புதன், 28 நவம்பர், 2018

நமக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் கெடுதல் செய்பவர்களுக்கு உதவிசெய்திடவேண்டாம்


ஒரு கிராமத்திற்குஅருகிலிருந்த காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்துவந்தது அவ்வப்போது ஆட்களை கொன்று சாப்பிட்டுவந்து கொண்டிருந்தது அதனால் அந்தஊரில் வாழ்ந்துவந்தவர்கள் ஒன்று கூடி வலைவிரித்து அந்த சிங்கத்தை பிடித்து ஒரு கூண்டிற்குள் அடைத்து வைத்தனர் சிங்கத்திற்கு இரைஎதுவும் இல்லாததால்பசி அதிக மானது அந்த வழியாக சென்ற மிருகங்களை அழைத்து கூண்டினை திறந்துவிடுமாறு எவ்வளவோகெஞ்சி பார்த்தும் மற்றமிருகங்கள் இந்த சிங்கத்தை திறந்துவிட்டால் நம்மையை அடித்து சாப்பிட்டவிடும் என பயந்து சிங்கத்தை அடைத்துவைத்த கூண்டினை திறக்காமல் சென்றுவிட்டன இந்நிலையில் அப்பாவியான ஒரு மனிதன் அந்த வழியாக வந்தான் உடன் அவனிடம் ஐயா தயவுசெய்துஇந்த கூண்டைதிறந்து என்னை வெளியே விடுங்கள் என கெஞ்சியது அப்பாவியும் நான் திறந்துவிட்டால் என்னை அடித்து கொன்றுவிடுவாய் அதனால் நான் செய்யமாட்டேன் எனகூறினான் ஐயா நான் அவ்வாறே உன்னை அடித்து கொள்ளமாட்டேன் என உறுதிஅளிக்கின்றேன் என உறுதியளித்ததால் அப்பாவி மனிதனும் கூண்டினை திறந்து சிங்கத்தினை விடுவித்தான் இதுவரை உணவில்லாமல் பசியோடு இருந்த சிங்கமும் கூண்டினை விட்டு வெளியே வந்ததும் அப்பாவியை அடித்து கொன்று தின்னபாய்ந்தது உடன் சிங்கமே நீ கொடுத்தவாக்கினை காத்திடாமல் என்னை கொன்று தின்பது ஞாயமா எனவினவினான் அதெல்லாம் தெரியாது எனக்கு இப்போது பயங்கர பசி உன்னைதவிர இரையெதுவும் இங்கு இல்லை என மீண்டும் அந்த அப்பாவி மீது பாயத்துவங்கியது உடன் அப்பாவி இருஇரு யாரிடமாவது இதனை முறையிடுவோம் அதற்கு என்ன தீர்ப்பு கூறுகின்றார்களோ அதன்படி நடந்து கொள்வோம் என அப்பாவி கோரியதை சிங்கம் ஏற்றுகொண்டது அந்த சமயத்தில் நரிஒன்று அந்த வழியாக சென்றது அதனை அழைத்து நரியிடம் தங்களுடைய பிரச்சினைபற்றி அப்பாவி மனிதன் கூறியதைதொடர்ந்து நரியானது வாயால் கூறுவது எனக்கு சரியாக புரியவில்லை செயல்விளக்கமாக காண்பியுங்கள் என கோரியது உடன் சிங்கம் கூண்டிற்குள் சென்றது நரியானது அப்பாவியிடம் நீஎன்ன செய்தாய் எனக்கோரியபோது அந்த கூண்டின் கதவினை பூட்டியிருந்ததை காண்பித்தான் உடன் நரியானது அந்த சிங்கம் இருந்த கூண்டின் கதவினை நன்றாக பூட்டிவிட்டு சரி ஐயா நீங்கள் உங்கள் வழியே செல்லுங்கள் சிங்கம் கூண்டிற்குள்ளேய இருக்கட்டும் என அந்த அப்பாவியை வழிகூட்டி அனுப்பியது நமக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் கெடுதல் செய்பவர்களுக்கு உதவிசெய்திடவேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...