திங்கள், 30 ஜூலை, 2018

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரும் ஏதோவொரு காரணத்திற்காக வே உயிர்வாழ்கின்றன


ஒரு நகரத்தில் அரசனொருவன் அரசாட்சி செய்துவந்தான் அவன் இந்த உலகில் தன்னைத்தவிர அனைத்து உயிரினங்களும் வாழ்வது தேவையற்றது என்ற இறுமாப்புடன் இருந்துவந்தான் ஒருமுறை தன்னுடைய நாட்டினை சுற்றி பார்வையிட்டு கொண்டே வந்தபோது கொஞ்சம் புழுக்களை பறவை ஒன்று தனக்குமுன்புறம் கீழே தவற விட்டதை பார்த்தான் இந்த புழு எதற்காக உயிர்வாழவேண்டும் என அதனை காலால் மிதித்து கொண்டு சென்றான் சிறிதுநாளில் அவனுக்கு கண்பார்வை மங்கலாகிவிட்டது அதனால் அந்த நகரத்தில்உள்ள அனைத்து மருத்துவர்களையும் அழைத்து அவர்களுக்கு ஏராளமான பணத்தையும் பொருட்களையும் வழங்கி தன்னுடைய பார்வை குறைபாட்டினை சரிசெய்திடுமாறு கோரினான் ஆயினும் யாராலும் அந்த அரசனுடைய பார்வை குறைபாட்டினை சரிசெய்திடமுடியவில்லை கடைசியாக ஒரு மருத்தவன் வந்து மாவு போன்ற பொருளை அந்த அரசினிடம் கொடுத்து தினமும் மூன்று வேளையும் சாப்பிட்டபின் அந்த மாவினையும் தவறாமல் விழுங்கி வருமாறு கூறியதை தொடர்ந்து அந்த அரசன் அந்த மருத்தவன் கூறியவாறு பின்பற்றி வந்தபின்னர் சிறிதுநாட்களில் அவனுடைய பார்வை குறைபாடு சரியாகி வழக்கமான பார்வைத்திறன் திரும்பிவிட்டது அதனால் அந்த மருத்தவனுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அந்த அரசன் வழங்கினான் அதனோடு தன்னுடைய பார்வை குறைபாட்டினை சரிசெய்வதற்காக வழங்கிய மாவுபோன்ற மருந்தினை எதிலிருந்து தயார்செய்தான் என அரசன் அந்த மருத்துவனிடம் வினவியபோது அந்த அரசன் அலட்சியாமாக இந்த புழு உயிர் வாழ்வதால் என்ன பயன் என தன்னுடைய கால்களால் மிதித்து நடந்து சென்றானே அந்த புழுவிலிருந்துதான் இவ்வாறான கண்பார்வை தெளிவாவதற்கான மருந்து தயார்செய்தேன் என மருத்துவன் பதில் கூறியதை தொடர்ந்த இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரும் ஏதோவொரு காரணத்திற்காக வே உயிர்வாழ்கின்றன என அறிந்து கொண்டதோடு தன்னுடைய இறுமாப்பினை கைவிட்டுவிட்டான்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...