ஒரு சந்தையில் வியாபாரி ஒருவர் வேறு இடங்களில் விற்பனை செய்வதற்கான பொருட்கள் ஏதேனும் கிடைக்குமா என சுற்றிபார்த்து கொண்டேவந்தார், அங்கு அவர் அவ்வாறு சுற்றிபார்த்து கொண்டேவரும்போது நல்ல இனத்தைசேர்ந்த குதிரை ஒன்றினை கண்டார், உடன் அதை வாங்க விரும்பினார், அதனால் அவர் அந்த குதிரையின் உரிமையாளரிடம் சென்று அதனுடைய விலையை கேட்டார். அந்த குதிரையின் உரிமையாளருடன் மிக நீண்ட பேரம் செய்தப் பிறகு,அவ்வணிகர் அந்தகுதிரையை நல்ல விலைக்கு வாங்கி தன்னுடைய வீட்டிற்கு கொண்டு சென்றார். தன்னுடைய வீட்டை அடைந்ததும், அவ்வியாபாரி தனது வேலைக்காரனை அழைத்து, அந்த குதிரையின் முதுகில் இருந்த சேணத்தை அகற்றும்படி கூறினார். அவருடைய வேலைக்காரன் குதிரையின் முதுகில் இருந்த சேணத்தை அகற்றும்போது,அந்த சேணத்தின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய வெல்வெட் பையை கண்டான். வேலைக்காரன் அந்த வெல்வெட் பையில் என்னதான் உள்ளது என பார்த்திடுவோமே என திறந்தபோது,அதில் விலைமதிப்பற்ற வைரங்களும், இரத்தினங்களும் இருப்பதைக் கண்டு மிகவும் உற்சாகத்தில் , "ஐயா, நீங்கள் ஒரு குதிரை மட்டும்தானே வாங்கினீர்கள் ஆனால் அதனோடு இலவச இணைப்பாக வேறு என்ன வந்துள்ளன என்று பாருங்கள்" ,எனக்கத்தினார் .சூரிய ஒளியில் பளபளப்பாக பிரகாசிக்குகின்ற, ஒளிருகின்ற வைரங்களையும் இரத்தினகற்களையும் பார்த்து வணிகரும் ஆச்சரியப்பட்டார். இருந்த போதிலும் அவ்வியாபாரி தன் வேலைக்காரனிடம், " நான் குதிரையை மட்டும்தான் பணத்தை கொடுத்து வாங்கினேன், இந்த வைரங்களுக்கும் இரத்தினகற்களுக்கும் நான் பணம் கொடுக்கவில்லை. அதனால்நான் இவைகளை உடனடியாக அந்த குதிரையின் உரிமையாளரிடம் திருப்பித் தர வேண்டும். " எனக்கூறினார் .வேலைக்காரன், "ஆனால் ஐயா, நீங்கள் இதை வைத்திருந்தாலும் யாருக்கும் தெரியாது." என பதி்ல் கூறினார் ஆனாலும் வியாபாரி தனது வேலைக்காரனின் பேச்சைக் கேட்கவில்லை, இரத்தினக் கற்களையும் வைரங்களையும் அந்த வெல்வெட் பையில் அப்படியே வைத்து எடுத்துகொண்டு , அந்த குதிரையின் உரிமையாளரைக் தேடிகண்டுபிடிக்க உடனடியாக சந்தையை அடைந்தார். அந்தவணிகர் மிகவிரைவாக, அவரைக் கண்டுபிடித்து அந்தப் பையை அவரிடம் ஒப்படைத்தார். அந்தப் பையைப் பார்த்தகுதிரையின் உரிமையாளர் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, “ஓஹோ அந்த குதிரைச் சேணத்தின் கீழிருந்த வெல்வெட் பையில் எனது விலைமதிப்பற்ற இரத்தினக்கற்களையும் வைரங்களையும் மறைத்து வைத்திருந்ததை மறந்துவிட்டேன். திருப்பி கொடுத்ததற்கு மிக்க நன்றி. இந்த பையில் இருந்து ஏதேனும் ஒரு வைரத்தை பரிசாக நீங்கள் தேர்வு செய்யலாம்." எனக்கூறினார். வணிகர் , "இதைத் திருப்பியதற்கு எனக்கு எந்த நன்றியும்பரிசும் தேவையில்லை. அநாமதேயமாக உள்ள அடுத்தவர்களின் பொருட்களை அதனுடை.ய உரிமையாளரிடம் அப்பொருளை ஒப்படைக்கவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் நான் என்னுடைய கடமையை செய்தேன்" என பதிலளித்தார்.. பரிசுப்பொருளை மறுத்தாலும், குதிரையின் உரிமையாளர் அவ்வணிகர் பரிசு பொருளை கண்டிப்பாக ஏற்கவேண்டும் எனமேலும் வலியுறுத்திக் கொண்டிருந்தார்! கடைசியில் வியாபாரி புன்னகைத்து, "உண்மையில், நான் பையை திரும்பக் கொண்டுவர முடிவு செய்தபோது, அதிலிருந்து இரண்டு விலையுயர்ந்த வைரங்களை நான் ஏற்கனவே எடுத்து வைத்துகொண்டேன்!" எனக்கூறினார் இதைக் கேட்டவுடன் குதிரையின் உரிமையாளர், மிகவும் கோபமடைந்தார், அதனால் உடனடியாக அந்த பையில் உள்ளஅனைத்தையும் தரையில் கொட்டி வைரங்களும் இரத்தினகற்களும் சரியாக உள்ளதாவென சரிபார்த்தபோது அந்த வெல்வெட் பையில் இருந்து இரத்தினகற்களோ அல்லது வைரங்களோ ஒன்று கூடகுறைய வில்லை . எனவேஅந்த குதிரை உரிமையாளர் அவ்வியாபாரியிடம் "நீங்கள் வைத்திருக்கும் மிகவும் விலைமதிப்பற்ற அந்த இரண்டு வைரங்கள்தான் எவை? ",என மிக ஆச்சரியத்துடன் கேட்டார். வியாபாரி , "நேர்மை, நேர்மையிலிருந்து கற்றல் ஆகிய இரண்டு வைரங்களைதான் நான்வைத்திருக்கின்றேன்", எனக்கூறினார், இந்த இரண்டு விலைமதிப்பற்ற வைரங்கள் உள்ள எவரும் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்பதைஅறிந்து கொள்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக