சனி, 22 டிசம்பர், 2018

இந்தியாவில் ஒரு புதிய நிறுவனத்தை பதிவு செய்வது எவ்வாறு


தற்போது இந்தியாவில் புதியதாக தொழில் துவங்கவிருப்பமுடையவர்கள் அப்புதிய நிறுவனத்தை மிகவிரைவாக ஏழேநாட்களில் பதிவுசெய்திடமுடியும் என்ற மிக எளிமையான நடைமுறையை நிறுவனங்களின் விவகாரத்துறை அமைச்சகம்(MCA) செயல்படுத்திடுகின்றது இதற்காக நாம்எந்தவொரு அரசு அலுவலகங்களுக்கும் நேரடியாக செல்லத்தேவையில்லை மேலும் நாம் இந்தியாவில் எந்தவொரு இடத்திலிருந்தும் அனைத்து ஆவணங்களையும் மின்னனு முறையில் பூர்த்திசெய்து பதிவேற்றம் செய்தால் மட்டும் போதுமானதாகும் இவ்வாறு புதிய நிறுவனங்களை பதிவுசெய்வதற்காகவே பல்வேறுநிறுவனங்களும் நிறுவனங்களின் விவகாரத்துறை அமைச்சக குழுக்களும் நமக்கு உதவதயாராக இருக்கின்றன இதற்காக முதலில் 1 தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமம் 2. பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் 3.ஒருநபர் நிறுமம் 4.தனிநபர் உடைமை நிறுமம் 5.பொதுவான கூட்டாண்மை நிறுமம் ஆகிய ஐந்துவகைகளில் பதிவு செய்திட முடியும் இவை ஒவ்வொன்றும் வசதி வாய்ப்புகளில் பல்வேறு வகைகளில் வேறுபட்டவையாக இருப்பதால் இவற்றுள் ஒரு வகையை மட்டும் நாம் பதிவு செய்யவிரும்பும் நிறுவனத்தின் வகையாக முடிவுசெய்து தெரிவுசெய்து கொள்க அதற்கடுத்ததாக இந்தியாவில் ஒரு வியாபார நிறுவனத்தை பதிவு செய்வதற்கான நடைமுறையை எளியதாக ஆக்குவதற்காக நிறுவனங்களின் விவகார்த்துறை அமைச்சகம் (MCA)ஆனது INC-29 எனும் படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அதாவது பதிவுசெய்திட விரும்பும் ஒரு நிறுவனத்திற்கான வணிக பெயர் ஒப்புதல் பெறுதல், இயக்குனரின் அடையாள எண் (DIN),நிறுவனத்தை பதிவுசெய்வதற்கான விண்ணப்பம் ஆகிய மூன்று செயல்களையும் இந்த (INC-29)படிவத்திலேயே செயற்படுத்திடுமாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது மூன்றாவதாக நிறுவனங்களின் விவகாரத்துறை அமைச்சகத்திலிருந்து (MCA) பதிவுசெய்யப்படும் நிறுவனத்தின் இயக்குனர்களுடைய DSC எனும் மின் கையொப்ப சான்றிதழ்களை பெறவேண்டும் இதற்காக தேவையான ஆவணங்களை இணையத்தின் வாயிலாக சமர்ப்பித்தால்போதும் அவைகள் சரியாக இருந்தால் இந்தமின்கையொப்ப சான்றிதழை இரண்டு நாட்களுக்குள் பெறமுடியும் தகவல் தொழில்நுட்ப சட்டம்200-இன் விதிகளின்படி, மின்னணு வடிவத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆவணங்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்காக அவைகளுடன் இந்தமின் கையொப்பங்களைப் பயன்படுத்துவதை குறிப்பிடுகின்றன, அவைகளின்படி சமர்ப்பிக்கப்படும மின்னணு ஆவணம் பாதுகாப்பானது என்றும் உண்மையானது என்றும் அனுமதிக்கின்றது. எனவே, MCA21 எனும் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் / வரையறுக்கப்பட்டகூட்டாண்மை நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் அனைத்து கோப்புகளும் கையொப்பமிட அனுமதிக்கப் பெற்ற நபர் தனக்கு அளிக்கபபட்ட