சனி, 9 ஜூன், 2018

எந்தவொரு செயலையும் நமக்கு பயந்துகொண்டு மற்றவர்கள் விட்டுகொடுக்கின்றார்கள் என இறுமாந்திருந்திடாதே


ஒருசமயம் யானை ஒன்று சாலையில் நடந்து கொண்டிருந்தது வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டதால் அதனை கடந்துசெல்ல குறுகிய பாளம் ஒன்று கட்டப்பட்டிருந்தது அதில் ஒரேசமயத்தில் ஒருவர்மட்டுமே செல்லமுடியும் அதாவது எதிரும்புதிருமாக இருவர் கடந்து செல்லமுடியாது யாராவது ஒருவர் மட்டுமே கடந்து செல்லமுடியும் அந்த ஆற்றுபாளத்தை கடக்க அந்த யானை முயன்றபோது எதிரில் சேற்றில் உழலும் பன்றி ஒன்று அதேஆற்று பாளத்தின் மீது வந்துகொண்டிருந்தது அதை கண்டவுடன் யானையானது ஒதுங்கி நின்றுகொண்டு பன்றி பாளத்தை கடந்துவரும்வரை காத்திருந்தது பன்றி சென்றபின்னர் யானையானது ஆற்று பாளத்தை கடந்து செல்ல துவங்கியது உடன் அந்த பன்றியானது அருகிலிருந்த தன்னுடைய நண்பர்களிடம் "பார்த்தாயா நண்பா என்னை பார்த்தவுடன் அவ்வளவுபெரிய யானையே பயந்து கொண்டு நான் ஆற்றுப்பாளத்தை கடந்தவர வழிவிட்டது" என ஜம்பமாக பேசியது இதனை கேள்வியுற்ற யானையானது தன்னுடைய நண்பர்களிடம் "நண்பா நான் நினைத்திருந்தால் அந்த பன்றியை என்னுடைய கால்களால் மிதித்து நசுக்கிவிட்டு சென்றிருக்கமுடியும் ஆனால் நான்இப்போதுதான் குளித்து விட்டுவருகின்றேன் மீண்டும் நான் என்னுடைய கால்களை கழுவுவேண்டியிருக்கும் அதனால் தான் ஒதுங்கிவழிவிட்டேன்" என கூறியது எந்தவொரு செயலையும் நமக்கு பயந்துகொண்டு மற்றவர்கள் விட்டுகொடுக்கின்றார்கள் என இறுமாந்திருந்திடாதே அது நம்முடைய குறையினால் விட்டுகொடுத்திருக்கலாம் அதனை சரிசெய்திட முதலில் முயன்றிடுக

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...