புதன், 11 ஜூலை, 2018

நாம் என்ன கொடுக்கின்றோமோ அதுவே நமக்கு பன்மடங்காக திரும்ப கிடைக்கும்


நடுத்தர வயது மனிதனொருவன் ஒரு பாலைவனத்தில் வழிப்பயனம் செய்துகொண்டிருந்தான் அப்பயனத்தின்போது தன்னுடைய வீட்டிற்கு திரும்பி செல்லும் தன்னுடைய வழக்கமான பாதையை தவறவிட்டுவிட்டதால் சரியான பாதையை கண்டுபிடித்திடமுடியாமல் தவித்து கொண்டிருந்தான் இருந்தாலும் எப்படியும் கண்டுபிடித்துவிடலாம்என முழுநம்பிக்கையுடன் நடந்து கொண்டிருந்தான் ஆயினும் அவனிடம் கைவசம் இருந்த குடிநீர் இரண்டுநாட்களுக்கு முன்பே காலியாகவிட்டது அதனால் அவனால் நடக்ககூடமுடியாமல் மிகவும் சோர்வுற்று தள்ளாடி நடந்துகொண்டிருந்தான் இன்னும் சிறிதுநேரத்திற்குள் குடிப்பதற்கான தண்ணீர் கிடைக்கவில்லையெனில் தன்னுடைய வாழ்க்கை அதோடு முடிந்துவிட்டது என மிகஅவநம்பிக்கை அவனுக்கு மெல்ல ஏற்படலாயிற்றது அதனால் அந்தமனிதன் மெதுவாக ஊர்ந்துசெல்லஆரம்பித்தான் இந்நிலையில் எதிரில் குடிசையொன்று தென்பட ஆரம்பித்தது அதுஒருமாயைஅல்லது மாயைதோற்றமாககூட இருக்கலாம என அவநம்பிக்கையுடன் பார்வையிட்டான் ஆனால் என்ன ஆச்சரியம் உண்மையாகவே அங்கு ஒரு சிறுகுடிசை இருந்ததை கண்ணுற்றான் அதனை தொடர்ந்து தொய்வுற்ற அவனுடைய நம்பிக்கையை கைவிட்டு மிகமெதுவாக தன்னுடைய கடைசிதிறனைபயன்படுத்தி அந்த குடிசைஅருகில் நகர்ந்து சென்றான் தொடர்ந்து கண்டிப்பாக இந்த குடிசைக்குள் குடிப்பதற்கான தண்ணீர் இருக்கும் என அதிகநம்பிக்கையுடன் அந்த குடிசைக்குள் நுழைந்து தேடினான் அங்கு தரைக்கு அடியிலிருந்து கைகளால்இயக்கி தண்ணீரை பெறும் கைபம்ப் ஒன்று மட்டும் இருந்ததை பார்த்தவுடன் அவனுடைய இதயம் நம்பிக்கையுடன் மிகவேகமாக துடிக்கஆரம்பித்தது மிகவேகமாக அதிக நம்பிக்கையுடன் நகர்ந்து சென்று அந்த கைபம்ப்பினை இயக்கஆரம்பித்தான் ஆனால் அதனுடைய குழாயில் வெறும் காற்று வெளியேறும் சத்தம் மட்டுமே கேட்டதேயொழிய தண்ணீர் வரும்வழியை காணோம் அதனால் அடடா என்னவொரு ஏமாற்றம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என அவனுடைய மனம் சோர்வுற்றது தொடர்ந்து மனதில் ஏமாற்றமும் அவநம்பிக்கையும் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தது அதனால் அவனுடைய கடைசி நம்பிக்கையும் இழந்ததோடு மட்டுமல்லாமல் இதேடு நம்முடைய வாழ்க்கையும் முடிந்தது என விரக்தியுறஆரம்பித்தது இந்நிலையில் அவநம்பிக்கையுடன் அந்த குடிசையின் உட்பகுதியை சுற்றி பார்வையிட்டான் என்ன ஆச்சரியம் குடிசையின் ஓரத்தில் ஒருகுடுவையில் தண்ணீர் நிரப்பட்டு அதிலிருந்து தண்ணீர் ஆவியாகமல் இருப்பதற்காக நன்கு மூடப்பட்டிருந்தது உடன்அந்த தண்ணீரையாவது குடித்து உடல் சோர்வை போக்கிடலாம் என அதனை திறந்தபோது அதனோடு சிறுநூலால் கட்டப்பட்டதுண்டுதாள் ஒன்றிருந்ததை கண்ணுற்றான் சரிஅதில் என்னதான் இருக்கின்றது என பார்வையிட்டபோது "நண்பரேஇந்த குடுவையில் இருக்கும் தண்ணீரை இந்த கைபம்பில் ஊற்றி இயக்கினால் போதுமான தண்ணீர் கிடைக்கும் அதனை தொடர்ந்து உங்களுடைய தேவையை பூர்த்தி செய்பின்னர் மறக்காமல் இந்த குடுவையில் தண்ணீரை மீண்டும் நிரப்பி மூடிவைத்தால் உங்களைபோன்று வரும் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்" என்ற அறிவுரை இருந்ததை கண்ணுற்றவுடன் இந்த குடுவையில் இருக்கும் தண்ணீரை குடித்து தன்னுடைய உடல் சோர்வை போக்குவதா அல்லது அந்த தாளில் அறிவுறத்தியவாறு கைபம்பில் ஊற்றி கைபம்ப்பை இயக்குவதா அவ்வாறு கைபம்பை இயக்கிடும்போது தண்ணீர் வரவில்லையெனில் கைக்கு கிடைத்த கடைசி நம்பிக்கையான இந்த தண்ணீரும் இல்லாது தன்னுடைய உயிர்போய்விடுமே என அவனுடைய மனத்தில் ஊசலாட்டம் உருவானது இருந்தாலும் அந்த அறிவுரையை பின்பற்றிதான் பார்த்திடுவோமே எனஅவனுடைய கைகளிரண்டும் நடுங்கிட அந்த குடுவையிலிருந்த தண்ணீரை அந்த கைபம்பில் ஊற்றி நிரப்பியபின் மிகுதியிருந்த தன்னுடைய உடலின் கடைசி சக்தியை பயன்படுத்தி கைபம்ப்பை இயக்க ஆரம்பித்தான் உடன் தண்ணீர் மேலேறும் கடமுடவென்ற சத்தமும் அதனைதொடர்ந்து தண்ணீரானது அந்த குழாய்வழியாக தொபதொப வெனகொட்டவும் ஆரம்பித்தது உடன் தன்னுடை கைவசம் இருந்த பாத்திரத்தில் அந்தகுழாயிலிருந்து கொட்டிய தண்ணீரை பிடித்து தாகம் தீர குடித்தான் மேலும் தன்னுடைய பாத்திரத்தில்போதுமான தண்ணீரை நிரப்பினான் தொடர்ந்து அந்த குடுவையுடனிருந்த தாளில் அறிவுறுத்தியவாறு அந்த குடுவையையும் நிரப்பி நன்கு மூடியபின் அந்த தாளில் தொடர்ச்சியாக தன்னுடைய கைகளால் "இந்த கைபம்ப் நன்கு இயங்குகின்றது என்ற செய்தியையும் மனதில் கொள்ளுங்கள் அவநம்பிக்கை கொள்ளவேண்டாம்" என எழுதிவைத்துவிட்டு தன்னுடைய பயனத்தை தொடர்ந்தான் ஆம் நாம் என்ன கொடுக்கின்றோமோ அதுவே நமக்கு பன்மடங்காக திரும்ப கிடைக்கும் என்றசெய்தியை மனதில் கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...