மின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் இந்த INC-29படிவத்தை தயார் செய்யவேண்டும் அதற்காக இயக்குனரின் அடையாள எண் (DIN ),நிறுவனத்தின் பெயர் ஒப்புதல்சான்றிதழ் , MOA மற்றும் AOA ஆகிய அடிப்படை ஆவணங்களின் விவரம் ,பதிவுசெய்யப்பட்ட அலுவலக சரிபார்ப்புவிவரம் ,இயக்குநர்களின் நியமனக்கடிதங்கள் அறிவிப்புகள் ஆகிய விவரங்கள்இந்த INC-29 படிவத்தில் பூர்த்தி செய்யப்படவேண்டும் ஒரு நிறுவனத்தை பதிவு செய்ய இந்த INC-29 படிவத்துடன் சமர்ப்பிக்கத் தேவையான ஆவணங்கள் பின்வருமாறு மார்பளவு உருவப்படம் , நிரந்தரவருமானவரி எண்அட்டை(PAN card), சமீபத்திய வங்கி கணக்குஅறிவிக்கை,தொலைபேசிஅல்லதுசெல்லிடத்து பேசியின் பட்டியல் அல்லது எரிவாயு இணப்பு பட்டியல், ஒட்டுரிமைசான்றட்டை , பதிவு அலுவலகம் வாடகையாக இருந்தால் ஆங்கிலத்தில் வழக்குரைஞரின் சான்றளிக்கப்பட்ட வாடகை ஒப்பந்த பத்திரம் ,வாடகை பதிவு அலுவலகம் வழங்குவதற்கான மறுப்பின்மை சான்று, பதிவுஅலுவலகத்தின் முகவரிஅடையாள சான்று ஆகிய ஆவணங்களின் வருபட்ட நகல்கள் இந்த படிவத்துடன் இணைக்கப் படவேண்டும் அதாவது மேலே கூறிய அனைத்து ஆவணங்களின் வருடப்பட்ட நகல்களும் இந்த INC-29 படிவத்துடன் இணைக்கப் படவேண்டும் அதன்பின்னர் INC-29 படிவத்தில் தேவையானஅனைத்து விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்டு தயாராக உள்ளதெனில்இந்த INC-29 படிவத்தை இணையத்தின் வாயிலாக நிறுவன விவகாரத்துறை அமைச்சகத்தின் (MCA) இணைய வாயிலில் சமரப்பிக்கவேண்டும் பிறகு இந்த INC-29 படிவம் சரியான விவரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் குறிப்பிட்ட நிறுமம் பதிவுசெய்யப்பட்டதாக அதற்கான பதிவுஎண்ணுடன் certificate of incorporation எனும் நிறுவன பதிவு சான்றிதழ்கிடைக்கும் அதனை தொடர்ந்து இந்த நிறுவனங்களின் பதிவெண் அடிப்படையில் நம்முடை ய நிறுவனத்திற்கான வருமான வரி அலுவலகத்தின் வாயிலாக நிரந்தர வருமான வரி கணக்குஎண் பெறமுடியும் மேலும் நம்முடைய நிறுவனத்திற்கென தனியாக வர்த்தக வங்கியில் வங்கி கணக்கு ஒன்றினை துவங்கமுடியும் அதற்குப் பிறகு நம்முடைய நிறுவனத்தின் வணிக வகை மற்றும் அளவை பொறுத்து பொதுசரக்குசேவைவரி (GST) பதவிற்காக விண்ணப்பிக்க வேண்டும். பொதுவாக நாம் துவங்கவிருப்பது தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் எனில் குறைந்தபட்சம் 2 இயக்குநர்களும் அதிகபட்சம் 15 இயக்குநர்களும் அவ்வாறே குறைந்தபட்சம் 2 பங்குதாரர்களுடனும் அதிகபட்சம் 50 பங்குதாரர்களுடனும் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக பதிவுசெய்திடலாம் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமமாக (LLP) கூட நாம் பதிவுசெய்திடமுடியும் ஆனால் சிறிது கூடுதலான நடைமுறையை நம்முடைய நிறுவனத்தை பதிவுசெய்வதற்கு பின்பற்றிடவேண்டும் ஒரேயொரு பங்குதாரரும் இயக்குநரையும் கொண்ட சிறிய ஒருநபர் நிறுமமாக கூடபதிவுசெய்திடமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...