நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு மனிதன் தன்னுடைய குடும்பத்துடன் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். அவருக்கு மிகவயதாகிவிட்டது, அவருடைய கடைசி நேரம் நெருங்கியபோது, அவர் தனது மகனை அழைத்து, "மகனே, நான் என் வாழ்நாள் முழுவதையும் உலகிற்கு என்னுடைய அனுபவத்தை கற்பித்தேன். தற்போது, என் கடைசி தருணங்களில் நான் உனக்கு முக்கியமான ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்." எனக்கூறினார். இதைக் கேட்ட மகன் தன் தந்தை கூறுவதை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். அவனுடைய தந்தை தொடர்ந்து, "ஆனால் அதற்கு முன் கரியும் சந்தனத்தையும் என்னிடம் கொண்டு வா" என்றார். மகன் இதை மிகவும் விசித்திரமாக உணர்ந்தான் ஆனால் அது அவனது தந்தையின் கட்டளை என்பதால், கரி, சந்தனம் ஆகியவற்றினை கொண்டு வர தங்களுடைய வீட்டு சமையலறைக்குச் சென்று அடுப்பில் எரிந்து அனைந்த பெரிய கரியை எடுத்து தன்னுடைய கையில் வைத்து கொண்டான் பின்னர் தனது வீட்டுத் தோட்டத்திற்குச் சென்றான், அங்கு ஒரு சிறிய சந்தன மரம் இருந்தது. ஒரு கையில் நிலக்கரியை வைத்திருந்ததால், மற்றொரு கையால் சந்தன மரத்தை உடைத்து மற்றொரு கையல் எடுத்து கொண்டு. இரண்டும் உடன் கிடைத்துவிட்டதால தனது தந்தையிடம் திரும்பிவந்தான. அவ்விரண்டையும் தன்னுடைய மகனின் கைகளில் பார்த்த அவனுடைய தந்தையானவர், தன்னுடைய மகனின் கைகளிலிருந்து இரண்டு பொருட்களையும் அங்கேயே கீழே தரையில் வைத்துவிடும்படி கேட்டுகொண்டார். உடன் அவருடைய மகனும் தன்னுடைய தந்தை கோியவாறுஅவ்விரண்டு பொருட்களையும் தரையில் வைத்துவிட்டான், பிறகு தன்னுடைய கைகளைக் கழுவ கிளம்பப் போனான். இதைப் பார்த்த அவனது தந்தை தன்னுடைய மகன் இரண்டு கைகளையும் கழுவ செல்வதைத் தடுத்து, " மகனே அப்புறம் உன்னுடைய கைகளை கழுவலாம் , முதலில் உன்னுடைய கைகளை என்னிடம் காட்டு" என்றார். மகன் தன் கைகளைக் தந்தையிடம் நீட்டினான், உடன் தந்தை தன் மகனின் கைகளைக் கைகளால் பிடித்துக்கொண்டார், பிறகு தன்னுடைய மகன் கரி வைத்திருந்த கையைகாண்பித்து, "மகனே, பார் .நீ கரியை வைத்திருந்ததால் இந்தக் கை கருப்பு நிறமாக மாறிவிட்டது. நீ அதை தூக்கி எறிந்த பிறகும், உன்னுடைய கையில் கருப்புநிறம் மறையாமல் இருந்து வருகின்றது. இது போன்றதுதான் தவறான நபர்களின் நட்பாகும். அவர்களுடன் தொடர்பில்இருப்பது துன்பததையும் கெட்டபெயரையும் அளிக்கும், அவர்களுடைய தொடர்பினை விட்டபிறகும் வாழ்நாள் முழுவதும் கெட்ட பெயரை எதிர்கொள்ள நேரிடும்.".என விரிவாக விளக்கமளித்தார் தொடர்ந்து அவர் சந்தனத்தை வைத்திருந்த மற்றொரு கையைப் பார்த்து, “மறுபுறம் நல்ல மனிதர்களின் கூட்டு இந்த சந்தன துண்டினை கையில் வைத்திருந்ததை போன்றது. அவர்களுடன் நட்புடன்இருந்தால், நிறைய அறிவைப் பெறுவாய், அதன்பிறகு அவர்களுடைய தொடர்பு இல்லாதபோதும் பிறகும், அவர்களின் நல்ல எண்ணங்களின் துனை எப்போதும் வாழ்நாள் முழுவதும் உன்னுடன் இருக்கும். எனவே, எப்போதும் நல்ல மனிதர்களின் கூட்டுறவில் இருந்திடுக". என அறிவுரை கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக