செவ்வாய், 4 டிசம்பர், 2018

மிகை ஊதிய பங்குகள் வெளியீடு (Bonus Shares Issue)


இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றத்தால் 31.12.1600இல் உருவாக்கப்பட்ட கிழக்கிந்திய கம்பெனி என்பதுதான் நாம் வாழும் இந்த உலகில் முதன் முதலில் தோன்றிய நிறுமமாகும் இது தற்போது நாம் செயல்படுத்திவரும் நிறுமத்தின் அனைத்து செயல்களுக்கும் முன்னோடியாகவிளங்கி வருகின்றது அவற்றுள் மிகை ஊதிய பங்குகள் வெளியீடும் ஒன்றாகும் மிகை ஊதிய பங்குகள் என்பது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குதாரர்களனைவரையும் அதற்காக அவர்களை அந்நிறுமத்தால் கௌரவிக்கும் ஒரு வழிமுறையாகும் அதாவது ஒருநிறுமத்தின் பங்குதாரர்களை கௌரவிப்பதற்காக ரொக்கமாக அல்லது தொகையாக அவர்களுக்கு வழங்குவதற்கு பதிலாக பங்காதாயமாக அல்லது அவ்வாறு வழங்க இயலாத நிலையில்மிகைஊதிய பங்காக வெளியிடுவது போன்ற வழிகளில் ஒருநிறுமமானது செயல்படுத்திடும் இவவாறாக மிகை ஊதிய பங்கினை பெறும் பங்குதாரர்களுக்கு இதன்மூலம்பிற்காலத்தில்கூடுதலாக பங்காதாயம் கிடைப்பதற்கான வழி ஏற்படுகின்றது மேலும் தனக்கு உடனடியாக ரொக்கம் தேவையெனில் அப்பங்குதாரர் இந்த மிகை ஊதிய பங்குகளை விற்று ரொக்கமாக ஆக்கி கொள்ளமுடியும் இந்த கிழக்கிந்திய கம்பெனியானது முதன்முதலில் தன்னுடைய பங்குதாரர்களுக்கு1682 இல் இவ்வாறானமிகைஊதிய பங்கு களைவெளியிட்டது பொதுவாக இந்த மிகைஊதிய பஙகினை வெளியிடுவதன்மூலம் பின்வருமாறான வசதிகள் வாய்ப்புகள் ஏற்படுகின்றன 1.ஒரு நிறுமமானது இலாப பங்கீடாக பங்காதாயம் வழங்குவதற்கு பதிலாக மிகைஊதியபங்குகளை வெளியீடு செய்திடும்போது பங்காதாயத்திற்கான வரி செலுத்துவது தவிர்க்கப்படுகின்றது .பங்குதாரர்கள் பெறும் இந்த மிகை ஊதிய பங்கினை மற்றவர்களிடம் விற்பணை செய்வதால் கிடைக்கும் தொகைக்கு அல்லது நிறுமமே மீண்டும் பங்குகளை வாங்கிகொள்ளும்போது கிடைக்கும தொகைக்கு வரிசெலுத்த தேவையில்லை ஆனால் பங்காதாயமாக பெறும்போது குறிப்பிட்ட வரம்பிற்குமேல் பெறப்படும் பங்காதாய தொகைக்கு வரி செலுத்தவேண்டும் 2.நிறுமமானது நல்ல இலாபம் ஈட்டிகொண்டிருக்கும்போது தன்னுடைய இலாபத்தை தன்னுடைய நிறுவனத்திற்குள் நிலையான சொத்துகளுக்காகவும் நடைமுறை மூலதனத்திற்காகவும் மறுமுதலீடு செய்வதற்கான ஒரு சிறந்த வழிமுறையாக இது அமைகின்றது மேலும் பொதுமக்களிடம் பங்குவெளியீட்டின் வாயிலாக முதலீட்டினை திரட்டுவதற்கு பதிலாக தன்னிடம் உள்ள நிதிவளங்களையே மறுமுதலீடாக பங்குதாரர்களின் பெயர்களில் நிறுவனத்திற்கு தேவையான நிலையான சொத்துகளை கொள்முதல் செய்வதற்கும் நடைமுறை மூலதனத்திற்கும் பயன்படுத்தி கொள்ளலாம் 3.ஒரு நிறுவனத்தின் பங்குகள் பொதுமக்களால் வாங்கி விற்க முடியாத அளவு பங்குகளின் விலையானது ராக்கெட்போன்று உயரத்தில் செல்வதை குறைத்து வழக்கமாக பொதுமக்களனைவரும் அந்நிறுமத்தின் பங்குகளை வாங்கி விற்பதற்கு ஏதுவாக பங்குகளின் விலையை குறைவாக இருந்திடுமாறு பராமரிப்பதற்காக இந்த மிகைஊதிய பங்கு வெளியீடு உதவுகின்றது அதனால் பொதுமக்கள் பலரும் பங்குசந்தையில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளவழிவகுக்கின்றது 4 சில நிறுமங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இவ்வாறு மிகை ஊதிய பங்குவெளியீடு செய்வதால் குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் தங்களுடைய முதலீட்டின் மதிப்பானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நிறுமத்தின்மீது ஒருநல்ல மதிப்பு தோன்ற வழிவகுக்கின்றது நிறுமச்சட்டம் 2013 இன் படி எந்தவொரு நிறுமமும் தன்னிடம்உள்ள மூலதன ஈவுத்தொகை கணக்கு ,மூலதனமீட்புஒதுக்கீடு,கட்டற்ற ஒதுக்கீடுகள்(Free Reserves) ஆகியவற்றினை கொண்டு இவ்வாறான மிகை ஊதிய பங்கினை தன்னுடைய பங்குதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்திடலாம்ஆனால் அந்நிறுமம் பங்காதாயத்திற்கு பதிலாக மிகை ஊதிய பங்கினை வெளியீடுசெய்திடக்கூடாது என வரையறை செய்துள்ளது மேலும் நிறுமமானது இவ்வறு மிகை ஊதிய பங்கினை வெளியீடு செய்வதாக இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டால் அந்த முடிவிலிருந்து பின்வாங்க முடியாது ஆயினும் அந்நிறுமம் தான் பெற்ற கடனிற்கு வட்டிஅல்லது வட்டியும் அசலும் அல்லது அத்தியாவசியமாக செலுத்த வேண்டியசெலவுகள் ஆகியவை நிலுவையிலிருக்கும்போது இவ்வாறான மிகை ஊதிய பங்குகளை கண்டிப்பாக வெளியீடு செய்திடமுடியாது என்பதே மிகை ஊதிய பங்கு வெளியீட்டிற்கான இரண்டாவது முக்கிய நிபந்தனையாகும் சென்றஆண்டில் Biocon, BPCL, HPCL, ICICI Bank, L&T, Wipro போன்றநிறுமங்கள் இவ்வாறன மிகைஊதிய பங்குகளை வெளியீடு செய்துள்ள மிகமுக்கிய இந்திய நிறுமங்களாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...