ஞாயிறு, 5 ஜூலை, 2015

தம் கீழ் பணிபுரியும் பணியாளர்களின் உழைப்பை அவ்வப்போது அங்கீகரித்து பாராட்டி உற்சாக படுத்துக


ஒரு நிருவாக அலுவகத்தில் அலுவலக மேலாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது அதில் கலந்து கொண்ட இறுதியாக தேர்வு செய்யபடவுள்ள ஒரு இளைஞனை அதன் நிருவாக இயக்கநர் அந்த இளைஞனுடைய கல்வித்தகுதியை பார்த்து பரவாயில்லையே மிக நன்றாக படித்திருக்கின்றானே என மனதிற்குள் எண்ணியபடி "தம்பி ! நீ கல்லூரியில் படிப்பதற்காக அரசின் உதவித்தொகை ஏதேனும் பெற்றாயா?” என வினவினார் .உடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட இளைஞன் "இல்லை ஐயா! நான் கல்லூரியில் படிப்பதற்காக உதவித்தொகை எதுவும் பெறவில்லை.” என பதிலிறுத்தான் . "பரவாயில்லை; உன்னுடைய தந்தையே உன்னுடைய கல்விக்கான கட்டணத்தை செலுத்தினாரா ?” என நிருவாக இயக்கநர் வினவியபோது "இல்லை ஐயா! என்னுடைய தந்தை நான் சிறிய வயதாக இருக்கும் போதே இறந்துவி்ட்டார்; அதன் பின்னர் என்னுடைய தாய்தான் என்னை வளர்த்து வருகின்றார் தொடர்ந்து பள்ளியிலும் கல்லூரிகளிலும் நான் படிப்பதற்கான கல்வி கட்டணங்கள் அனைத்தும் செலுத்திவருகின்றார்." என அந்த இளைஞன் பதிலிறுத்தார்

அதன்பின்னர் நிருவாக இயக்கநர் " நிரம்ப மகிழ்ச்சி தம்பி உன்னுடைய தாய் எங்கு பணிசெய்கின்றார் ?” என வினவினார். உடன் அவ்விளைஞன் "என்னுடைய தாய் எந்த நிறுவனத்திலும் பணிசெய்யவில்லை ஆயினும் கிராமங்களில் விவசாய கூலிவேலையை செய்துவருகின்றார்" என கூறினான் அதனை தொடர்ந்து நிருவாக இயக்கநர் "உன்னுடைய கையை விரித்து காட்டு தம்பி!” என கோரியபோது உடன் இளைஞன் தன்னுடைய கைகளை திறந்து காண்பித்தான் அவனுடைய உள்ளங்கைகளும் கைவிரல்களும் நன்றாக மழமழவென இருந்தன அதன்பின்னர் நிருவாக இயக்கநர் "சரி தம்பி! உன்னுடைய தாய் செய்திடும் விவசாய வேலைக்கு நீஏதாவது உதவி செய்திருக்கின்றாயா?” என வினவியபோது உடன் "இல்லை ஐயா~ நான் என்னுடைய தாய்க்கு உதவிசெய்திட எப்போதும் அவர் அனுமதிக்கமாட்டார் அதற்கு பதிலாக நான் நன்றாக படிக்கவேண்டும் என்றே விரும்பினார்" என அந்த இளைஞன் பதிலிறுத்தான். பின்னர் நிருவாக இயக்கநர் "சரி தம்பி! இன்று வீட்டிற்கு சென்று உன்னுடைய தாயின் கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்துவிட்டு நாளை என்னை வந்து பார் " என விடைகூறி அனுப்பினார்.

அன்று இரவு அவ்விளைஞன் வீட்டிற்கு வந்தவுடன் தன்னுடைய தாயை அழைத்து சென்று அவருடைய கைகளை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்திடமுனைந்தான் அப்போது அவனுடைய தாயின் உள்ளங்கைகளும் விரல்களும் மேடுபள்ளமாக கரடுமுரடாக காய்ந்து இருந்ததை கண்ணுற்றதும் "அம்மா எனக்காக எவ்வளவு கடினமாக உழைத்துள்ளீர்கள்"” என கண்ணீர்விட்டு அழுதான்.அதன்பின்னர் தன்னுடைய தாயை விவசாய கூலிவேலைக்கு அனுப்புவதில்லை என முடிவுசெய்துகொண்டுஇரவு உறங்க சென்றான் மறுநாள் அவ்விளைஞன் அந்த நிருவாக இயக்கநரை சந்தித்தபோது அவர் "நேற்றிரவு வீட்டிற்கு சென்று நான் கூறிய செயலை செய்தபோது என்ன உணர்ந்தாய்" என வினவினார் உடன் அவ்விளஞன் "1என்னுடைய தாயின் கடினமான தன்னலமற்ற உழைப்பு இல்லையென்றால் நான் இந்தஅளவிற்கு படித்து இருக்கமுடியாது 2 வாழ்வில்எந்தவொரு பணியும் கடினமான செயலே 3 அவ்வாறு கடினமான பணிசெய்பவர்களின் பணியை உடனுக்குடன் பராட்டினால் சகபணியாளர் அல்லது சகமனிதற்களுடனான உறவு மேம்படும்" ஆகிவற்றை தான் அறிந்துகொண்டதாக கூறினான்

"ஆம் தம்பி இந்த உணர்வையே உன்னிடம் உருவாக வேண்டும் நான் எதிர்பார்த்தேன் பொதுவாக ஒருநிருவனத்தின் நிருவாகியாக பணிசெய்பவர் தனக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களின் பணிமுடிந்தவுடன் உடனுக்குடன் அவர்களை பராட்டி உற்சாக படுத்தினால் அடுத்தடுத்து அவர்களுக்கு வழங்கிடும் பணியை மேலும் உற்சாகத்துடன் பணிபுரிந்து வெற்றிகரமாக பணியை முடிப்பார்கள் மேலும் நிருவாகிக்கும் பணியாளர்களுக்கும் இடையேயான உறவும் வலுப்படும்" என அறிவுரைகூறியபின் அந்த இளைஞனுக்கு அவருடைய நிறுவனத்தில் பணிபுரிவதற்கான பணிஆணையை உடன் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...