திங்கள், 5 நவம்பர், 2018

வாய்ப்பு நம்முடைய வீட்டின் கதவினை ஒரு முறை மட்டுமே தட்டும்


பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெழுகுவர்த்தி வியாபாரத்தில் சிறந்த விற்பனையாளராகவும் மிகப்பிரபலமான முன்னனி நிறுவனமாகவும் பிராக்டர் அண்ட் கேம்பிள் என்ற நிறுவனம் இருந்துவந்தது இந்நிலையில் கி பி1879 ஆம் ஆண்டில் தாமஸ் அல்வா எடிசன் எனும் அறிவியல் அறிஞர் மின்சாரத்தால் எரியும் மின்விளக்கை கண்டுபிடித்தார் அதன்பின்னர்பொதுமக்கள் அனைவரும் தங்களுடையை வீடுகளில் இரவில் வெளிச்சம் தருவதற்காக மெழுகுவர்த்தி பயன்படுத்திடும் வழக்கொழிந்து அதற்கு பதிலாக மின்விளக்குகளை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்தனர் அதனால் கிறிஸ்துமஸ் விழா போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டுமே இந்த மெழுகு வர்த்தியை வாங்குவது தவிர மற்றநாட்களில் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய அனைத்து தேவைகளுக்கும் மெழுகுவர்த்திவாங்குவதை அறவே தவிர்த்ததால் மெழுகுவர்த்தி வியாபாரம் வீழ்ச்சியடைந்தது அதனால் சின்சினாட்டி என்ற நகரில் இருந்த இந்த பிராக்டர் அண்ட் கேம்பிள் என்ற நிறுவனம் போதுமான வருமானம் இல்லாமல் திவாலாகும் நிலையில் போராடிக் கொண்டிருந்தது அதனை தொடர்ந்து இந்நிறுவனமானது எப்படிஇந்த நிலையிலிருந்து மீண்டு எழுவது அல்லது இந்த நிறுவனத்தையே மூடிவிடலாமா என்ற மிகவும் சிக்கலான நிலையில் தத்தளித்து கொண்டிருந்தது இவ்வாறான நிலையில் ஒருநாள் அந்நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்ஒருவர் தாம் இயக்கிக் கொண்டிருந்த இயந்திரத்தினை உணவு இடைவேளையின்போது மறதியாக நிறுத்தம் செய்திடாமல் அப்படியே வி்ட்டுவிட்டுசென்றார் பின்னர் அவர்மதியஉணவு இடைவேளை முடிந்து திரும்பிவந்து பாரத்தபோது அவர் இயக்கிகொண்டிருந்த இயந்திரமும் பணிபுரிந்த இடமும் நொப்பும் நுரையுமாக காற்று குமிழிகள் நிரப்பப்பட்டவாறு முழுகிஇருந்தன உடன் அந்த தொழிலாளியுடன் பணிபுரிந்த மிகுதி அனைவரும் இத்தோடு அந்த தொழிலாளியின் கதைமுடிந்தது அவரை வேலையைவிட்டு நீக்கிவிடுவார் என அச்சத்துடன் பார்த்து கொண்டிருந்தவேளையில் நிறுவனத்தின் முதலாளி அங்குவந்து அந்த சூழலை பார்வையிட்டார் அதனை தொடர்ந்து இவ்வளவு நுறையடன் காற்றுக்குமிழிகள்ஏன் உருவாகியது நாம் குளிப்பதற்கு பயன்படுத்திடும் சோப்பினை இதிலிருந்து ஏன் தயார் செய்யக்கூடாதுஎன வித்தியாசமாக சிந்தித்தார் அதனடிப்படையில் ஐவரி எனும் குளியல் சோப்பு உருவானது அந்நகரத்திற்கு அருகில் ஓடிக்கொண்டிருந்த ஓகியோஎன்ற ஆற்றில் குளிக்கும்போது பயன்படுத்திடும் மிதக்கும் சோப்பு அதன்மூலம் கிடைத்தது அந்நகரம் மட்டுமல்லாது அந்நாடுமுழுவதும்பொதுமக்கள் பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் ஐவரி எனும் இந்த புதிய குளியல் சோப்பினை பயன்படுத்திட துவங்கியதால் குளியல் சோப்பு வியாபாரத்தில் பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் ஒரு சிறந்தவிற்பனையாளராக உயர்ந்து முக்கிய தூணாக மாறியது இந்த பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தில் தோன்றிய இவ்வாறான அசம்பாவிதங்கள் அல்லது வெளித்தோற்றத்தில் (unsurmountable) ஏதேனும் பிரச்சினைகள் எழும்போது அதனை அப்படியே தீர்வுசெய்து விட்டுவிடாதீர்கள் ஏனெனில் அந்த பிரச்சினைக்கான தீர்வினை படைப்பாற்றலாக மாறிடுமாறு வித்தியாசமாக சி்ந்தித்து ஒரு தங்க சுரங்கம்போன்ற புதிய வெற்றி வாய்ப்பாக இதனை மாற்றிக்கொள்ளமுடியும் . இதனைபோன்ற வாய்ப்பு நம்முடைய வீட்டின் கதவினை ஒரு முறை மட்டுமே தட்டும் . அதை கைகொள்ள நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்!என்ற செய்தியை மனதில் கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...