கலோனல் சான்டர்ஸ் என்பவர் தன்னுடைய 65 ஆவது வயதில் தனது சமூக பாதுகாப்பிற்கான காசோலை 99 டாலர் ஓய்வூதியம் பெற்றுவந்தார் அப்போது அவரிடம் வாழ்வதற்காக மிகச்சிறிய வீடுஒன்றும் எங்காவது செல்வதற்காக பழைய மகிழுந்து ஒன்றும் மட்டுமே அவருடைய சொத்துகளாக உடைமையாக இருந்தன ஆனால் அவர் மிகசிறப்பாக அனைவரும் விரும்புமாறான கோழிவருவல் உணவை தயாரித்திடுவார் அதனால் அவருடைய நண்பர்கள் அனைவரும் இந்த கோழிவருவலுக்காகவே அவரை சுற்றிசுற்றி வந்து கொண்டிருப்பார்கள் அந்நிலையில்இதனை ஏன்ஒரு நல்ல தொழிலாக மாற்றியமைத்து செயற்படுத்தக்-கூடாது என அவர் சிந்தித்தார் அதனை தொடர்ந்த அதனை நடைமுறை படுத்திடுவதற்காக முனைந்தார் அதனால் நாடுமுழுவதும் சுற்றுலாவை செயற்படுத்திடும் முகவர்கள் நடத்திடும் உணவகங்களில் இந்த கோழிவருவல் உணவை இலவசமாக வழங்க தான் தயாராக இருப்பதாகவும் அதனை அனுமதிக்குமாறும் அவ்வுணவகங்களில் 1000 முறை கோரினார் ஆயிரமுறையும் அவ்வாறான சுற்றலா முகவர்களின் உணவகங்களில் கட்டணமில்லாமல் அவருடைய கோழிவருவல் உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறான அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டன இருந்தபோதிலும் அவரும் இவ்வாறான நிராகரிப்பினால் சோர்வுற்றிடாமல் கடைசியாக இன்னும் ஒருமுறை முயன்றுதான் பார்ப்போமே என 1001 ஆவதுமுறை முயற்சிசெய்தார் அதாவது சுற்றுலா உணவகத்தில் இவருடைய கோழிவருவல் உணவை இலவசமாக வாடிக்கை-யாளர்களுக்கு வழங்குவது எனும் கோரிக்கை ஏற்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது அதனை தொடர்ந்து இவருடைய கோழிவருவல் உணவு வாடிக்கையாளர் அனைவரும் விரும்பும் உணவாக வாடிக்கையாளர்களின் உணவுப்பழக்கமே மாறிப்போனது அவ்வாறு வாடிக்கையாளர்களின் உணவு பழக்கம் மாறியதை தொடர்ந்த அவருடைய கோழிவருவல் உணவினை உற்பத்தி செய்திடும் ஆண்டொன்றிற்க 45 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டிடும் அவருடைய கெண்டகி ஃபிரைடு சிக்கன் (KFC)எனும் மிகவும் பிரபலமான உணவு நிறுவனமாகவும். 220 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் செயல்படும் ஒரு உலகளாவிய மாபெரும் நிறுவனமாகவும் பரந்து வளர்ந்து விட்டது. விடாமல்முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்ற பழமொழியை மனதில் கொள்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக