தற்போதை இருபத்தொன்றாம் நூற்றாண்டானது இணைய உலகமாக உள்ளது அனைவரும் அறிந்த செய்தியே அதனால் நம்முடைய நிறுவனம் வியாபாரத்தில் வெற்றிநடைபோடவேண்டுமெனில் கண்டிப்பாக நம்முடைய நிறுவனத்தின் இணையதளத்தினை வாடிக்கையாளர் அனைவரையும் கவரும்வண்ணம் மேம்படுத்திடவேண்டும் அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு
1. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தேடுபெறிகளின் வாயிலாகவே தாங்கள் விரும்பும் பொருட்களை தேடி அடைகின்றனர் அதனால் நம்முடைய இணையபக்கத்தில் பயன்படுத்திடும் சொற்கள் தேடுபொறிகளின் சொற்களுக்கு பொருத்தமானதாக இருக்குமாறு அமைத்து கொள்க
2. முகப்பு பக்கத்தில் நம்முடைய நிறுவனத்தை பற்றிய அறிமுகம் இரத்தினசுருக்கமாக இருக்கவேண்டும் மேலும் விவரங்களை தனியான இணைப்பு பக்கத்தில் அல்லது தாவியின் பக்கத்தில் வழங்குக
3. நம்முடைய இணையபக்கத்தை அடையவேண்டிய அவசியமான முடிவை முதலிலும் அதற்கடுத்தமுக்கியதகவல்களை அடுத்தும் அதற்கடுத்த தகவல்களை மூன்றாவதாகவும் பிரமிடு வழிமுறையில் நம்முடைய இணையத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கும் சொற்களை கட்டமைத்திடுக
4. நம்முடைய இணைய பக்கங்களில் அமைந்துள்ள உரையானது எவ்வாறுஎழுதியது என பார்வையாளர்கள் கவலைபடமாட்டார்கள் ஆனால் இவ்வாறான உரையை யார் எழுதியது என அறிந்துகொள்ளும் ஆவலைதூண்டிடுமாறு இந்த உரைஅமைந்திருக்குமாறு வடிவமைத்திடுக
5. நம்முடைய வியாபார நடவடிக்கைகக்கு ஏற்ப இந்த முகப்புபக்கத்தில் உருவப்படங்கள் கானொளிபடங்கள் இசைகள் வினாடிவினாக்கள் போன்றவைகளுள் பொருத்தமானதை கொண்டு வடிவமைத்திடுக
6. நாம் கூறவிழையும் கருத்துகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் சிறுசிறுபத்திகளாக பிரித்தும் தேவைப்பட்டால் கூடுதல் இணைப்புபக்கத்துடனும் முகப்பு உரையை வடிவமைத்திடுக
7. நம்முடைய முதன்மை குறிக்கோளே பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றுவதுதான் அதனால் பொருத்தமான தொழில்நுட்பங்களையும் இணைப்புகளையும் திறவுச்சொற்களையும் (Good Keywords) பார்வையாளர்களை கவரும் வண்ணம் கட்டமைத்திடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக