சனி, 10 நவம்பர், 2018

சமூக வலைதளங்களிலும் சந்தைப்படுத்தலிலும் தற்போதைய போக்குகள்


நம்முடையநிறுவனத்தின் உற்பத்தி பொருட்களையும் சேவைகளையும் மிகச்சரியான பயனாளிகளுக்கு கொண்டுசேர்ப்பதற்காக சமூக ஊடகங்களை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய நிறுவனத்தினைமிக வெற்றிகரமான நிறுவனமாக கொண்டுசெல்லமுடியும்அது மிகப்பெரியபயனுடையதாக இருந்தாலும் நாம் விரும்பும் விதமாக துல்லியமாக இருந்திடுமாறு மாற்றியமைத்திடவேண்டும் இவற்றிற்கு அடிப்படையாக சமூக ஊடகங்கள், சந்தை போக்குகள் ஆகியவைமிகச் சிறந்தகாரணிளாக இருப்பதால் அவற்றுள் ஆதிக்கம் செலுத்தக்கூடியவற்றை மட்டும் தற்போது காண்போம் 1 இணையத்தில் சொந்த இடத்தில் விளம்பரம் செய்வதா வாடகை இடத்தில் விளம்பரம் செய்வதா என்பதேமுதல் காரணியாகும் முகநூல் போன்ற சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்வது வாடகைஇடமாகும் இவ்வாாறன அதிக வாடகை செலவுகொண்ட இந்த வாடகைஇடத்தின்வாயிலாக விளம்பரம் செய்வது எண்ணற்ற பயனாளர்களை கைகொள்ளும் உத்தியாக இருந்தாலும் இதற்கான செலவு மிகஅதிமாகும் நம்முடைய சொந்த இணையபக்கத்தில்அல்லது வலைதளத்தில் விளம்பரம் செய்வது சொந்த இடவிளம்பரமாகும் இதன் வாயிலாக மிககுறைந்த பயனாளர்களின் கவணத்தையே கவரமுடியும் என்றாலும் மிககுறைவான செலவாகும் அதனால் இரண்டையும் சீர்தூக்கி சமன்செய்து நமக்கு பொருத்தமானதை மிகச்சரியானதை தெரிவுசெய்து கொள்க 2. இரண்டாவதாக தற்போதைய டிஜிட்டல் சந்தைபடுத்துதலில் செய்திகள் தகவல்தொடர்புகள் அனைத்தும் காணாது கரைந்து தொலைந்து போவதே மிகப்பெரிய சிக்கலாக சவாலாக உள்ளது அவ்வாறு காணாமல் கரைந்து தொலைந்து போகாமல் சரியான நபருக்கு சரியான செய்தியைத் சரியான நேரத்தில் சென்றடையுமாறு செய்வதே இந்த பயனாளிகளிடம நேரடி விளம்பரம்திட்டமாகும் இதன்வாயிலாக சந்தைபடுத்துதலின் செலவு குறையவும் நம்முடைய நோக்கம் நிறைவேறவும் வழிவகுக்கின்றது. 3 மூன்றாவதாக quora and meet.com. என்பது போன்ற வாடிக்கையாளர்களின் இணைய வலைபின்னல் வாய்ப்புகளை நம்முடைய உற்பத்தி பொருட்களுக்கும் சேவைகளுக்கும் மிகச்சரியாக பயன்படுத்தி கொள்வது நம்முடைய நிறுவனத்தினை வெற்றிகரமாக செய்வதற்கு மிகப்பெரிய பங்காற்றுகின்றது 4 நான்காவதாக போட்களின் வாயிலான சந்தைபடுத்துதலாகும் போட் என்பது இணையத்தில் தானியங்கு பணிகளை இயக்க வடிவமைக்கப்பட்டமிகச்சிறந்த மென்பொருளாகும். இயல்பிலேயே மீண்டும் மீண்டும் இயங்கக்கூடிய மற்றும் எளிமையான பணிகளைச் செய்வதற்குத் தெரிவுசெய்யப்படுகின்றன. எனவே, நாம் நம்முடைய உற்பத்தி பொருட்களுக்கும் சேவைகளுக்கும் ஆன செய்திகளை பரப்புவதில் ஆர்வம் கொண்டால், பல சாத்தியமான வாடிக்கையாளர்களையும் வாசகர்களையும் முடிந்தவரை கவருவதற்கு, இந்த போட்களை பயன்படுத்தி கொள்வது மிகச்சிறந்த வழியாகும்

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற

கருத்துகள் இல்லை: