ஞாயிறு, 17 அக்டோபர், 2021

மூன்று உதைகளின்விதி

 


ஒரு வழக்கறிஞர் இருந்தார். வார விடுமுறைகளில் அவர் பொழுதுபோக்காக மீன்பிடித்தல், வேட்டையாடுதல் ஆகிய பணிகளை செய்வதற்கு விரும்புவார். ஒரு ஞாயிறு வாரவிடுமுறையின்போது அவர் தனது வழக்கமான பொழுது போக்கு பணிகளான மீன்பிடித்தல், வேட்டையாடுதல் ஆகிய பணிகளில் செலவிட முடிவு செய்தார். வேட்டையாடுதல் பணியெனில் நீண்ட தூரம் நடந்து காட்டிற்கு சென்றால்தான் அதனைசெய்திடமுடியும் என்பதால காட்டை அடைவதற்கு முன்ப அருகில் இருந்த ஏரியில் மீன்பிடித்தல் பணியை செய்திட முடிவு செய்தார். அன்று , அந்த ஏரியில் அவரால் ஒரு மீனைக் கூட பிடிக்க முடிய வில்லை. இன்றைய பொழதுபோக்கபணியில் ஒன்றும் கிடைக்க வில்லையே சரி வீட்டிற்கு திரும்பி சென்றிடுவோம் எனஅவர் வீடு திரும்ப முடிவு செய்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது முயல் ஒன்று அருகில நடமாடுவதைக் கண்டார் உடன் முதல் பொழுதுபோக்குபணியானவேட்டையாடுதலை செயல்படுத்த முடிவு செய்து அவர் முயலை சுட்டார் உடன் .சுடப்பட்ட முயலானது அருகிலிருந்த ஒரு தோட்டத்திற்க்குள் வேலியை தாண்டிகுதித்து ஓடிவிழுந்தது. தனை தொடர்ந்து அவ்ழக்கறிஞர் அந்த தோட்டத்திலும் அதைச் சுற்றிலும் யாராவது இருக்கின்றார்களா என விரைவாகப் பார்த்தார், யாரும் இல்லாததைக் கண்டார். அதனால் அவர் தோட்டத்திற்குள் வேலியை தாண்டி குதித்து, முயலை கையிலெடுத்து கொண்டு திரும்பவும் வேலியைத் தாண்டத் துவங்கியபோது, தோட்ட உரிமையாளர் அவரை தடுத்துவிட்டார் . உடன் வழக்கறிஞர் தான் முயலை சுட்டுவீழ்த்தியதால் அது தனக்குதான் உரியது எனக் கூறினார் தோட்ட உரிமையாளர் ந்த முயல் தன்னுடைய தோட்டத்தில் வளர்ந்தது தற்போது தன்னுடைய தோட்டத்தல் வீழ்ந்து கிடந்ததால் தனக்குதான் உரியது எனக் கூறினார் என்றவாறான வாதபிரதிவாதங்களுடன் தோட்ட உரிமையாளரும் வழக்கறிஞரும் அந்த முயல் தங்களுக்குமட்டுமே உரிமையானது எனக்கூறி வாதிட்டனர்.
வழக்கறிஞர் தோட்ட உரிமையாளரிடம். “ தோ பார்!, நான் ஒரு வழக்கறிஞர்! இது குறித்து உங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து என்னால்உங்களுக்கு கடுமையான தண்டனையை வாங்கி கொடுக்க முடியும்!”, என கோபமாக கூறினார்
தோட்ட உரிமையாளர் வழக்கறிஞருக்கு மிகச்சரியான பாடம் கற்பிக்க முடிவு செய்தார். தனால், "சரி ஐயா!. நான் ங்களை மூன்று முறை உதைப்பேன். தொடர்ந்து நீங்கள் என்னை மூன்று முறை உதைத்திடவேண்டும் இவ்வாறு நாம் இருவரும் ஒருவருக்கொருவர் மற்றவரை உதைப்பதற்கான உடல் திறன் உள்ளவரை யாராவது ஒருவர் என்னால் முடியாது எனநீங்கள் அல்லது நான் கைவிடக் கோரும் வரை மீண்டும் மீண்டும்இந்த உதைப்பதை தொடரலாம்! என்னால் முடியாது எனக்கூறுபவர் தோல்வியடைந்தவராவார் , வெற்றி மற்றவர் முயலுக்கு சொந்தக்காரர்!” எனக்கூறினார் .தோட்ட உரிமையாளரைவிட பெரிய உடல்வாகும் வலிமையாகவும் தான் இருப்பதால் இந்த போட்டியில் தன்னால் வெல்லமுடியும் என்ற நம்பிக்கை வழக்கறிஞருக்கு இருந்தது! அதனால் இந்த மூன்று உதைகளின் விதிக்கு ஒப்புக்கொண்டார்,
யார் முதலில் உதைக்க வேண்டும் என்ற பிரச்சினை எழுந்தபோது ஒரு நாணயத்தினை சுண்டி பூவா தலையா ஆகிய இரண்டில் ஒன்றினை கொண்டு பின்பற்றலாம் என முடிவுசெய்து அதன்படி தோட்ட உரிமையாளர் முதலில் உதைக்குமாறு முடிவானதால் அவர் வழக்கறிஞரை உதைக்க முடிவு செய்தார்! தொடர்ந்து தோட்ட உரிமையாளர் வழக்கறிஞரின் வயிறு, கால்கள் , முகம் ஆகிய பகுதிகளில் மூன்று உதைகளை கொடுத்தார்! அவ்வாறான மூன்று உதைகளால் ஏற்பட்ட உடல் வலியால் கதறினார், தன்னால் பதிலுக்கு தோட்ட உரிமையாளரை உதைக்க முடியாது நான் தோற்றுவிட்டேன் என வழக்கறிஞர் கதறி அழுதார் இருந்தபோதிலும் , தோட்ட உரிமையாளர், “நான் இந்த மூன்று உதைகளின் போட்டியை கைவிடுகிறேன்! நீங்களே வெற்றி பெற்றதாக நான் ஏற்றுக் கொள்கின்றேன் வேட்டையாடிய முயல் உங்களுடையது. இப்போது, முயலை நீங்கள் எடுத்து செல்லலாம் !” ன அனுமதித்தார்.
அறநெறி: யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், திறமை உடல்வலுவின் மீது அதிக நம்பிக்கை கொள்ளாதீர்கள். எதிர்பாராத இடத்தில் ஒரு பெரிய அடி ம்மை வீழ்த்தலாம்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...