சனி, 1 டிசம்பர், 2018

பிரச்சினைக்கான தீர்வை செயல்படுத்திடுவதற்கு முன் அந்த பிரச்சினை என்னவெனமுதலில் சரியாக தெரிந்து கொள்க


பேருந்து நடத்துனர் ஒருவர் பயனிகளுக்கு பயனச்சீட்டினை வழங்கி அதற்கான கட்டணத்தினை வசூலிக்கும் தன்னுடைய வழக்கமான பணியை செய்து கொண்டிருந்தார் அப்போது ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஆறரைஅடிஉயரத்தில் பீமன்போன்ற உடலுரு கொண்ட வாட்டசாட்டமான நபர் ஒருவர் பேருந்தில் ஏறிய பின்னர் "பெரியண்ணன் பேருந்து கட்டணத்தை செலுத்தமாட்டார் "என கூறிகொண்டு இருக்கையில் அமர்ந்து கொண்டார் அவருடைய தோற்றத்தை பார்த்துபயந்து போன பேருந்தின் நடத்துனர் அவரிடம் மட்டும் பேருந்தில் பயனிப்பதற்கான கட்டணத்தை வாங்காமல் விட்டிட்டு தன்னுடைய சொந்த பணத்தினை செலுத்தி கணக்கினை நேர்செய்துகொண்டார் மறுநாளும் அதே நபர் அதே போன்று பேருந்தில் ஏறிய பின்னர் "பெரியண்ணன் பேருந்து கட்டணத்தை செலுத்தமாட்டார்" என கூறிக்-கொண்டு இருக்கையில் அமர்ந்து கொண்டார் அவருடைய தோற்றத்தை பார்த்துபயந்து போன பேருந்தின் நடத்துனர் மறுநாளும் அவரிடம் மட்டும் பேருந்தில் பயனிப்பதற்கான கட்டணத்தை வாங்காமல் விட்டிட்டார் இந்த நடைமுறை பலநாட்கள் தொடர்ந்தது அதனால் நடத்துனர். வாட்ட சாட்டமான அந்த பயனியுடன் நேருக்குநேர் மோதிபார்த்துவிடுவது என முடிவுசெய்தார் பின்னர் அதற்காகஒரு நல்ல உடல் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சிக்கு சென்று தன்னுடைய உடல்வலிமையை வலுவாக்கிய பின்னர் ஒருநாள் நடத்துனர் வழக்கமாக பேருந்தில் பயனிப்பதற்கான கட்டணத்தை செலுத்தாத அந்த பெரியண்ணனிடம் துனிச்சலாக சென்று "ஐயா! பேருந்தில் பயனிப்பதற்கான கட்டணத்தை நீங்கள் ஏன்செலுத்தமாட்டீர்?" என வினவினார் "அதுவா தம்பி! நான் இந்த பேருந்தில் பயனிப்பதற்காக மாதாந்திரம் கட்டணம் செலுத்தி அதற்கான அனுமதிசீட்டினை வைத்துள்ளேன் அதனால்தான் நான் பயனச்சீட்டு வாங்கமாட்டேன் "என க்கூறினார் அடடா இந்த தகவல் முன்னரே தெரிந்திருந்தால் என்னுடைய சொந்த பணத்தினை இழக்காமல் இருந்திருப்பேனே என வருத்தபட்டார் அந்த பேருந்தின் நடத்துனர் ஆம் எந்தவொரு பிரச்சினைக்கான தீர்வை செயல்படுத்திடுவதற்கு முன் அந்த பிரச்சினை என்னவெனமுதலில் சரியாக தெரிந்து கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...