்சியுற்றனர் அதன்பின்னர் அவரது தந்தை மீண்டும் மற்றொரு பயன்படுத்திய ஆடையை கொடுத்து, "நீ இதனை 200 டாலர்கள் என்ற விலையில் மறுவிற்பனை முடியுமா?" எனக்கோரினார் ஜோர்டான் மிகவும் மகிழ்ச்சியாக" ஏன்முடியாது" என சிறிதும் மிகவும் தைரியமாக சந்தேகம் எதுவும் இல்லாமல் ஏற்று கொண்டார். ஒருசில நாட்கள் கழித்து அவர்கள் வாழ்ந்துவந்த நகரத்திற்கு ஒரு பிரபல திரைப்பட நடிகை படப்பிடிப்பிற்காக வந்தார் பத்திரிகையாளர்களை தவிர யாரும் அந்த நடிகையின் அருகில் செல்லமுடியாதஅளவு பாதுகாப்பு இருந்தது இருந்தாலும் ஜோர்டான் பிரபல நடிகையின் அருகில் எப்படியோ போய்சேர்ந்து தான் வைத்திருக்கும்பழைய ஆடையில் . அவருடைய கையெழுத்தினை (ஆட்டோகிராப்பை)கோரினார் அப்பாவி தோற்றத்துடன் இருந்த ஜொர்டானை பார்த்து,மகிழ்ச்சியுடன் பழையபயன்படுத்திய ஆடையில் அந்த பிரபல நடிகையானவர் தன்னுடைய கையெழுத்தினை இட்டார் உடன் மிகவும் மகிழ்ச்சியாக கூட்டத்தைவிட்டு வெளியேவந்த ஜொர்டான் பின்னர் சந்தையில் சென்று பிரபலநடிகை கையெழுத்திட்ட அந்த ஆடையை ஏலத்தில் விற்பணைசெய்வதாகவும் குறைந்தபட்ச விற்பனை விலை 200 டாலர்கள் ஆகும்!" எனக்கூவினார் உடன் சந்தையில் இருந்தவர்கள் நான் நீ என போட்டிபோட்டு கொண்டு ஏலத்தின் விலையைஉயர்த்தி கொண்டேசென்று இறுதியில் 1,200 டாலர்கள் என்ற விலையில் ஒரு தொழிலதிபர், ஏலம் எடுத்தார்! விற்பனைத்தொகையான 1200 டாலர்களுடன் வீட்டிற்கு சென்றபோது குடும்ப உறுப்பினர் அனைவரும் மிகவும்மகிழ்ச்சியாக கொண்டாடினர் மிகமுக்கியமாக அவரது தந்தை கண்ணீர் மல்க , " மகனே நீ கண்டிப்பாக வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வாய்"என அவரை வாழ்த்தினார் அவருடைய தந்தையின் இந்த வாழ்த்து செய்தியை அடிப்படையாக கொண்டு மைக்கேல் ஜோர்டான் என்பவர் தனக்கு பிடித்தமான கூடைபந்து விளையாட்டினை முழுநம்பிக்கையுடன் கற்று மிக பெரிய பிரபலமான கூடைப்பந்து வீரராக உயர்ந்தார் வாழ்க்கையில் வெற்றிபெறவேண்டும் என்ற மனமிருந்தால்போதும் நாம் முயற்சிசெய்து வாழ்க்கையில் மிகசிறந்த வெற்றியாளராக மலரமுடியும் என்பது திண்ணம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...