வெள்ளி, 29 ஜூன், 2018

நம்முன் குறுக்கிடும் இதைபோன்ற எந்தவொரு தடையையும் நாம் தகர்த்தெறிந்தால் நம்முடையவாழ்க்கையைமேம்படுத்திடுவதற்காகன வாய்ப்பை நாம் பெறுவதற்கான நல்லசூழ்நிலைய நமக்கு கண்டிப்பாக கிடைத்திடும்


முன்னொரு காலத்தில், நாட்டின் அரசனொருவன் அந்தநாட்டின் வழியே செல்லும் சாலை ஒன்றில் பெரிய பாறாங்கல் ஒன்றினை வைத்து அதனை கடந்து செல்பவர்கள் என்ன செய்கின்றார்கள் என கவணித்து வந்தார் பொதுவாக அந்த சாலை வழியே சென்றவர்களுள் வியாபாரிகள் அந்த பாறங்கல்லை சுற்றிகொண்டே சென்றனர் பொதுமக்கள் பொதுமக்களனை-வரும் சாலையை சிரமம் இல்லாமல் நடந்து செல்வதற்கேற்ப இந்த சாலையைகூட சரியாக பராமரிக்கவில்லை எனஅந்த நாட்டு அரசனை திட்டிகொண்டே சென்றனர் ஆயினும் ஒருநாள் சாதாரணவிவசாயி ஒருவர் அருகிலிருந்த நகரத்தின் சந்தைக்கு தன்னுடைய நிலத்தில்விளைந்த காய்கறிகளை அந்த வழியே எடுத்துசென்று கொண்டிருக்கும்போது குறுக்கே பெரிய பாறாங்கல் இருப்பதை பார்த்தான் உடன் காய்கறிசுமையைஇறக்கி வைத்துவிட்டு அந்த பெரிய பாறங்கல்லை மிகவும் கடினமாக முயன்று புரட்டிதள்ளி அனைவரும் அந்த சாலையைஎளிதாக செல்லுமாறு செய்தான் பின்னர் கீழே இறக்கிவைத்த தன்னுடையகாய்கறி சுமையை தூக்கிஎடுத்து செல்லமுயன்றபோது அந்த விவசாயி புரட்டி தள்ளிய பெரிய பாறாங்கல்லிற்கு கீழே துனிப்பைஒன்று இருப்பதை கண்டான் அதனை எடுத்து பார்த்தபோது அதனுள் தங்க நாணயங்கள் இருந்ததை கண்ணுற்று இந்த பாறாங்கல்லை முயற்சிசெய்து தள்ளி பாதையை சரியாக செய்பவர்களுக்கு ஆனதக்க பரிசாகும் என எண்ணி மகிழ்ந்து எடுத்து சென்றான்

நம்முன் குறுக்கிடும் இதைபோன்ற எந்தவொரு தடையையும் நாம் தகர்த்தெறிந்தால் அதனை தொடர்ந்து நாம் நம்முடையவாழ்க்கையை மேம்படுத்திடுவதற்காகன நல்லதொரு வாய்ப்பை நாம் பெறுவதற்கான நல்லசூழ்நிலை நமக்கு கண்டிப்பாக கிடைத்திடும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...